Published:Updated:

`பரிசு கொடுப்பதற்கு முன்பே புகார் தரலாமா?!' -தி.மு.க நிர்வாகிகள் மீது பாயும் அ.தி.மு.க மா.செ.

பொங்கல் பரிசு
பொங்கல் பரிசு

அ.தி.மு.க சார்பில் தலைவர், கவுன்சிலர், ஒன்றியச் செயலாளர் ஆகிய பதவிகளுக்கு வேட்பாளராக நிற்பவர்கள் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோரின் படங்கள் அடங்கிய 40,000 பைகளைத் தயார் செய்துள்ளனர்.

தமிழக அரசின் பொங்கல் பரிசு அடங்கிய பைகளில் அ.தி.மு.க விளம்பரம் இடம் பெற்றிருப்பதாகச் செங்கல்பட்டு தி.மு.க-வினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் செய்யவதற்கான மூலப் பொருள்கள் வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த தி.மு.கவினர்
மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த தி.மு.கவினர்

`இந்தப் பரிசுகள் அனைத்தும் 9-ம் தேதி தொடங்கி 13-ம் தேதிக்குள் பயனாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். எவ்விதப் புகாருக்கும் இடமளிக்காத வகையில் கண்காணிப்புக் குழுக்களை அமைத்து இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’ எனவும் தமிழக அரசின் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பொங்கல் பரிசு கொடுப்பதற்கு முன்பே ஆளும் கட்சியின் விளம்பரம் அச்சிட்ட பைகளில் பொங்கல் பரிசு கொடுக்க இருப்பதாகக் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய தி.மு.க-வினர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸிடம் புகார் அளித்திருக்கிறார்கள். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

`கட்டுக்கட்டாகப் பணம், 100 கிலோ ஆப்பிள் குவியல்!’ -மின்வாரிய அதிகாரியைச் சிக்கவைத்த புத்தாண்டு பரிசு

செங்கல்பட்டு தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சியிலும் அ.தி.மு.க சார்பில் தலைவர், கவுன்சிலர், ஒன்றியச் செயலாளர் ஆகிய பதவிகளுக்கு வேட்பாளராக நிற்பவர்கள் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோரின் படங்கள் அடங்கிய 40,000 பைகளைத் தயார் செய்திருக்கிறார்கள்.

தமிழக அரசின் பொங்கல் பரிசுகளை இந்தப் பைகளில் கொடுப்பதற்காகத் திட்டமிட்டுள்ளனர். மாவட்டம் பிரிக்கப்பட்டதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க-வினரின் படங்கள் அடங்கிய பைகள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்வதைத் தடை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரைச் சந்தித்துப் புகார் கொடுத்திருக்கிறோம்” என்கிறார்கள்.

தி.மு.கவினர் புகார்
தி.மு.கவினர் புகார்

இதுகுறித்து அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் எஸ்.ஆறுமுகத்திடம் பேசினோம். ``பொங்கல் பரிசு கொடுப்பதற்கு முன்பே இப்படி புகார் சொன்னால் என்ன சொல்வது.. இந்தப் பையை யார் வேண்டுமானாலும் அச்சிடலாம். அரசின் விதிகளை மீறி நாங்கள் எதையும் செய்ய மாட்டோம். முதல்வர் கொடுத்தாலே எங்கள் ஆட்சியில் கொடுக்கப்பட்டதுதான். தனியாக நாங்கள் எதற்கு விளம்பரம் தேடப்போகிறோம்?” என்றார் கொதிப்புடன்.

அடுத்த கட்டுரைக்கு