Published:Updated:

'சத்தியமூர்த்தி பவனில் தள்ளு முள்ளு; கூச்சல்' - காங்கிரஸ் தலைவர் தேர்தல்! | ஸ்பாட் விசிட்

சத்தியமூர்த்தி பவன்

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்த அந்தக் கட்சிக்கான தலைவர் தேர்தலில், முதலில் யார் வாக்களிப்பது என்பதில் லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

'சத்தியமூர்த்தி பவனில் தள்ளு முள்ளு; கூச்சல்' - காங்கிரஸ் தலைவர் தேர்தல்! | ஸ்பாட் விசிட்

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்த அந்தக் கட்சிக்கான தலைவர் தேர்தலில், முதலில் யார் வாக்களிப்பது என்பதில் லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

Published:Updated:
சத்தியமூர்த்தி பவன்

நாடு முழுவதும் அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூருக்கும், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கே மேலிடத்தின் ஆசி இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக இவர்கள்  இருவரும் ஒவ்வொரு மாநிலமாகச் சென்று கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு கோரினர்.

காங்கிரஸ் தலைவர் தேர்தல்
காங்கிரஸ் தலைவர் தேர்தல்

அதன் ஒரு பகுதியாகத்தான் கடந்த 6-ம் தேதி சசி தரூர் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். அப்போது அவரை வரவேற்க, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் யாரும் நேரடியாகச் செல்லவில்லை. சத்தியமூர்த்தி பவனில் மூத்த தலைவர்கள் யாரும் இல்லை. பின்னர், அங்கிருந்த ஒருசில நிர்வாகிகளிடம் மட்டுமே வாக்கு சேகரித்து விட்டு டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில், கடந்த 15-ம் தேதி மல்லிகார்ஜுன கார்கே, வாக்குச் சேகரிக்க தமிழகத்துக்கு வந்தார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி, கே.எஸ்.அழகிரி, கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.ஆர்.ராமசாமி, திருநாவுக்கரசர், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள், கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகிக்கும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இது விமர்சனத்தை ஏற்படுத்தியது. இவ்வாறான சூழ்நிலையில் நேற்று சத்தியமூர்த்தி பவனில் தேர்தல் நடந்தது.

தமிழகத்தில் 711 நிர்வாகிகள் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றிருக்கின்றனர். இவர்களில் ஏராளமானோர் வெளியூரிலிருந்து வர வேண்டும் என்பதால் சிலர் ஒருநாள் முன்னதாகவே சென்னைக்கு வந்து விட்டனர். தொடர்ந்து திட்டமிட்டபடி தேர்தல் காலை 10 மணிக்குத் தொடங்கியது. முன்னதாக அதிகாலை முதலே ஏராளமானோர் அங்கு குவிந்திருந்தனர். பிறகு ஒவ்வொருவரும் தங்களது அடையாள அட்டையைக் காண்பித்து வாக்களித்தனர்.

தள்ளு முள்ளு
தள்ளு முள்ளு

தள்ளு முள்ளு:

அப்போது ஒட்டுப்போடும் இடத்துக்குள் ஒரே நேரத்தில் ஏராளமானோர் செல்ல முயன்றனர். இதனால் அவர்களுக்குள் தள்ளு முள்ளு ஏற்பட்டது. சிலர் திடீரென கத்திக் கூச்சலிட்டனர். இதனால் அங்கு ஒருவிதமான பரபரப்பு தொற்றிக்கொண்டது. பிறகு மூத்த நிர்வாகிகள் அவர்களை சமாதானம் செய்ததையடுத்து கூச்சல் முடிவுக்கு வந்தது. முக்கியத் தலைவர்களில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் எம்.பி கே.வி.தங்கபாலு, முன்னாள் தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன், கார்த்தி சிதம்பரம் எம்.பி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் வாக்களித்தனர். இறுதியாக மாலை 4 மணி அளவில் தேர்தல் முடிவு பெற்றது.

அப்போது தமிழக தேர்தல் அதிகாரி பிரதாபானு ஷர்மா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இந்திய அளவில் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்திய ஒரே கமிட்டி. தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கமிட்டியினர் தங்களது கடமையைச் சரியாகச் செய்துள்ளனர்.

'சத்தியமூர்த்தி பவனில் தள்ளு முள்ளு; கூச்சல்' - காங்கிரஸ் தலைவர் தேர்தல்! | ஸ்பாட் விசிட்

என்னுடன் பணியாற்றிய துணைத் தேர்தல் அதிகாரிகளான நெய்யாற்றின்கரை சணல் மற்றும் அஞ்சலி நிம்பல்கர் சிறப்பாகச் செயல்பட்டனர். ஒரு மேற்பார்வையாளராகவும் , சரிபார்ப்பாளராகவும் இருந்தேன். தமிழகத்தைப் பொறுத்தவரை சத்தியமூர்த்தி பவனில் மொத்தம் 662 வாக்குகள் பதிவாகியுள்ளன. 93% வாக்கு பதிவு நடந்திருக்கிறது. இது சிறப்பான சதவிகிதம். மேலும் எந்தவித அசம்பாவிதம், விதிமீறல்கள் இன்றி தமிழகத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் நேர்மையாக, சிறப்பாக நடந்து முடிந்துள்ளது" என்றார்.

முன்னதாக கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டியில், "உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக கட்சி காங்கிரஸ். இன்றைக்கு காங்கிரஸ் அதன் அகில இந்தியத் தலைவர் தேர்தலை நடத்துகிறது. தமிழகத்தில் 711 வாக்குகள் இருக்கின்றன. அனைவரும் ஆர்வத்துடன் வாக்களிக்கின்றனர். அகில இந்திய கட்சிகளில் அதிக தேர்தலை நடத்திய கட்சி காங்கிரஸ் கட்சிதான். மகாத்மா காந்தி காலத்திலிருந்தே தேர்தல் நடந்துவருகிறது. சோனியா காந்திக்கு எதிராக வேட்பாளர்கள் நின்றார்கள். அவர்களெல்லாம் எதிரானவர்கள் என்ற பொருள் அல்ல. நான் தலைவராக இருக்கும்போது இந்தத் தேர்தல் நடைபெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 60 ஆண்டுக்காலமாக காங்கிரஸ் கட்சியில் இருக்கிறேன். 2=வது முறையாக வாக்களிக்கிறேன்" என்றார்.  

கார்த்தி சிதம்பரம் அளித்த பேட்டியில், "ஜனநாயக முறையில், அடுத்த தலைவர் யார் என்பதைக் கட்சியின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பார்கள். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும், சசி தரூர் என்னைப் பொறுத்தவரை திறமையான பேச்சாளர், எழுத்தாற்றல் மிக்கவர். கட்சிக்கு வலிமை சேர்க்கக்கூடியவர். அரசியலுக்கு அப்பாற்பட்டு நாடு முழுவதும் ஆதரவைப் பெற்றவர். நடுத்தர மக்களை அரவணைத்துச் செல்பவர் சசி தரூர். காங்கிரஸ் கட்சியினருக்கு அப்பாற்பட்டவர்கள் ஆதரவு கிடைக்க வேண்டுமென்றால் சசி தரூர் தலைவராக வர வேண்டும்.

'சத்தியமூர்த்தி பவனில் தள்ளு முள்ளு; கூச்சல்' - காங்கிரஸ் தலைவர் தேர்தல்! | ஸ்பாட் விசிட்

என்னுடைய முழு ஆதரவு அவருக்குத்தான். அவர் 23 புத்தகங்களை எழுதியிருக்கிறார். நன்றாகப் படித்து முன்னேறியவர். சசி தரூரின் ஆதரவைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள். வாக்கு எண்ணிக்கையின்போது, அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. புதிய தலைவராக யார் வந்தாலும், நேரு குடும்பத்தில் இருப்பவர்கள் காங்கிரஸ் கட்சியின் மானசிகத் தலைவராக இருப்பார்கள். நேரு குடும்பத்தின் வழிகாட்டுதலின்படிதான் செயல்படுவார்கள். காங்கிரஸ் கட்சியினர் மனதில் ராகுல் காந்திதான் என்றும் மானசிகத் தலைவராக இருப்பார்" என்றார்.