Published:Updated:

'கழற்றிவிட்டு' களமாடும் அ.தி.மு.க... 'தாராளம்' காட்டாத தி.மு.க... - உள்ளாட்சி கூட்டணி உள்குத்து!

30 சதவிகிதம் கேட்டால்தான் தி.மு.க தரப்பில் 20 சதவிகிதமாவது தருவார்கள் என்று சத்தியமூர்த்தி பவனில் பேசியிருக்கிறார்கள்

உள்ளாட்சி
உள்ளாட்சி

"உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே கூட்டணிகளுக்குள் உள்குத்து தொடங்கிவிடும்போலவே?"

"உண்மைதான். முதலில் ஆளுங்கட்சியைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன். அ.தி.மு.க கூட்டணியில் கோவை, நாகர்கோவில் என இரண்டு மேயர் சீட் வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் பா.ஜ.க சார்பில் இல.கணேசன் தரப்பு கோரிக்கை வைத்திருக்கிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்போ, 'இந்தத் தேர்தலில் நீங்கள் நின்றால் மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள். பொறுமையாக இருங்கள்' என்று சொல்லிவிட்டது. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/37lbCpa

பதிலுக்கு, 'மோடி வந்து சென்ற பிறகு சமூக வலைதளங்களில் எங்களுக்கு ஆதரவு பெருகியிருக்கிறது. இரண்டு சீட் கட்டாயம் வேண்டும்' என்று அடம்பிடிக்க, அதை அ.தி.மு.க தரப்பு கண்டுகொள்ளவில்லையாம். இதனால், தனித்தே உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்க பா.ஜ.க முடிவுசெய்திருக்கிறது."

"ம்!"

ஏற்கெனவே ஆட்சியில் இல்லாமல் ஒன்பது வருடங்கள் ஓடிவிட்டன. உள்ளாட்சித் தேர்தலிலாவது நமது கட்சியினரைக் களத்தில் இறக்கினால்தான் சட்டமன்றத் தேர்தலில் உற்சாகமாக இருப்பார்கள்.

"தே.மு.தி.க-வையும் கழற்றிவிடலாமா என்று அ.தி.மு.க தரப்பில் ஆலோசனை நடக்கிறது. அவர்கள் தரப்பில் வைக்கப்படும் டிமாண்டுகள் அதிகமாக இருப்பதால், அவர்கள் இல்லாமலேயே தேர்தலைச் சந்திக்கலாமா என்ற அளவுக்கு அ.தி.மு.க தரப்பு யோசிக்க ஆரம்பித்துவிட்டது. பிரேமலதாவின் கறாரே இந்த யோசனைக்குக் காரணம் என்கிறார்கள். கட்சியின் ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வத்திடம் ஆலோசித்த பிறகு இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படலாம்."

"தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”

"30 சதவிகிதம் கேட்டால்தான் தி.மு.க தரப்பில் 20 சதவிகிதமாவது தருவார்கள் என்று சத்தியமூர்த்தி பவனில் பேசியிருக்கிறார்கள். கரூர் எம்.பி-யான ஜோதிமணி, 'சென்னையில் சீட் வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் மாவட்டவாரியாகவும் கவனம் செலுத்துங்கள்' என்று சொல்லியிருக்கிறார். திருநாவுக்கரசர் தரப்பினரோ, 'அழுத்தம் கொடுத்தால்தான் தி.மு.க நம்மிடம் இறங்கிவருவார்கள்' என்று ஐடியா கொடுத்தார்களாம்.

ஒருவேளை தி.மு.க இறங்கி வராவிட்டால் கட்சித் தலைவர் சோனியா காந்தி மூலம் அழுத்தம் கொடுக்கவைப்போம் என்றும் பேசியிருக்கிறார்கள். ம.தி.மு.க தரப்பில் ஈரோடு மேயர் சீட்டுக்குக் குறிவைக்கிறார்கள். இரண்டு கம்யூனிஸ்ட்களுக்கும் ஈரோடு பக்கம்தான் குறி. ஆனால், 'தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு இதைப் பற்றி பேசிக்கொள்ளலாம்' என்று தி.மு.க தலைமை சொல்லிவிட்டதாம்.

'கழற்றிவிட்டு' களமாடும் அ.தி.மு.க... 'தாராளம்' காட்டாத தி.மு.க... - உள்ளாட்சி கூட்டணி உள்குத்து!

'ஏற்கெனவே ஆட்சியில் இல்லாமல் ஒன்பது வருடங்கள் ஓடிவிட்டன. உள்ளாட்சித் தேர்தலிலாவது நமது கட்சியினரைக் களத்தில் இறக்கினால்தான் சட்டமன்றத் தேர்தலில் உற்சாகமாக இருப்பார்கள். அந்த இடங்களையும் கூட்டணிக் கட்சிகளுக்குத் தாரைவார்த்தால் உடன்பிறப்புகள் கடுப்பாகிவிடுவார்கள் என்று யோசிக்கிறதாம் தி.மு.க தலைமை."

- திருமாவளவன் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு பின்னணி, ரஜினி - கமல் அரசியல் அதிர்வுகள், விஜய்யின் எதிர்கால அரசியல், சிதம்பரம் விவகாரம் நிலை... இவைகுறித்த கழுகார் அடுக்கிய சிறப்புத் தகவல்களை ஜூனியர் விகடன் இதழில் விரிவாக வாசிக்க > மிஸ்டர் கழுகு: திசை மாறும் திருமா... தி.மு.க கூட்டணியில் மாற்றம் வருமா? https://www.vikatan.com/government-and-politics/politics/mister-kazhugu-politics-and-current-affairs-thirumavalavan-nov-24

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo