Published:Updated:

``எம் மக்கள் மீது கோபமெல்லாம் இல்லை தம்பி!” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

``எனக்கு எம் மக்கள் மீது கோபமெல்லாம் இல்லை தம்பி. 2026 தேர்தலில் நான் நிச்சயம் ஜெயிப்பேன்!” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

பாட்டுப் பாடுவார், டான்ஸ் ஆடுவார், விளையாடுவார், அரசியல் பேசுவார்... என இப்படி இவரைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். நேரில் சென்று பேட்டி எடுக்கப் போனபோதும் அதை உணர முடிந்தது. பக்கா ஆல் ரவுண்டராக இருக்கிறார்.

``இப்போது 11 மணிக்கு என்ன செய்யறீங்க சார்?’’ எனக் கேட்டால், ``நீங்கவெச்ச `11 மணி ஜெயக்குமார்' என்ற பேரு எனக்கு பிடிச்சுருக்கு தம்பி...'' என ஜாலியாகச் சிரிக்கிறார் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்.

எந்தக் கேள்வியையும் `வேண்டாம்’ என்றோ, `இதைக் கேட்காதீர்கள்’ என்றோ எதுவும் சொல்லவில்லை. நாம் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் மனதில்பட்ட பதிலைப் பட்டெனச் சொன்னார். பழைய பாடல்களைப் பாடினார், கிண்டல் அடித்தார், தன் வாழ்க்கை குறித்துச் சொன்னார், விளையாட்டு பற்றிப் பேசினார் என 360 டிகிரி மனிதராகத் திகழ்கிறார்.

ராயபுரம் தொகுதியில் 2021 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவியவரிடம் சோகமோ, வருத்தமோ எதுவுமில்லை. ``ராயபுரம் ராக்கரா இருந்தவர் நீங்க. டான்ஸ், பாட்டு, சமையல்னு எல்லாம் செஞ்சீங்க. ஆனாலும் தோத்துப்போயிட்டீங்களே... மக்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லைங்கிறதைத்தானே இது காட்டுது?'' என்ற கேள்விக்கு, ``இந்தத் தேர்தலில் இல்லை தம்பி... அனைத்துத் தேர்தல்களிலும் நான் இப்படித்தான். முகத்தை உம்முனுவெச்சுக்கிட்டு மக்கள்கிட்ட போய் என்ன செய்யப்போறோம்... எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கணும். நான் இந்தத் தொகுதி மக்களுக்கு நிறைய செஞ்சேன். திமுக பொய் வாக்குறுதிகளை நம்பி மக்கள் என்னைத் தோற்கடிச்சுட்டாங்க. அதனால் எனக்கு எம் மக்கள் மீது கோபமெல்லாம் இல்லை தம்பி. 2026 தேர்தலில் நான் நிச்சயம் ஜெயிப்பேன்'' என இயல்பாகத் தோல்வியைக் கடந்துவருகிறார்.

அவரிடம் மேலும்..,

* வந்து... வந்து... வந்து... நீங்க வந்தாலே `வந்து' என்ற வார்த்தை வந்துடுதே...

* உங்களுக்குள் டி.எம்.எஸ் ஒளிஞ்சு இருக்காரா?

* எம்.ஜி.ஆர் படங்கள் மற்றும் பாடல்கள்...

* படம் பார்க்கும்போது காவல்துறையிடம் அடிவாங்கியது...

* சின்ன வயதில் என்னவாக ஆசைப்பட்டீங்க... போன்ற பல கேள்விகளுக்கான பதில்களைக் கீழேயுள்ள வீடியோ லிங்க்கில் பார்க்கவும்.

அடுத்த கட்டுரைக்கு