Published:Updated:

`தி.மு.க திராவிட இயக்கமே அல்ல; உண்மையான திராவிட இயக்கம் அ.தி.மு.க-தான்!’ - செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

`தேர்தல் வந்துவிட்டதால் அவர் வேல் வாங்குவது மட்டும் அல்ல, அலகு குத்தக்கூடச் செய்வார். தேர்தல் முடிந்த பிறகு பகுத்தறிவுக் கொள்கை பற்றிப் பேசுவார்’ - செல்லூர் ராஜூ.

மு.க.ஸ்டாலினுக்கு வேல் பரிசளிக்கப்பட்டதை முதலமைச்சர் உட்பட அ.தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் விமர்சித்துவருகிறார்கள். இந்தநிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூவும் இதைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

மதுரையில் நடந்த அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்தியாளர்களிடம் பேசும்போது,``தமிழக இளைஞர்களின் எழுச்சி நாயகனாக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார்.

அரியர்ஸ் மாணவர்களைத் தேர்ச்சிபெறவைத்தது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இட ஒதுக்கீடு கொண்டு வந்தது, 52 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கியது உட்பட பல திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறார். அதனால், இளைஞர்கள் அ.தி.மு.க பக்கம் வந்துகொண்டிருக்கிறார்கள்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

ஆனால், இளைஞர்கள்மீது பாசம் கொண்டவர்போல் மு.க.ஸ்டாலின் கபட நாடகம் ஆடுகிறார். அவருக்கு இப்போது ஒரே நோக்கம் முதலமைச்சர் நாற்காலிமீதுதான். அதற்காக தினமும் பல நாடகங்களை நடத்திவருகிறார்.

மதுரை: `ஃபாஸ்ட் ஃபுட்போல முதல்வர் ஆக நினைக்கிறார்கள்!’ - செல்லூர் ராஜூ

அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை அனைத்து மதமும் சம்மதமே. ஆனால், தேர்தல் நெருங்குவதால் ஸ்டாலின் கோயிலுக்குச் செல்கிறார். சமீபத்தில் பசும்பொன் சென்ற மு.க.ஸ்டாலின் அங்கு வழங்கிய விபூதியை கீழே கொட்டி அவமரியாதை செய்தார். அவர் ஒரு நாளும் முதல்வராக முடியாது.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

தேர்தல் வந்துவிட்டதால் அவர் வேல் வாங்குவது மட்டும் அல்ல, அலகு குத்தக்கூடச் செய்வார். தேர்தல் முடிந்த பிறகு பகுத்தறிவு கொள்கை பற்றிப் பேசுவார். குங்குமம் கொடுத்தால் அழிப்பது, விபூதி கொடுத்தால் தூக்கி எறிவது, இது போன்ற செயல்களை மக்கள் ஏற்க மாட்டார்கள். தி.மு.க திராவிட இயக்கமே அல்ல; உண்மையான திராவிட இயக்கம் அ.தி.மு.க-தான்.

தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை அறிவித்திருக்கிறது. மக்களுக்கு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. அதனால் 234 தொகுதிகளிலும் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்து எடப்பாடி பழனிசாமி முதல்வராவார்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு