Published:Updated:

இரண்டு சிறப்பு ரயில்கள்... 8,000 பேருடன் அயோத்தி கிளம்பிய சிவசேனா தலைவர் மகன்! - காரணம் இதுதான்!

ஆதித்ய தாக்கரே

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே 8 ஆயிரம் பேருடன் அயோத்திக்குப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.

இரண்டு சிறப்பு ரயில்கள்... 8,000 பேருடன் அயோத்தி கிளம்பிய சிவசேனா தலைவர் மகன்! - காரணம் இதுதான்!

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே 8 ஆயிரம் பேருடன் அயோத்திக்குப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.

Published:Updated:
ஆதித்ய தாக்கரே

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைத்திருப்பதால் இந்துத்துவா கொள்கையிலிருந்து விலகிவிட்டதாக பா.ஜ.க குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், தாங்கள் இந்துத்துவா கொள்கையிலிருந்து விலகவில்லை என்று அடிக்கடி உத்தவ் தாக்கரே கூறிவருகிறார். இந்துத்துவா கொள்கையைத் தாங்கள் பின்பற்றுவதை நிரூபிப்பதற்காக உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே 15-ம் தேதி (இன்று) அயோத்தி செல்வதாக அறிவித்திருந்தார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

இந்த நிலையில் ஆதித்ய தாக்கரே இன்று திட்டமிட்டபடி அயோத்தி புறப்பட்டுச் சென்றிருக்கிறார். இரண்டு சிறப்பு ரயில்களில் சிவசேனா கட்சித் தொண்டர்கள் அயோத்திக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர். இது தவிர ஏராளமான சிவசேனா தொண்டர்கள் பஸ், கார் மூலமும் அயோத்திக்குப் புறப்பட்டுச் சென்றிருக்கின்றனர். முழுக்க முழுக்க இது ஆன்மிகப் பயணம் என்று தெரிவித்திருக்கும் ஆதித்ய தாக்கரே, ராம் லல்லா கோயிலில் சர்யு ஆர்த்தியில் கலந்துகொள்கிறார். சிவசேனாவின் இந்துத்துவா செல்வாக்கை நிரூபிக்கும் விதமாக ஆதித்ய தாக்கரே சுமார் எட்டாயிரம் பேருடன் அயோத்திக்குச் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆதித்ய தாக்கரே இப்போதுதான் முதல் முறையாகத் தனியாகச் செல்கிறார்.

இது குறித்து சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவுத் அளித்த பேட்டியில், ``அயோத்திக்கும் சிவசேனாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எங்களுக்கு ராமர்மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. எங்களது கட்சித் தலைவர்கள் அடிக்கடி இங்கு வந்து செல்கின்றனர். உத்தவ் தாக்கரே நேரம் கிடைக்கும்போதெல்லாம் அயோத்திக்குச் செல்வார்" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆதித்ய தாக்கரே
ஆதித்ய தாக்கரே

அயோத்தியில் பாபர் மசூதியை இடிக்க சிவசேனா தொண்டர்கள் முக்கிய பங்காற்றினர். 2010-ம் ஆண்டு தசரா பொதுக்கூட்டத்தில் சிவசேனாவில் முறைப்படி இணைந்த ஆதித்ய தாக்கரே முதல் முறையாக எம்.எல்.ஏ-வாக மாறியதோடு, அமைச்சராகவும் இருக்கிறார். ஆதித்ய தாக்கரே கட்சிக்கு வந்த பிறகு சிவசேனா படிப்படியாக இந்துத்துவா கொள்கையில் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டதாக அரசியல் அரங்கில் பரவலான பேச்சு இருக்கிறது. கொரோனா காலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு முதுகுப் பகுதியில் ஆபரேஷன் செய்யப்பட்டிருந்தது. அப்போது முதல்வர் செய்யவேண்டிய பணிகளை ஆதித்ய தாக்கரே கவனித்து வந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism