Published:Updated:

டார்கெட் 2024... புதிய பாதையை நோக்கிப் பயணம் - நிதிஷ் குமார், தேஜஸ்வியுடன் ஆதித்ய தாக்கரே சந்திப்பு

தேஜஸ்வி, நிதிஷ் குமாருடன் ஆதித்ய தாக்கரே

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே, பீகாருக்குச் சென்று அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி ஆகியோரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் போன்றோர் தனித்தனியாக முயன்றுவருகின்றனர். நிதிஷ் குமாரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுவருகின்றன. பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா இப்போது எதிர்க்கட்சிகள் பக்கம் திரும்பியிருக்கிறது. இதனால் சிவசேனாவை பாஜக இரண்டாக உடைத்துவிட்டது. இந்த நிலையில் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே, தன் கட்சி நிர்வாகிகள் பிரியங்கா சதுர்வேதி, அனில் தேசாய் ஆகியோருடன் நேற்று மாலை பாட்னாவுக்குச் சென்றார். ஏற்கெனவே சமீபகாலமாக பீகார் துணை முதல்வர் தேஜஸ்வியுடன் ஆதித்ய தாக்கரே தொடர்பில் இருப்பதால் விமான நிலையத்திலிருந்து நேராக தேஜஸ்வியின் இல்லத்துக்கு ஆதித்ய தாக்கரே சென்றார்.

டார்கெட் 2024... புதிய பாதையை நோக்கிப் பயணம் - நிதிஷ் குமார், தேஜஸ்வியுடன் ஆதித்ய தாக்கரே சந்திப்பு

அவரை வரவேற்ற தேஜஸ்வி அவருக்குத் தன் தந்தை லாலு பிரசாத் யாதவ்வின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை வழங்கினார். பின்னர் இரு இளம் தலைவர்களும் நடப்பு அரசியல் நிலவரம் குறித்துப் பேசிவிட்டு, இருவரும் முதல்வர் நிதிஷ் குமாரைச் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்புக்குப் பிறகு நிருபர்களுக்குப் பேட்டியளித்த தேஜஸ்வி, ``எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்துப் பேசினோம். நான் விரைவில் மும்பைக்குச் சென்று உத்தவ் தாக்கரேயைச் சந்தித்துப் பேசவிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

பாஜக-வால் சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த இரு கட்சிகளும் மக்களவைத் தேர்தலில் பாஜக-வுக்கு மிகவும் முக்கியமானவை. ஒரே நேரத்தில் இரண்டு கூட்டணிக் கட்சிகள் பாஜக-விலிருந்து விலகியிருப்பது அந்தக் கட்சிக்குப் பின்னடைவாக அமைந்திருக்கிறது. தற்போது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன், ஒடிசா முதல்வர் பட்நாயக், அதிமுக உள்ளிட்ட சில மாநிலக் கட்சிகள் தேவைப்படும்போது பாஜக-வுக்கு ஆதரவு கொடுத்துவருகின்றன. இந்தக் கட்சிகள் எதிர்க்கட்சிகளின் அணியில் சேர மறுத்துவருவது குறிப்பிடத்தக்கது.