Published:Updated:

``தொண்டன், எம்.பி ஆவது அதிமுக-வில் மட்டுமே சாத்தியம்” - சொல்கிறார் பொன்னையன்

முன்னாள் அமைச்சர் பொன்னையன் அ.தி.மு.க

அதிமுக - பாஜக கூட்டணிச் சலசலப்புக்கு, சமீபத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் சொன்ன கருத்துகள் முக்கியக் காரணம். அவரைச் சந்தித்து நமது கேள்விகளை முன்வைத்தோம்..!

``தொண்டன், எம்.பி ஆவது அதிமுக-வில் மட்டுமே சாத்தியம்” - சொல்கிறார் பொன்னையன்

அதிமுக - பாஜக கூட்டணிச் சலசலப்புக்கு, சமீபத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் சொன்ன கருத்துகள் முக்கியக் காரணம். அவரைச் சந்தித்து நமது கேள்விகளை முன்வைத்தோம்..!

Published:Updated:
முன்னாள் அமைச்சர் பொன்னையன் அ.தி.மு.க

``திமுக அரசின் ஓராண்டு ஆட்சி பற்றி உங்கள் பார்வை?”

``செய்யாதவற்றைச் செய்ததாக ஊடக பலத்தைப் பயன்படுத்தி விளம்பரம் செய்ததுதான் தி.மு.க அரசின் ஓராண்டு சாதனை. `நீட் தேர்வை ரத்து செய்வதுதான் எங்களது ஆட்சியின் முதல் நடவடிக்கை’ என்றார். பா.ஜ.க-வுடனும், காங்கிரஸுடனும் மத்தியில் பல காலம் மாறி மாறிக் கூட்டணி ஆட்சி நடத்திவந்த தி.மு.க-வுக்கு, நீட் தேர்வை மாநில அரசு ரத்துசெய்ய முடியாது என்பது தெரியாதா... தெரிந்தும்கூட பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகிவிடும் என்கிற தியரியைப் பயன்படுத்தி, மாணவர்களை வஞ்சித்துவிட்டார் ஸ்டாலின்.

பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து, பெண்களின் வாக்குகளைப் பெற்றுவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர் பெண்களின் முதுகிலும் குத்துவிட்டார் ஸ்டாலின். நகைக்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துவிட்டு, பலவிதக் கோளாறுகளை அதில் நுழைத்து 50 லட்சத்துக்கும் மேற்பட்ட நகைக்கடனிலிருந்து வெறும் 13 லட்சம் நகைக்கடனை மட்டுமே தள்ளுபடி செய்து ஏழை மக்களின் வயிற்றிலும் அடித்துவிட்டார் ஸ்டாலின். உண்மை இவ்வாறிருக்க, தான் ஒரு சாதனையாளர் என்று தற்புகழ் பாடிக்கொண்டு, பொய்த் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.”

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``ஒரு திட்டத்தைக்கூட செயல்படுத்தவில்லை என்கிறீர்களா?”

``ஆம்... எங்களது ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு, தொடங்கப்பட்ட திட்டங்களுக்குத் திறப்புவிழா மட்டுமே செய்துகொண்டிருக்கிறார்கள். 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அள்ளித் தெளித்துவிட்டு, தற்போது ஒன்றையுமே செயல்படுத்தவில்லை. அம்மா கொண்டுவந்த நாடே வியந்த சிறப்பான அம்மா உணவகங்களைச் சத்தமில்லாமல் மூடிவருகிறார்கள். கிராம மக்கள் பட்டணம் சென்று மருத்துவச் சிகிச்சைப் பெறுவது சிரமம் என்பதால்தான் அம்மா மினி கிளினிக்குகளை எடப்பாடியார் கொண்டுவந்தார். அதையும் மூடிவிட்டனர். அம்மா என்கிற பெயரையே ஒழித்துவிட நினைக்கிறார்கள். முல்லைப்பெரியாறு, பாலாறு, காவிரி போன்ற நதிநீர்ப் பிரச்னைகளிலும் கவனம் செலுத்துவதில்லை.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``சமூக வலைதளங்களில் அதிமுக செயலாற்றுவதுபோல தெரியவில்லையே?”

``சமூக வலைதளங்களில் அ.தி.மு.க-வுக்கு எதிரான கருத்துகளைத் தொடர்ந்து பரப்பிவருகிறார்கள். அதற்கு அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

``ஜெயக்குமார், செம்மலை உள்ளிட்டோரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மாநிலங்களவைக்கு தர்மர் எப்படித் தேர்வானார்?”

``தர்மரைக் கட்சியிலுள்ள எல்லோருக்கும் தெரியும். அவர் ஒரு செயல்வீரர். அ.தி.மு.க-வில் சாதாரணத் தொண்டனும் உச்சப் பொறுப்புக்கு வர முடியும் என்ற எம்.ஜி.ஆர்., அம்மா காலத்து உயரிய தத்துவம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதையே இது காட்டுகிறது.”

ஆர்.தர்மர்
ஆர்.தர்மர்

``ஜெயக்குமார், செம்மலை போன்ற சீட் கிடைக்காதவர்கள் அப்செட்டில் இருக்கிறார்களாமே?”

``அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டு ஊடகங்கள் கற்பனைச் செய்திகளையே வெளியிட்டுவருகின்றன என்பது இதன் மூலம் புலப்படுகிறது.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``அ.தி.மு.க தலைவர்கள் பிரதமரைச் சந்தித்த நோக்கம் என்ன?”

``பிரதமரைச் சந்திப்பது ஒன்றும் புதிதல்லவே. தமிழக மக்களின் கோரிக்கைகளை ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக பிரதமரிடம் கொண்டு சேர்க்கிறோம்.”

எடப்பாடி -பன்னீர்- மோடி
எடப்பாடி -பன்னீர்- மோடி

``பெட்ரோல் விலையை ஆரம்பத்திலேயே தி.மு.க அரசு குறைத்துவிட்டபோதும், பா.ஜ.க போராடுவது ஏன்?”

``மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலையைக் கணிசமாகக் குறைத்திருக்கிறது. பெரும்பாலான மாநிலங்கள் 7 ரூபாயிலிருந்து 9 ரூபாய் வரைக் குறைத்திருக்கின்றன. ஆனால், தி.மு.க அரசு 3 ரூபாய் குறைத்தது வெறும் கண் துடைப்பே அன்றி வேறில்லை. இது மக்களை ஏமாற்றும் செயல்.”

``ஒருவருக்கு ஒரு பதவி என்பது அ.தி.மு.க-வில் சாத்தியமில்லையா?”

``எல்லா கட்சிகளிலும் ஒருவருக்கே பல பொறுப்புகள் இருப்பது வாடிக்கையான ஒன்றுதான். தி.மு.க-வில் தந்தை கருணாநிதி, மகன் ஸ்டாலின், பேரன் உதயநிதி என ஒரு குடும்பமே கட்சியை விழுங்கிவிட்டதே! சமீபத்தில் நடந்த உட்கட்சித் தேர்தலில், எடப்பாடியார் தனது மாவட்டச் செயலாளர் பதவியை இளங்கோவனுக்குக் கொடுத்திருக்கிறார். இது போன்று தேவையின் அடிப்படையில் அதைச் செயல்படுத்துவோம்.”

``கொடநாடு வழக்கு எதை நோக்கிச் செல்கிறது?

``எடப்பாடியாருக்கும், கொடநாடு வழக்குக்கும் துளியும் தொடர்பில்லை என்பது மட்டும் உண்மை. மற்றபடி, வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இதற்கு மேல் பேச இயலாது.”

கொடநாடு எஸ்டேட்
கொடநாடு எஸ்டேட்

``முன்னாள் அமைச்சர்கள் மீதான ரெய்டுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

``விஞ்ஞானரீதியில் ஊழல் செய்தது தி.மு.க என்று சர்க்காரியா கமிஷனே சொல்லியிருக்கிறது. பூச்சி மருந்து ஊழலில் தொடங்கி, கோதுமை ஊழல் என எதை எதையோ சொல்லிக்கொண்டே போகலாம். அப்படியான கலங்கத்திலிருந்து தப்பிக்க அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போட்டு தொல்லை கொடுத்துவருகிறது. விரைவில் அனைத்து வழக்குகளும் தவிடுபொடியாகும்.”

இது போன்ற இன்னும் பல கேள்விகளுக்கு ஜூ.வி பேட்டியில் பொன்னையன் பதிலளித்திருக்கிறார்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism