Published:Updated:

தவறான வழிகாட்டுதலால் சாக்கடையில் சிக்கிக்கொண்டேன்!

புகழேந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
புகழேந்தி

வருத்தம் தெரிவிக்கும் புகழேந்தி

சமீபத்தில் சென்னை ஆர்.கே.நகரில் அ.தி.மு.க சார்பாக எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய பெங்களூரு புகழேந்தி, ‘டி.டி.வி.தினகரனின் 20 ரூபாய் மர்மத்தை வெளியிடுவேன்’ என்று பரபரப்பைக் கிளப்பினார். புகழேந்தியிடம் அதுதொடர்பாக சில கேள்விகளை முன்வைத்தோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“டி.டி.வி.தினகரனுடன் இருந்தபோது எடப்பாடி பழனிசாமியின் அரசை ஏகத்துக்கும் விமர்சித்தீர்கள். இப்போது எடப்பாடி பழனிசாமியின் புகழ்பாடத் தொடங்கி யிருக்கிறீர்களே. உங்களை எப்படி அ.தி.மு.க தொண்டர்கள் நம்புவார்கள்?”

“நானே அ.தி.மு.க தொண்டன் என்ற உணர்வுடன்தான் இருக்கிறேன். இடையில் சிலரின் தவறான வழிகாட்டுதல்களால் சாக்கடைக்குள் சிக்கிக்கொண்டேன் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். அதை உணர்ந்து இப்போது புனிதமான ஜீவநதியான அ.தி.மு.க-வில் இணைந்துவிட்டேன். கழகத்திலிருந்து பிரிந்து சென்றதற்காக ஆர்.கே.நகர் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க தொண்டர்களிடம் வருத்தம் தெரிவித்துவிட்டேன்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘20 ரூபாய் டோக்கன் விவகாரத்தில் அப்படி என்னதான் நடந்தது?’’

“செந்தில் பாலாஜிதான் ‘20 ரூபாய் டோக்கன்’ ஐடியாவை தினகரனுக்குக் கொடுத்துள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ-வான வெற்றிவேல், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆகியோரும் இதில் தினகரனுக்கு உடந்தையாகச் செயல்பட்டுள்ளனர்.

டி. டி. வி. தினகரன்,  புகழேந்தி
டி. டி. வி. தினகரன், புகழேந்தி

அது மிகப்பெரிய மோசடி. ஆர்.கே.நகர் மக்கள், தினகரனை நம்பி ஏமாந்துவிட்டனர். அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் இதே டெக்னிக்கைத்தான் செந்தில் பாலாஜி பயன்படுத்தினார். நிலம் தருவதாக செந்தில் பாலாஜி அளித்த வாக்குறுதியை நம்பி, அரவக்குறிச்சி மக்கள் அவரை வெற்றி பெறவைத்து விட்டனர். இதுபோன்ற மோசடியான ஐடியாக்களைக் கொடுப்பதில் செந்தில் பாலாஜி திறமைசாலி.”

“இவ்வளவு நாள் அமைதியாக இருந்துவிட்டு இப்போது இதைச் சொல்வதன் நோக்கம் என்ன?”

“மக்கள் உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் நோக்கம். தினகரனுக்காக தங்கள் பதவியை இழந்த 18 எம்.எல்.ஏ-க்களில் பெரும்பாலானோரின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அந்தப் பாவத்துக்குப் பிராயச்சித்த மாக, தினகரன் தன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலைச் சந்திக்க வேண்டும். அப்படிப் போட்டியிட்டால் அவரால் ஆயிரம் ஓட்டுகள்கூட வாங்க முடியாது.’’

‘‘சசிகலா, இளவரசி ஆகியோரின் வழக்குகளுக்கான உதவிகளை நீங்கள்தான் நீண்டகாலமாகச் செய்துவந்தீர்கள் என்று கூறப்படுகிறது, அது தொடருமா?’’

“ஜெயலலிதா மரணப்படுக்கையில் இருந்த கடைசி மூன்று நாள்களில் கொஞ்சம்கூட இரக்கமில்லாமல் 1,700 கோடி ரூபாய்க்கு சொத்துகளை வாங்கிக் குவித்திருக்கின்றனர் சசிகலா குடும்பத்தினர். இது எவ்வளவு மோசமான செயல்?! இனிமேல் சசிகலா வழக்கு விவகாரத்தில் நான் தலையிட மாட்டேன்.”

புகழேந்தி
புகழேந்தி

“ ‘அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க ஆட்சியைப் பிடிக்கும்’ என்று தினகரன் கூறியுள்ளாரே?”

“அவரை நம்பிச் சென்றவர்களில் பாதி பேர் அ.தி.மு.க-வுக்கும், பாதி பேர் தி.மு.க-வுக்கும் சென்றுவிட்டனர். வெற்றிவேல், பழனியப்பன் போன்ற சிலர்தான் இப்போது அவருடன் இருக்கின்றனர். விரைவில் அவர்களும் அங்கிருந்து வந்துவிடுவார்கள். இறுதியில் தினகரன் மட்டும்தான் இருப்பார். அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரை அவருடைய கட்சி இருக்குமா என்று பாருங்கள். ஆட்சியைப் பிடிப்பதைப் பற்றி பிறகு யோசிக்கலாம்.”

‘‘அ.தி.மு.க-வில் உங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதா?’’

‘‘எனக்கு பணமோ பதவியோ முக்கியமல்ல. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் தொண்டர்கள் எடப்பாடியாரின் பின்னால் இருக்கிறார்கள். அதற்காகத்தான் நான் மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்தேன். உடனே ஆர்.கே.நகரிலும் முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்திலும் உரையாற்ற அனுமதிக்கப் பட்டேன். அதைவிட எனக்கு வேறு என்ன வெகுமதி வேண்டும்? எடப்பாடியாரின் நலத்திட்டங்களை மக்களிடம் பரப்புரை செய்வதே என் பணி.”