Published:Updated:

`ஊராட்சி மன்றத் தலைவியின் கணவரால் உயிருக்கு ஆபத்து; கோட்டாட்சியரிடம் ஒன்றியக்குழுத் தலைவர் புகார்!'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உயிருக்கு ஆபத்து - ஒன்றியகுழுத் தலைவர் புகார்!
உயிருக்கு ஆபத்து - ஒன்றியகுழுத் தலைவர் புகார்!

ஈகுவார்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக, கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழுத் தலைவர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சியில் கடந்த 2-ம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. தனக்கு அழைப்பு விடுக்காதது குறித்து, அதிமுக-வைச் சேர்ந்த கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழுத் தலைவர் சிவகுமார் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார். அப்போது, திமுக-வைச் சேர்ந்த ஈகுவார்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவி உஷாவின் கணவர் ஸ்ரீதரும் அவருடைய ஆதரவாளர்களும் சிவகுமாரைத் தாக்கி கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக-வினர், ஒன்றியக்குழுத் தலைவர் சிவகுமாரைத் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி சர்ச்சையைக் கிளப்பியது.

கிராமசபைக் கூட்டத்தில் கைகலப்பு
கிராமசபைக் கூட்டத்தில் கைகலப்பு

இரு தரப்பு மோதலால் கிராமசபைக் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஒன்றியக்குழுத் தலைவர் சிவகுமார் தன்னைத் தாக்கிய ஊராட்சி ஸ்ரீதர் மீதும் அவருடைய ஆதரவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாதியிலேயே நிறுத்தப்பட்ட கிராமசபைக் கூட்டத்தை மீண்டும் நடத்த வேண்டும் என்றும் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருக்கிறார்.

சிவகுமார் தனது புகார் மனுவில், ``கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஈகுவார்பாளையம் ஊராட்சியில் கடந்த 2-ம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் கிராமசபைக் கூட்டத்துக்கு முறைப்படி எனக்கு அழைப்பு விடுத்திருக்க வேண்டும். ஆனால், திமுக-வைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவி உஷா, வேண்டுமென்றே திட்டமிட்டு என்னைக் கூட்டத்துக்கு அழைக்காமல் புறக்கணித்தார். அது குறித்து நான் கேள்வி எழுப்பியபோது, என்னுடைய சாதியைக் குறிப்பிட்டு என்னை உஷா அவதூறாக ஒருமையில் திட்டினார். பதிலுக்கு நானும் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தேன். அப்போது, உஷாவின் கணவர் ஸ்ரீதர் கூட்டத்திலிருந்த திமுக-வினருடன் என்னைப் பாய்ந்து மார்பில் தாக்கிக் கீழே தள்ளினார். அவர்கள் தொடர்ந்து, என்னைத் தாக்க முயன்றபோது எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தடுத்து என்னைக் காப்பாற்றி அழைத்துச் சென்றனர்.

புகார் மனு
புகார் மனு
உயிருக்கு ஆபத்து - ஒன்றியகுழுத் தலைவர் புகார்!
உயிருக்கு ஆபத்து - ஒன்றியகுழுத் தலைவர் புகார்!

திமுக-வினரின் இந்தக் கொலைவெறித் தாக்குதலால் கிராமசபைக் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, கிராம மக்கள் தங்கள் கோரிக்கைகளைச் சபையில் வைக்க முடியாமல் போனது. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக உடனடியாக நான் பாதிரிவேடு காவல் நிலையத்தில் ஊராட்சி மன்றத் தலைவி உஷா், அவரின் கணவர் ஸ்ரீதர் ஆகியோர்மீது புகார் அளித்தேன். ஆனால், போலீஸார் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுக்கொண்டு என் புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மெத்தனமாக இருந்துவருகின்றனர். ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் ஸ்ரீதர், நான் ஒன்றியக்குழு தலைவராகப் பொறுப்பேற்ற நாள் முதற்கொண்டு இது நாள் வரை என்னை ஊராட்சிப் பணிகளை மேற்கொள்ள விடாமல் தடுத்துக்கொண்டும், சாதியைக் குறிப்பிட்டு அவதூறு பரப்பியும் வருகிறார். ஆளுங்கட்சி என்று கூறிக்கொண்டு அராஜகம் செய்துவரும் ஸ்ரீதரால், என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை இருக்கிறது. எனவே, ஸ்ரீதர்மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டு கிராமசபைக் கூட்டத்தை மீண்டும் நடத்த வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சிவகுமாரின் புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட பொன்னேரி வருவாய்க் கோட்டாட்சியர் செல்வம், விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார். அதையடுத்து, சிவகுமாரும் அவருடைய ஆதரவாளர்களூம் அங்கிருந்து கலைந்து சென்றனர். இரு தரப்பு மோதலால், ஈகுவார்பாளையம் ஊராட்சியில் பதற்றநிலை நிலவுகிறது.

`திமுக - அதிமுகவினர் மோதல்; கைகலப்பில் முடிந்த கிராமசபைக் கூட்டம்!' - நடந்தது என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு