Published:Updated:

`குட்டையைக் குழப்பப் பார்த்தார்; இரவோடு இரவா தூர்வாரிட்டோம்!'-செந்தில் பாலாஜியை முந்திய விஜயபாஸ்கர்

துரை.வேம்பையன்
நா.ராஜமுருகன்

அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி திடீர் `தூர் வாருதல்' போராட்டம் எதிரொலியாக, இரவோடு இரவாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உத்தரவின்பேரில் அதிகாரிகளே சம்பந்தப்பட்ட ஏரியைத் தூர்வாரும் பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இரவோடு இரவாக தூர்வாரப்பட்டபோது...
இரவோடு இரவாக தூர்வாரப்பட்டபோது... ( நா.ராஜமுருகன் )

அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி திடீர் `தூர் வாருதல்' போராட்டம் எதிரொலியாக, இரவோடு இரவாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உத்தரவின்பேரில் அதிகாரிகளே சம்பந்தப்பட்ட ஏரியைத் தூர்வாரும் பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இரவோடு இரவாக தூர்வாரப்பட்டபோது...
இரவோடு இரவாக தூர்வாரப்பட்டபோது...
நா.ராஜமுருகன்

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட க.பரமத்தி ஒன்றியம், நெடுங்கூர் ஊராட்சி நெடுங்கூர், ஈசநத்தம் ஊராட்சி கஞ்சமனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளை தூர்வாரும் முயற்சியில் இறங்கினார்.

இன்று நடைபெற இருந்த அந்தத் தூர்வாரும் நிகழ்வு, தி.மு.க மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ தலைமையில் காலை 10 மணிக்கு பொதுமக்களோடு இணைந்து மேற்கொள்ளப்பட இருப்பதாக கரூர் மாவட்ட தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இதனிடையே, நேற்று இரவோடு இரவாக கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட திட்ட அலுவலர் கவிதா முன்னிலையில் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. அங்கு சென்ற பத்திரிகையாளர்களையும் போட்டோ, வீடியோ எடுக்கவிடாமல் அதிகாரிகள் அடித்துத் துரத்தினர்.

Vikatan

தமிழக அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் குளம், ஏரி, வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு வருகின்றன. ஆனால், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் விவசாயிகளின் நலன் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, அதைக் கண்டித்து தி.மு.க சார்பில் போராட்டம் நடத்தப்பட இருப்பதாக அறிவித்து இருந்தார். அதையொட்டி, இன்று நெடுங்கூர் ஏரி தி.மு.க சார்பில் பொதுமக்கள் துணையோடு தூர்வாரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு முதல் அரசு அதிகாரிகள் விரைந்து ஏரியைத் தூர்வாரும் பணியில் காவல்துறை துணையுடன் ஈடுபட்டு வருவதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

M.R.Vijayabaskar
M.R.Vijayabaskar
நா.ராஜமுருகன்

இதன்பின்னே, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் கைங்கர்யம் இருப்பதாக தி.மு.கவினர் சொல்கிறார்கள். அதாவது, அந்த ஏரியை செந்தில் பாலாஜி தூர்வாரினால், அதனால் தன்னோட செல்வாக்கு பாழாகும் என்று பயந்துதான் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவசரம் அவசரமாக நெடுங்கூர் ஏரியைத் தூர்வார உத்தரவிட்டதாகச் சொல்கிறார்கள். இந்நிலையில், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ``நெடுங்கூர் ஏரியை குடிமராமத்து திட்டத்தின்கீழ் கீழ் தூர் வார நிதி ஒதுக்கி, டெண்டரும் விட்டாச்சு. ஆனா, வேலை ஆரம்பிக்கிறதுக்குள்ள செந்தில் பாலாஜி தூர் வாரப் போறதா சொல்லி, குட்டையைக் குழப்பப் பார்த்தார். இதன்மூலம், தமிழக அரசுக்கு கெட்டபெயரை ஏற்படுத்தலாம்னு பார்த்தார். அதனால்தான், திட்டமிட்டப்படி நெடுங்கூர் ஏரி தூர்வாரப்பட்டது. வேற எந்த அரசியல் காரணமும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.