Published:Updated:

ஒன் பை டூ: கொரோனாவைக் கட்டுப்படுத்த அபராதம் சரியா?

ஜெயக்குமார், மா.சுப்ரமணியன்
பிரீமியம் ஸ்டோரி
ஜெயக்குமார், மா.சுப்ரமணியன்

பொதுமக்களிடம் அபராதம் விதிப்பது, அரசுக்கு வருவாய் ஈட்டுவதற்குக் கிடையாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒன் பை டூ: கொரோனாவைக் கட்டுப்படுத்த அபராதம் சரியா?

பொதுமக்களிடம் அபராதம் விதிப்பது, அரசுக்கு வருவாய் ஈட்டுவதற்குக் கிடையாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

Published:Updated:
ஜெயக்குமார், மா.சுப்ரமணியன்
பிரீமியம் ஸ்டோரி
ஜெயக்குமார், மா.சுப்ரமணியன்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அ.தி.மு.க.

அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் தவிர்க்க முடியாத சூழலில் நாங்கள் அபராதம் விதித்தபோது, அதை அன்றைய தி.மு.க கடுமையாக விமர்சனம் செய்தது. ஆனால் அதே தி.மு.க., இப்போது முன்பைவிட அதிகமான தொகையை அபராதம் விதித்து மக்களை கஷ்டப்படுத்திவருகிறது. மாஸ்க் அணியாதவர்களுக்கு 100 ரூபாய் என்று இருந்த அபராதத் தொகை, இன்று 500 ரூபாய் ஆகியிருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பின்பு ஒரு பேச்சு என்பது தி.மு.க-வுக்கு வழக்கமான ஒன்றாகிப்போனது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, மக்களிடையே தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவேண்டியது மிகவும் அவசியம். கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், நடிகர்கள் முதல் பல்வேறு பிரபலங்களைவைத்து விழிப்புணர்வுப் பிரசாரங்களை நடத்தினோம். பல்வேறு வகையில் கொரோனா பரவல் குறித்தும், முகக்கவசத்தின் முக்கியத்துவம் குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வைக் கொண்டுசேர்த்தோம். ஆனால், தற்போது முதல்வரைவைத்தே பெரும்பாலான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அது எப்படி அனைத்துத் தரப்பு மக்களிடையே சென்று சேரும்?

ஒன் பை டூ: கொரோனாவைக் கட்டுப்படுத்த அபராதம் சரியா?
ஒன் பை டூ: கொரோனாவைக் கட்டுப்படுத்த அபராதம் சரியா?

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மா.சுப்பிரமணியன், தி.மு.க.

பொதுமக்களிடம் அபராதம் விதிப்பது, அரசுக்கு வருவாய் ஈட்டுவதற்குக் கிடையாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு வழிமுறைகளை இந்த அரசு திறம்படச் செய்துவருகிறது. அரசு சார்பில் கொரோனா தொற்று குறித்த தொடர் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அ.தி.மு.க ஆட்சிக்காலத்தைவிட, இப்போது மக்களிடையே அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருப்பது என்பதுதான் உண்மை. இந்தியாவிலேயே, தமிழக முதல்வர்தான் மக்களிடையே நேரடியாகச் சென்று தடுப்பூசியின் நன்மை குறித்து எடுத்துரைக்கிறார். மக்களுக்கு முகக்கவசங்களை வழங்கி, அதன் அவசியத்தை மக்களிடையே பேசிப் புரியவைக்கிறார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism