Election bannerElection banner
Published:Updated:

விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் புதுக்கட்சி?

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் புதுக்கட்சி?
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் புதுக்கட்சி?

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நாளை சென்னையில் புதுக்கட்சி ஆரம்பிக்கிறார் என்ற செய்தி சென்னை வட்டாரங்களில் இன்று முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.

நடிகர் விஜய்க்கும் அரசியலுக்கும் முடிச்சுப்போட்டு பல்வேறு செய்திகள் வருவது நமக்குப் புதிதல்ல. `ரஜினி அரசியலுக்கு வருகிறார்’ என்கிற செய்தி பன்னெடுங்காலமாக தமிழர் வாழ்வில் கலந்து வந்து, அது வற்றிப்போன வரை பார்த்த நமக்கு, அடுத்ததாக விஜய் - அரசியல் - கட்சி என்கிற செய்திகள் காதுக்குள் வந்து போயின. `இல்லை, எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை’ என்று நறுக்குத் தெறித்தாற்போல் சொல்லாமல், உம்மென்று இருக்க மாட்டேன் என்று மத்திய மாநில அரசுகளைச் சீண்டிப் பார்க்கும் வசனங்களை ஜம்மென்று சொல்லி, கம்மென்று இருந்த ரசிகர்களை உசுப்பேற்றிவிட்டுக்கொண்டிருப்பதில் யாருக்கும் சளைத்தவரில்லை விஜய்.

குட்டி பதினாறடி என்றால் தந்தை முப்பத்திரெண்டு என்கிற கணக்கில் எஸ்.ஏ.சந்திரசேகர் இந்த விஷயத்தில் டபுள் ஸ்பீடு பாய்கிறவர். அரசியல் பேட்டிகள், ஆசைகள் என்று தன் விருப்பத்தைப் பதிவு செய்துவருகிற அவர், நாளை சென்னையில் புதிய கட்சி ஆரம்பிக்கப்போகிறாராம்.

எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் விஜய்
எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் விஜய்

கட்சியின் பெயர், `காமராஜர் அண்ணா மக்கள் இயக்கம்.’ தமிழகத்தின் மூலை முடுக்கில் இருந்தெல்லாம் பல கோடிப் பேர் (அப்படித்தான் அவர்கள் சொல்கிறார்கள்) சென்னை வரவிருப்பதாகச் சொல்கிறார்கள். ஒருபக்கம் சசிகலா விலகல், தினகரன் திணறல், காங்கிரஸ் கதறல், வி.சி.க விசும்பல், பா.ம.க பதுங்கல், ம.தி.மு.க மருகல், சரத்குமார் சலம்பல், தமிழருவி விலகல், சீமான் சிணுங்கல் என்று அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் சூழலில் எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சி காட்டப்போகும் வாண வேடிக்கைகளுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொரு தமிழனும்.

ஆல் த பெஸ்ட் எஸ்.ஏ.சி!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு