Published:Updated:

`பா.ஜ.க-வில் இணைந்த அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பா!'  - தி.மு.க-வை எதிர்க்கக் களமிறக்கப்படுகிறாரா?

சசிகலா புஷ்பா

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையே எதிர்த்து அரசியல் செய்த சசிகலா புஷ்பா, பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளார்.  

`பா.ஜ.க-வில் இணைந்த அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பா!'  - தி.மு.க-வை எதிர்க்கக் களமிறக்கப்படுகிறாரா?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையே எதிர்த்து அரசியல் செய்த சசிகலா புஷ்பா, பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளார்.  

Published:Updated:
சசிகலா புஷ்பா

அரசியலில் திடீரென அறிமுகமானதுடன் அதே வேகத்தில் அ.தி.மு.க சார்பாக தூத்துக்குடி மாநகராட்சி மேயராக பொறுப்பேற்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்தவர், சசிகலா புஷ்பா. மேயராக பொறுப்பு வகித்தபோதே அவரை மாநிலங்களவை உறுப்பினராக்கி அழகு பார்த்தார், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. 

சர்ச்சைக்குரிய வகையில் அவரது செயல்பாடுகள் இருந்ததாலும், அவரைப் பற்றி தவறான கருத்துகள் வெளியில் பரவியதாலும் அவரை எம்.பி பொறுப்பில் இருந்து நீக்க ஜெயலலிதா முடிவு செய்தார். அதனால் அவரை போயஸ் தோட்டத்துக்கு அழைத்துக் கண்டித்ததுடன், ராஜினாமா கடிதம் கேட்டதாகப் பேச்சு எழுந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

போயஸ் கார்டனுக்கு தன்னை அழைத்து ஜெயலலிதாவும் சசிகலாவும் சேர்ந்து அடித்ததாகவும் தன்னிடம் இருக்கும் எம்.பி பொறுப்பை வேறு நபர்களுக்குக் கொடுக்கும் நோக்கத்தில் கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் எழுதிக் கேட்டு மிரட்டியதாக பரபரப்புக் குற்றச்சாட்டைத் தெரிவித்தார். 

சசிகலா புஷ்பா
சசிகலா புஷ்பா

நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் இதே குற்றச்சாட்டைத் தெரிவித்ததால் சர்ச்சை ஏற்பட்டது. அதன் பின்னர் அ.தி.மு.க-வில் இருந்து ஒதுங்கி இருந்துவந்த அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க-வில் இணைந்து சிறிது காலம் பணியாற்றினார்.

கடந்த சில மாதங்களாக எந்தக் கட்சியிலும் இல்லாமல் தனித்துச் செயல்பட்டு வந்த அவர், தி.மு.க-வையும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். அவருடைய கருத்துகள் பா.ஜ.க-வுக்கு ஆதரவானதாக இருப்பதாக அப்போதே பேச்சுக் கிளம்பியது. அதனால் அவர் அந்தக் கட்சியில் சேருவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. 

பாரதிய ஜனதாவில் சசிகலா புஷ்பா
பாரதிய ஜனதாவில் சசிகலா புஷ்பா

இந்த நிலையில், டெல்லியில் இன்று அவர் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளரான முரளிதரராவ் முன்னிலையில் அக்கட்சியில் முறைப்படி இணைந்தார். தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பா.ஜ.க-வில் சசிகலா புஷ்பா இணைந்தது பற்றி அவரது ஆதரவாளர்கள் கூறுகையில், ``மனதில் படும் கருத்துகளைத் துணிச்சலாகப் பேசக்கூடியவர், சசிகலா புஷ்பா. சர்ச்சைகளைக் கண்டு துவண்டு விடாமலும் எதிர்ப்புகளுக்கு அஞ்சாமலும் செயல்படக் கூடியவர். 

முரளிதரராவுடன் சசிகலா புஷ்பா
முரளிதரராவுடன் சசிகலா புஷ்பா

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எம்.பி-யான பிரக்யா தாகூர் போன்று அதிரடி அரசியல் செய்யும் துணிச்சல் கொண்டவரான சசிகலா புஷ்பாவின் அரசியலில் இனி அனல் பறக்கும். குறிப்பாக தி.மு.க-வின் அரசியல் வாரிசாகக் களமிறங்கியுள்ள உதயநிதி போன்றோரைக் குறிவைத்து அவர் பேசும் பேச்சுகள் தமிழக அரசியலில் சூட்டைக் கிளப்பும்’’ என்கிறார்கள்.

எது எப்படியோ, தமிழக பா.ஜ-வின் முன்னாள் தலைவராக இருந்து ஆளுநராகச் சென்றுள்ள தமிழிசை சௌந்தரராஜனை போலத் தமிழகத்தில் பா.ஜ.க-வுக்கு இன்னொரு பெண் பிரபலம் கிடைத்திருக்கிறார் என்பதே உண்மை என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.