Published:Updated:

`அமைச்சர் ஜெயக்குமாரின் அப்போ இப்போ புகைப்படங்கள்!’ #PhotoAlbum

``வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும் நான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் திரும்பிப் பார்க்கிறபோது மனம் நிறைய மலரும் நினைவுகள் சிறகடிக்கும்’’- அமைச்சர் ஜெயக்குமார்.

தமிழக அரசியலில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தனி ரகம்! தன்னையும் தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பவர். மேடையேறி மைக் பிடித்து பாடுது, தெருவோரச் சிறுவர்களோடு கிரிக்கெட் ஆடி மகிழ்வது என எப்போதும் உற்சாகத்தோடு தொகுதியை வலம் வருபவர்.

அண்மையில், அமைச்சர் ஜெயக்குமார் பேரக் குழந்தையுடன் துயில்கொள்ளும் புகைப்படம் இணையத்தில் செம வைரலாகியது. இதுகுறித்து அமைச்சரிடம் பேசியபோது,``அட... வாழ்க்கையில் எப்போதுமே சுறுசுறுப்பாக மகிழ்ச்சியாகக் கடக்க நினைப்பவன் நான். சிறு வயதிலிருந்தே எனக்கு புகைப்படம் எடுத்துக்கொள்வதில் அலாதி ஆர்வம் உண்டு. வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும் நான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் திரும்பிப் பார்க்கிறபோது மனம் நிறைய மலரும் நினைவுகள் சிறகடிக்கும்.

அந்த வரிசையில், எனது குழந்தைப் பருவத்திலிருந்து சிறுவன், வாலிபன், குடும்பத் தலைவன் என ஒவ்வொரு தருணத்திலும் நான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பார்த்து மகிழ்வதற்காக விகடன் வாசகர்களுக்கும் அனுப்பி வைக்கிறேன்....'' என்றவர் புகைப்படங்களை நமக்கு அனுப்பிவைத்தார்.

அமைச்சர் ஜெயக்குமாரின் ஆல்பம் இங்கே....

அடுத்த கட்டுரைக்கு