Published:Updated:

``அண்ணன் ஓ.பி.எஸ் விவகாரம் தொடர்பாக எனக்கும் ராங் கால்கள் வருகின்றன..!" - செல்லூர் ராஜூ கலகல!

செல்லூர் ராஜூ

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் சில கேள்விகளை முன்வைத்துப் பேசினோம்...

``அண்ணன் ஓ.பி.எஸ் விவகாரம் தொடர்பாக எனக்கும் ராங் கால்கள் வருகின்றன..!" - செல்லூர் ராஜூ கலகல!

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் சில கேள்விகளை முன்வைத்துப் பேசினோம்...

Published:Updated:
செல்லூர் ராஜூ

``பிரிந்தவர்கள் மனம் திருந்தி பொதுச்செயலாளரிடத்தில் பேசி மீண்டும் வரலாம். அண்ணா தி.மு.க தொண்டர்கள் எப்போதும் சேர்ந்துகொள்ளலாம்'' என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடர்ச்சியாகப் பேசிவருவதுதான் அ.தி.மு.க வட்டாரத்தில் ஹாட் டாபிக். இந்த நிலையில், அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

அதிமுக தலைமைக் கழக அலுவலகம்
அதிமுக தலைமைக் கழக அலுவலகம்

``மனம் திருந்தும் அளவுக்கு ஓ.பி.எஸ் என்ன தவறு செய்தார் என நீங்கள் நினைக்கிறீர்கள்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``அண்ணன் ஓ.பி.எஸ் பொதுக்குழுவில் கலந்துகொண்டபோது சில தவறுகள் நடந்துவிட்டன. 2,500 பேர் கலந்துகொள்ளும் பொதுக்குழுவில் சில ஆர்வக்கோளாறுகளால் அது நடந்துவிட்டது. அது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. அண்ணனும் வெளிநடப்பு செய்துவிட்டார். ஆனால், அடுத்த சிறப்புப் பொதுக்குழுவுக்கு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவருக்கென்று மேடையில் இருக்கையும் போடப்பட்டிருந்தது. ஒருங்கிணைப்பாளர் அல்லது பொருளாளர் என்கிற அடிப்படையில் அவர் அங்குதானே வந்திருக்கவேண்டும்... ஆனால், அவர் என்ன செய்தார்... பொதுக்குழுவில் அவருக்கு மரியாதை கிடைக்கவில்லை என அவர் நினைத்திருந்தால், தலைவர், அம்மா நினைவிடத்துக்காவது போயிருக்கலாம். அதுவும் இல்லையென்றால், தலைமைக் கழகத்துக்கு முன்பாக அமைதியாக உட்கார்ந்து எழுந்து வந்திருந்தால் பரவாயில்லை. யார், யாரையோ அழைத்துக்கொண்டு போய் தலைமைக் கழகத்தை அப்படிச் செய்யலாமா?''

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``ஆனால், நாங்கள் தலைமை அலுவலகத்துக்குப் போனோம், அங்கே ஏற்கெனவே தயாராக இருந்தவர்கள் தாக்குதல் நடத்தியதால்தான் பிரச்னை ஆனது என்று ஓ.பி.எஸ் தரப்பில் சொல்லப்பட்டதே?''

``நான் அந்த விஷயத்துகே வரவில்லை. கீழ்மட்ட நிர்வாகிகள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்றால் பரவாயில்லை. ஒரு தலைவர் என்ன செய்ய வேண்டும்... மதிக்கப்படக்கூடிய இடத்தில் இருப்பவர் இப்படிச் செய்யலாமா என்பதே என் கேள்வி?''

அதிமுக தலைமை அலுவலகம்
’எம்.ஜி.ஆர் மாளிகை’
அதிமுக தலைமை அலுவலகம் ’எம்.ஜி.ஆர் மாளிகை’

`` `எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையாக வருவது முன்பே திட்டமிடப்பட்ட ஒன்று. அதற்கு தெளிவாகக் காய்கள் நகர்த்தப்பட்டு அதற்குத் தடையாக இருந்ததற்காக, துரோகப் பட்டம் சுமத்தி ஓ.பி.எஸ் கட்சியைவிட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்’ என்று அவரின் ஆதரவாளர்கள் சொல்கிறார்களே?''

``முதலிலேயே இந்த விஷயம் தெரிகிறது என்றால் அண்ணன் ஓ.பி.எஸ் நான்கு பேரிடம் அது குறித்துக் கலந்து பேசியிருக்கவேண்டும். இல்லாவிட்டால் அண்ணன் ஓ.பி.எஸ்-ஸே, எடப்பாடியாரிடம் நேரில் சென்று அது குறித்துப் பேசியிருக்கலாம். இடையில் பலர் எதற்கு. ஒன் டு ஒன்னாக தலைமைக் கழகத்தில் உட்கார்ந்து பேசியிருக்கலாம். பேசித் தீர்க்காத விஷயம் என்ன இருக்கிறது?''

``ஆனால், கட்சியில் ஒற்றைத் தலைமை விவாதம் எழுந்தவுடனேயே மூத்த நிர்வாகிகள் பலரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகத்தானே பேசினார்கள்... அது ஓ.பி.எஸ்-ஸை அவமானப்படுத்தும் செயல் இல்லையா''

``இல்லை. நான் நழுவலாகப் பதில் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். கட்சியில் ஒற்றைத் தலைமையாக முடிவெடுப்பதற்கும் இரண்டு தலைமை இருந்து முடிவெடுப்பதற்கும் நிறைய மாறுபாடு வருகிறது. அறிக்கைகள் கொடுக்க காலதாமதமாகிறது. அதனால்தான் ஒற்றைத் தலைமை கோரிக்கைக்கு பெருவாரியான நிர்வாகிகள் ஆதரவு கொடுத்தார்கள். அதிலும் அண்ணன் ஓ.பி.எஸ்., தி.மு.க-விடம் மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதை தொண்டர்கள் யாரும் விரும்பவில்லை. இதை அண்ணனிடமே நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆனால், `நான் மென்மையாகப் போகவில்லை நன்றாகத்தான் போகிறேன்' என்பதுதான் அவரின் பதிலாக இருந்தது. ஆனால், பா.ஜ.க இதைப் பயன்படுத்தி அப்பர்ஹேண்ட் எடுக்கிறார்கள் இல்லையா?''

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

``தமிழ்நாட்டில் பா.ஜ.க வளர்வதற்கு ஓ.பி.எஸ் வழிவிடுகிறார் என்று சொல்கிறீர்களா?''

``அப்படி இல்லை. சமீபகாலமாக அவரின் நடவடிக்கைகள் சரியில்லை. அவர் மட்டுமல்ல, தி.மு.க அரசாங்கம் அ.தி.மு.க-வினர் மீது காழ்ப்புணர்வோடு ரெய்டு செய்துகொண்டிருக்கும் நேரத்தில், அவரின் மகன் இந்த அரசாங்கத்துக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறார். அவர் தனிப்பட்ட முறையில் செய்திருந்தால் பிரச்னை இல்லை. கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் சர்டிஃபிகேட் கொடுக்கலாமா... இதெல்லாம்தான் அவருக்கு ஆதரவு குறைந்ததற்குக் காரணம்.''

``இரட்டைத் தலைமையாக இருந்தபோதும் கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கி வேட்பாளர் தேர்வு வரைக்கும் எடப்பாடியின் கைதான் ஓங்கியிருந்தது. ஆனால், தற்போது கட்சியின் பின்னடைவுக்கு இரட்டைத் தலைமைதான் காரணம், அதிலும் ஓ.பி.எஸ்-தான் காரணம் என்று பேசுவது சரியா?''

``கட்சியின் தோல்விக்கெல்லாம் அண்ணனையோ மற்றவர்களையோ காரணம் சொல்லவில்லை. தற்போதைய சூழ்நிலையில் கட்சி வலிமையடைய ஒற்றைத் தலைமை தேவை என்பதே எங்கள் கருத்து''

``ஓ.பி.எஸ்-ஸை கட்சியைவிட்டு நீக்கியதன் மூலம் தென்மாவட்டத்தில் அ.தி.மு.க-வின் வாக்குவங்கி பலவீனமடையாதா?''

``இப்போதைக்கு வேண்டுமானால் நீங்கள் சொல்வதைப்போல் ஒரு தோற்றம் இருக்கலாம். ஆனால், காலம் செல்லச் செல்ல தேர்தல் நேரங்களில் அது மாறிவிடும்.''

பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

``தென்மாவட்ட அதிமுக தலைவர்களில் பெரும்பாலோனார் ஓ.பி.எஸ்-ஸை மிகக் கடுமையாக வெளிப்படையாகவே விமர்சிக்கிறார்கள். ஆனால், நீங்கள் அப்படி இல்லாததற்குக் காரணம் ஏதும் இருக்கிறதா?''

`` இந்தக் கட்சியில் எல்லோரும் ஒரே மாதிரியாகப் பேச வேண்டும் என்கிற அவசியமில்லை. என்னைப் பொறுத்தவரை அவர் இந்தக் கட்சிக்காக உழைத்தவர். கட்சிக்காகப் பாடுபட்டவர். இந்தக் கட்சியில் மதிக்கப்பட்டவர். இன்றைக்கு அவர் கொஞ்சம் மாறியிருக்கலாம். அவர் உட்பட நீக்கப்பட்ட அனைவரும் பொதுச்செயலாளரிடத்தில் பேசி, கட்சிக்குள் மீண்டும் வரலாம். கதவு இன்னும் அடைக்கப்படவில்லை.''

``எல்லாப் பொறுப்புகளுக்கும் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுவிட்டார்கள். ஒருவேளை அவர் மீண்டும் வந்தால் அவருக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும்?''

``கட்சியில் பொதுச்செயலாளர் பார்த்து என்ன பதவியும் உருவாக்கலாம். கொடுக்கலாம்.''

``முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு வந்ததைப்போல், தென்மாவட்ட இளைஞர்களிடமிருந்து உங்களுக்கும் ஏதும் அழைப்புகள் வருகிறதா?''

``சிரிச்சுக்கிட்டே கட்சியைப் பார்ப்போம் தம்பி என்று சொல்லுவேன். அண்ணே...அண்ணே எனக் கூப்பிடுவார்கள். போனைக் கட் செய்துவிடுவேன்.''

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

``ஆர்.பி.உதயகுமாருக்கு சட்டமன்றத் துணைத் தலைவர் பொறுப்புக் கிடைத்திருக்கிறது. நீங்கள் அந்தப் பொறுப்பை எதிர்பார்த்தீர்களா?''

``இல்லை. பதவிகளை எதிர்பார்த்து இந்தக் கட்சியில் இருக்க முடியாது. இப்போதுள்ள சூழ்நிலையில் அவர் சரியான நபர் என பொதுச்செயலாளர் நினைத்திருக்கலாம். அவரின் முடிவு சரியாகவே இருக்கும்.''