Published:Updated:

``அருமை அண்ணன்’ எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர்!’ - ஓ.பி.எஸ் அறிவிப்பு #LiveUpdates

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் குறித்த செய்திகளின் தொகுப்பு..!

07 Oct 2020 11 AM

சென்னை மெரினாவிலுள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் மரியாதை!

சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் மரியாதை! #OPS #EPS #ADMK படங்கள் : வி. ஸ்ரீனிவாசலு

Posted by Junior Vikatan on Tuesday, October 6, 2020
07 Oct 2020 11 AM

சென்னை மெரினாவிலுள்ள ஜெயலலிதா சமாதியில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்!

07 Oct 2020 11 AM

அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு புகைப்படத் தொகுப்பு..!

07 Oct 2020 10 AM

அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி!

அ.தி.மு.க - பழனிசாமி
அ.தி.மு.க - பழனிசாமி

தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ``செயற்குழுவில் முடிவெடுத்தப்படி வழிக்காட்டுதல்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. குழுவில் இடம்பிடித்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த இயக்கம் மக்கள் இயக்கமாக இருக்க வேண்டும். 2020-21 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் இணை ஒருங்கிணைப்பாளர் அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்” என்றார்.

07 Oct 2020 9 AM

வழிக்காட்டுதல்குழு அமைப்பு!

அ.தி.மு.க அலுவலகம்
அ.தி.மு.க அலுவலகம்

வழிக்காட்டுதல்குழு குறித்த அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய முதல்வர் பழனிசாமி, ``திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, காமராஜ், ஜெயக்குமார், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிராபகர், முன்னாள் அமைச்சர் மோகன், கோபாலகிருஷ்ணன், சி.வி.சண்முகம், மாணிக்கம் ஆகிய 11 பேர் வழிக்காட்டுதல்குழுவில் இடம்பிடித்திருக்கிறார்கள்” என்றார்.

07 Oct 2020 9 AM

தொடங்கியது செய்தியாளர்கள் சந்திப்பு!

அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை துணை முதல்வர் பன்னீர்செல்வம் அறிவிக்கிறார். 11 பேர் கொண்ட வழிக்காட்டுதல்குழு குறித்த அறிவிப்பை முதல்வர் பழனிசாமி அறிவிக்கிறார்.

07 Oct 2020 9 AM

அ.தி.மு.க அலுவலகத்தில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்!

அ.தி.மு.க தலைமை அலுவலகம்
அ.தி.மு.க தலைமை அலுவலகம்

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள் வந்து சேர்ந்துவிட்ட நிலையில் தற்போது முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் வந்து சேர்ந்துவிட்டனர். இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழும் என்று கூறப்படுகிறது.

07 Oct 2020 9 AM

அ.தி.மு.க அலுவலகம் புறப்பட்டார் ஓ.பி.எஸ்!

பன்னீர் செல்வம்
பன்னீர் செல்வம்

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள் வரிசையாக வந்து கொண்டு இருக்கிறார்கள். கட்சி தொண்டர்கள் தொடர்ந்து குவிந்து வரும் நிலையில், துணை முதல்வர் பன்னீர் செல்வம் தனது வீட்டில் இருந்து தலைமை அலுவலகம் புறப்பட்டார். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அவரே முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

துணை முதல்வர் பன்னீர் செல்வம் புறப்பட்ட சிறிது நேரத்தில் க்ரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து முதல்வர் பழனிசாமியும் அ.தி.மு.க அலுவலகம் புறப்பட்டார்.

07 Oct 2020 9 AM

நள்ளிரவை தாண்டி நீண்ட பேச்சுவார்த்தை....!

பழனிசாமி, பன்னீர் செல்வம்
பழனிசாமி, பன்னீர் செல்வம்

ஒரே நேரத்தில் வழிகாட்டு குழு அறிவிப்பையும், முதல்வர் வேட்பாளர் எடப்பாடி என்கிற அறிவிப்பையும் வெளியிடப் பன்னீருக்கு விருப்பம் இல்லை. அதனாலே நேற்று நள்ளிரவு வரை இந்த பேச்சுவார்த்தை நீண்டதற்குக் காரணம் என்கிறார்கள். முழு விவரத்தையும் கீழே உள்ள லிங்கில் படிக்கலாம்...!

`மூன்று குழுக்கள் அமைப்பு...  முதல்வர் அறிவிப்பு!' - நள்ளிரவில் பன்னீர் எடுத்த அஸ்திரம்!
07 Oct 2020 9 AM

9.30 - 10.00 மணிக்குள் அறிவிப்பு!

அதிமுக தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகம்
விகடன்

அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு இன்று காலை 9.30 முதல் 10-மணிக்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் சென்னை தலைமை அலுவலகத்துக்கு வந்து கூட்டாக இது தொடர்பாக பேட்டி அளிக்க உள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

07 Oct 2020 9 AM

தனித்தனியே ஆலோசனை!

பன்னீர் செல்வம் - பழனிசாமி
பன்னீர் செல்வம் - பழனிசாமி

அ.தி.மு.க கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்? இந்த கேள்விக்கு பதில் இன்று காலை தெரிந்து விடும். கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்த அரசியல் விவாதங்கள், இன்று காலை வெளியாகும் அறிவிப்புடன் முடிவுக்கு வரும். இன்று காலை அறிவிப்பு வெளியாகும் நிலையில், விடிய விடிய முதல்வரும் துணை முதல்வரும் தங்களின் ஆதரவாளர்களுடன தனித்தனியே ஆலோசனை நடத்தினர். இன்று காலையும் இந்த விவாதம் தொடர்ந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார் இன்று காலை சந்தித்து பேசினர். அதே போன்று தனது ஆதரவாளர்களுடன் தேனி மாவட்ட நிர்வாகிகள் உடனும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்துகிறார்.

அடுத்த கட்டுரைக்கு