Published:Updated:

`இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல; ஜனவரியில் கட்சி தொடக்கம்!’ - ரஜினி அறிவிப்பு

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

வரும் ஜனவரி மாதம் புதிய கட்சி தொடங்கவிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார்.

`என்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து விரைவில் அறிவிப்பேன்’ என்று ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். கட்சி தொடங்குவது தொடர்பாக சில தினங்களுக்கு முன்பாக ராகவேந்திரா மண்டபத்தில் நிர்வாகிகளோடு ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.

கூட்டத்துக்குப் பின்னர், பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர். ``கூட்டத்தில் எனது கருத்தை நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறேன். நிர்வாகிகளும் தங்களது கருத்தைக் கூறியிருக்கிறார்கள். அரசியல் கட்சி தொடங்குவது குறித்து விரைவில் அறிவிப்பேன். எனது முடிவுக்கு நிர்வாகிகள் கட்டுப்படுவதாக உறுதி அளித்திருக்கிறார்கள்” என்று கூறினார்.

தமிழருவி மணியன் நேற்று ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியிருந்தார். அப்போது ரஜினி அரசியலுக்கு வருவாரா என்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழருவி மணியன், `அது எனக்குத் தெரியாது’’ என்று கூறியிருந்தார்.

அரசியல் கட்சி... ஜனவரியில் விவரங்கள் அறிவிப்பா? - எதிர்பார்ப்பில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்

இன்று ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜனவரியில் கட்சி ஆரம்பிக்கப்போவது குறித்த அறிவிப்பு டிசம்பர் 31-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருக்கிறார். மேலும், ``வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்.. அதிசயம்... நிகழும்!!!

ரஜினி
ரஜினி

#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல" என்றும் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும்வேளையில் ரஜினிகாந்த்தின் இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு