புரட்சித்தலைவி அம்மா பேரவை அணி செயலாளர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில், பேரவை நிர்வாகிகளுக்கு செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பொன்னையன், வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் பொன்னையன், ``அ.தி.மு.க பின்னுக்குத் தள்ளபடுவதாக தமிழ்நாட்டில் மறைமுக பிரசாரம் நடந்து வருகிறது. அதனால், அ.தி.மு.க-வினர் எச்சரிக்கையாவும், விழிப்பு உணர்வுடனும் இருக்கவேண்டும். காவிரி பிரச்னை, முல்லைப்பெரியாறு, பாலாறு விவகாரங்களில் தமிழ்நாடு பா.ஜ.க மக்களுக்காக குரல் எழுப்பவில்லை. தமிழ்நாடு பா.ஜ.க நிலைப்பாடு குறித்து சமூக ஊடகங்கள் மூலம் அ.தி.மு.க-வினர் வெளிப்படுத்த வேண்டும்'' என்றார்.
பொன்னையனின் இந்தப் பேச்சு அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
