Published:Updated:

`இது எங்களோட வெற்றி!'- 58-ம் கால்வாயில் 58 பானை பொங்கல் வைத்து வைகை நீரை வரவேற்ற அதிமுகவினர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பொங்கல் வைத்த ஆர்.பி.உதயகுமார்
பொங்கல் வைத்த ஆர்.பி.உதயகுமார்

``58 கால்வாய் திட்டத்திற்கு பெரும் முயற்சி எடுத்து வெற்றி கண்டது அதிமுகதான். ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் திமுகவை இத்திட்டத்தை கைவிட்டது. இதே போலதான் வீராணம் திட்டத்தை திமுகவினர் கிடப்பில் போட்டனர். ஆனால் ஜெயலலிதா வீராணம் திட்டத்தை செயல்படுத்தினார்." - ஆர்.பி.உதயகுமார்

சமீபத்தில் திமுக அமைச்சர்களால் நீண்ட காலத்துக்கு பிறகு தண்ணீர் திறந்துவிடப்பட்ட 58-ம் கால்வாயில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் பொங்கல் வைத்து வைகை நீரை வரவேற்கும் விழாவை நடத்தினார்கள்.

58 கிராம பாசனக் கால்வாய்.
58 கிராம பாசனக் கால்வாய்.
`இன்ஷூரன்ஸ் ப்ரீமியத்தைவிடவும் குறைவாக வந்த இழப்பீட்டு தொகை!' - அதிர்ச்சியில் விவசாயிகள்

உசிலம்பட்டி வட்டாரத்திலுள்ள 58 கிராமங்களுக்கு வைகை நீர் செல்ல வழியில்லாததால் நீண்டகாலமாக வறட்சியின் பிடியில் மக்கள் சிக்கி தவித்தனர். இப்பகுதிக்கு வைகை நீரைக் கொண்டுவர பல திட்டங்கள் போடப்பட்டும் செயல்படுத்த முடியாமல் இருந்தன.

1996-ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது கூட்டணியிலிருந்த பார்வர்ட் பிளாக் எம்.எல்.ஏ வல்லரசு வலியுறுத்தியதன் பேரில் 58-ம் கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டது.

நீண்டகாலமாக இதன் வேலை நடந்து வந்த நிலையில் கடந்த 2018-ல் கால்வாய் திறக்கப்பட்டது. சோதனைக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும், வைகை அணை என்றைக்கு முழுக் கொள்ளளவை எட்டுகிறதோ அப்போதுதான் உபரி நீரை 58-ம் கால்வாயில் விடப்படும் என்று சொல்லப்பட்டது.

சமீபத்தில் திமுக அமைச்சர்களால் தண்ணீர் திறந்தபோது
சமீபத்தில் திமுக அமைச்சர்களால் தண்ணீர் திறந்தபோது

எனவே, கால்வாய் அமைக்கப்பட்டும் அதில் தண்ணீர் வராமலிருந்ததால் 58 கிராம மக்களும் தண்ணீர் திறந்துவிடக்கோரி தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் வைகை அணை முழு கொள்ளளவை எட்ட, 58-ம் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன் பெருமையை திமுகவினர் சொந்தமாக்கிக்கொண்ட நிலையில், அதிமுகவினர் இன்று தனியாக வைகை நீரை வரவேற்று விழா எடுத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

58 பானைகளில் பொங்கல் வைத்து உற்சாகமாக அதிமுகவினர் நடத்திய இவ்விழாவில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ``58 கால்வாய் திட்டத்திற்கு பெரும் முயற்சி எடுத்து வெற்றி கண்டது அதிமுகதான். ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் திமுகவை இத்திட்டத்தை கைவிட்டது. இதே போலதான் வீராணம் திட்டத்தை திமுகவினர் கிடப்பில் போட்டனர். ஆனால் ஜெயலலிதா வீராணம் திட்டத்தை செயல்படுத்தினார். தொடர்ந்து அதிமுக அழுத்தம் கொடுத்து 58 கால்வாயில் தண்ணீர் திறக்க போராடி வெற்றி பெற்றுள்ளோம்.

பொங்கல் வைத்து விழா
பொங்கல் வைத்து விழா
மதுரை: `மத்திய சிறையில் ரூ.100 கோடி ஊழல்?' - உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்!

ஜெயலலிதா சட்ட போராட்டத்தை நடத்தி முல்லை பெரியாறில் 142 அடியை தேக்கினார். பேபி அணை பழுது பார்த்து 152 அடியாக தேக்கிக் கொள்ளலாம் என்ற வரலாற்று தீர்ப்பை பெற்றுத் தந்தார்.

அதனை தொடர்ந்து 2014, 2015 ,2018 ஆண்டுகளில் 142 அடியாக தேக்கப்பட்டது. 152 அடியாக முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் உயரும்போது இதேபோல் 152 பொங்கல் பானை வைத்து வரவேற்போம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு