Published:Updated:

திருச்செந்தூர்: சசிகலாவுடன் ஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜா சந்திப்பு!

ஓ.ராஜா - சசிகலா

ஓ.ராஜா, சசிகலா கோயிலுக்குக் கிளம்பவிருந்த நேரத்தில் அவரை ஹோட்டலுக்குச் சென்று சந்தித்துப் பேசினார்.

திருச்செந்தூர்: சசிகலாவுடன் ஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜா சந்திப்பு!

ஓ.ராஜா, சசிகலா கோயிலுக்குக் கிளம்பவிருந்த நேரத்தில் அவரை ஹோட்டலுக்குச் சென்று சந்தித்துப் பேசினார்.

Published:Updated:
ஓ.ராஜா - சசிகலா

சசிகலா இன்று காலை நெல்லை மாவட்டம், கூடங்குளம் அருகே உள்ள விஜயாபதி, விஸ்வாமித்திரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

சசிகலா
சசிகலா

அதைத் தொடர்ந்து, நெல்லையிலிருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலில் சசிகலா சுவாமி தரிசனம் செய்யத் திட்டமிட்டிருந்தார். அதன்படி, சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருச்செந்தூரிலுள்ள தனியார் ஹோட்டலில் சசிகலா தங்கியிருந்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ஓ.ராஜா
ஓ.ராஜா

அப்போது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, சசிகலா கோயிலுக்குக் கிளம்பவிருந்த நேரத்தில் அவரை ஹோட்டலுக்குச் சென்று சந்தித்துப் பேசினார்.

 ஓ.ராஜா
ஓ.ராஜா

ஓ.ராஜா அதிமுக-வில் சசிகலா மீண்டும் இணைவது தொடர்பாக அவரிடம் பேசியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, தேனியில் சசிகலாவை அதிமுக-வில் இணைப்பது தொடர்பான தீர்மானத்துக்கு ஓ.ராஜா ஆதரவு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது அவர் சசிகலாவைச் சந்தித்துப் பேசியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism