Published:Updated:

அ.தி.மு.க அவைத்தலைவர் பதவி ரேஸ்... முந்துவது யார்?

திண்டுக்கல் சீனிவாசன், தனபால், ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
திண்டுக்கல் சீனிவாசன், தனபால், ஜெயக்குமார்

அவைத்தலைவர் பதவிக்குப் பெரிதாக அதிகாரங்கள் இல்லை என்றாலும், அ.தி.மு.க-வில் அது மதிப்புமிக்க பதவியாகவே கருதப்படுகிறது.

அ.தி.மு.க அவைத்தலைவர் பதவி ரேஸ்... முந்துவது யார்?

அவைத்தலைவர் பதவிக்குப் பெரிதாக அதிகாரங்கள் இல்லை என்றாலும், அ.தி.மு.க-வில் அது மதிப்புமிக்க பதவியாகவே கருதப்படுகிறது.

Published:Updated:
திண்டுக்கல் சீனிவாசன், தனபால், ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
திண்டுக்கல் சீனிவாசன், தனபால், ஜெயக்குமார்

‘மதுசூதனன் இருக்கும்வரை அவர்தான் கட்சியின் அவைத்தலைவர்’ என்று ஜெயலலிதாவால் சர்ட்டிஃபிகேட் கொடுக்கப்பட்டு, கடந்த 14 ஆண்டுகளாக அவைத்தலைவராக இருந்த மதுசூதனனின் மறைவைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்கான ரேஸ் அ.தி.மு.க-வில் சூடுபிடித்திருக்கிறது.

அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆர் காலத்து சீனியரான மதுசூதனன், எம்.ஜி.ஆர் மட்டுமின்றி ஜெயலலிதாவின் அபிமானத்தையும் பெற்றவர். ஜெயலலிதா மறைந்ததும், சசிகலா பொதுச்செயலாளர் பதவியில் அமர வேண்டும் என்று முதல் குரல் கொடுத்ததே அவைத்தலைவர் மதுசூதனன்தான். அதனாலேயே, சசிகலாவுக்கு அவர்மீது தனிப்பட்ட பாசமுண்டு. பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கியபோது திடீரென்று பன்னீர் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார் மதுசூதனன். பிறகு அணிகள் இணைந்தபோது கட்சிப் பெயர், இரட்டை இலைச் சின்னம் இரண்டும் அவைத்தலைவர் மதுசூதனன் பெயருக்குத்தான் திரும்பக் கிடைத்தன. உடல்நலக்குறைவு காரணமாக ஆகஸ்ட் 5-ம் தேதி அவர் காலமானதைத் தொடர்ந்து மூன்று நாள்கள் துக்கம் அனுசரிக்கவும், கட்சி நிகழ்ச்சிகளை ரத்துசெய்து கட்சிக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும் உத்தரவிட்டது கட்சித் தலைமை. இதே நாள்களில், அடுத்து அவைத்தலைவர் பதவிக்கு யாரை நியமிக்கலாம் என்கிற விவாதங்களும் அ.தி.மு.க-வுக்குள் தொடங்கிவிட்டன.

பொன்னையன், ஜே.சி.டி.பிரபாகர், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி
பொன்னையன், ஜே.சி.டி.பிரபாகர், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி

மேற்கண்ட விவாதங்களில் பங்கேற்ற கட்சியின் சீனியர் தலைவர் ஒருவர் அது பற்றிய விவரங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்... “அவைத்தலைவர் பதவிக்குப் பெரிதாக அதிகாரங்கள் இல்லை என்றாலும், அ.தி.மு.க-வில் அது மதிப்புமிக்க பதவியாகவே கருதப்படுகிறது. ஏனெனில், இங்கு கட்சித்தலைவர் என்கிற பதவி இல்லை; அதனால், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், நிர்வாகிகள் கூட்டம், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் கூட்டம், செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் என அனைத்துமே அவைத்தலைவர் தலைமையில்தான் நடக்க வேண்டும் என்று கட்சியின் பை-லாவில் உள்ளது. தவிர சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களின்போது வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் ஆட்சிமன்றக் குழுவிலும் அவைத்தலைவர் முக்கியப் பொறுப்பு வகிப்பார். எல்லாவற்றுக்கும் மேலாக, தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயர், சின்னம் இரண்டுமே அவைத்தலைவர் பெயரில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேசமயம் பொதுச்செயலாளருக்கோ, ஒருங்கிணைப்பாளர் களுக்கோ ஆலோசனை சொல்வது மட்டுமே அவைத்தலைவரின் கடமை. அதை மீறி முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை” என்றவர், அவைத்தலைவர் பதவிக்காகத் தற்போது நிலவும் போட்டி குறித்தும் விவரித்தார்...

“மதுசூதனன் மருத்துவமனையில் சிகிச்சை யிலிருக்கும்போதே, அவைத்தலைவரை மாற்று வதற்காக எடப்பாடி தரப்பு முயன்றது. ஆனால், பன்னீர் அதைத் தடுத்துவிட்டார். தற்போது நடக்கும் அவைத்தலைவர் பதவிக்கான ரேஸில் பொன்னையன், செங்கோட்டையன், செம்மலை, கே.பி.முனுசாமி, கே.பி.அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன், தனபால், ஜெயக்குமார், ஜே.சி.டி.பிரபாகர், நத்தம் விசுவநாதன், பா.வளர்மதி ஆகியோர் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

செங்கோட்டையன், செம்மலை, கே.பி.முனுசாமி, கே.பி.அன்பழகன்
செங்கோட்டையன், செம்மலை, கே.பி.முனுசாமி, கே.பி.அன்பழகன்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் வன்னியர் சமூக வாக்குகள் அதிகம் கிடைத்திருப்பதால், அந்தச் சமூகத்தைச் சேர்ந்த கே.பி.அன்பழகன், செம்மலை, கே.பி.முனுசாமி, ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரில் ஒருவரைத் தேர்வு செய்யலாம் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்துகிறார்கள். ஆனால், வன்னியர் உள் இட ஒதுக்கீட்டால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டியல் சமூக வாக்குகள் அ.தி.மு.க-வுக்குக் கிடைக்கவில்லை என்று சொல்லி முன்னாள் சபாநாயகர் தனபாலை அந்தப் பதவியில் அமரவைக்கலாம் என்று சிலர் யோசனைச் சொல்லியிருக்கிறார்கள்.

எடப்பாடி தரப்போ, இப்போது இருப்பவர்களிலேயே சீனியரான பொன்னையனை தேர்வு செய்யலாம் என்று சொன்னது. ஆனால் பன்னீரின் ஆதரவாளர்கள், “பொன்னையனுக்கு வயதாகிவிட்டது; அவர் பேசுவதே புரியவில்லை” என்று சொல்லி முட்டுக்கட்டைப் போட்டிருக்கிறார்கள். செங்கோட்டையன் பெயர் சொல்லப்பட்டபோது, “ஏற்கெனவே கட்சியை கவுண்டர் சமூகத்தினர் கைப்பற்றிவிட்டனர் என்ற பேச்சு இருக்கிறது, அதனால், அவர் வேண்டாம்” என்று எதிர்க்குரல் எழுந்துள்ளது. பெண் ஒருவரை அவைத்தலைவராக நியமிக்கலாம் என்று பேச்சு எழுந்தபோது, “பெண்களை அவைத்தலைவராக நியமித்த வரலாறு நமது கட்சியில் இல்லை” என்று சிலர் முட்டுக்கட்டை போட்டுவிட்டார்கள். ஆனால், “பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்த கட்சியில், அவைத்தலைவராக ஒரு பெண் வரக் கூடாதா என்று முக்கியப் பெண் நிர்வாகிகள் போர்க்குரல் எழுப்பிவருகிறார்கள்.

இன்னொரு பக்கம் சிறுபான்மை சமூகத்தவருக்கு பதவியைக் கொடுக்கலாம் என்று சொல்பவர்கள் கிறிஸ்தவ வன்னியரான ஜே.சி.டி.பிரபாகர் பெயரை முன்மொழிந்தார்கள். ஆனால், அவர் பன்னீரின் ஆதரவாளர் என்பதால் எடப்பாடி ‘நோ’ சொல்லிவிட்டார். தென்மாவட்டங் களிலிருந்து கட்சி வளர்ச்சி பெற வேண்டுமென்றால் சீனியர்களான நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன் என தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பதவியைக் கொடுக்க வேண்டும் என்ற பேச்சும் அடிபடுகிறது.

திண்டுக்கல் சீனிவாசன், தனபால், ஜெயக்குமார்
திண்டுக்கல் சீனிவாசன், தனபால், ஜெயக்குமார்

இதற்கிடையே சசிகலா கட்சியைக் கைப்பற்ற காத்திருப்பதால், அதைத் துணிச்சலுடன் எதிர்ப்பவர் ஜெயக்குமார்தான் என்று சிலர் அவரது பெயரை முன்மொழிந்திருக்கிறார்கள். இவர் எடப்பாடி, பன்னீர் இருவரையும் அனுசரித்துச் செல்பவர் என்பதால் இரு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பவில்லை. அதேநேரம், ஜெயக்குமார் பெயருடன் கே.பி.அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன், தனபால் என நான்கு பேரின் பெயர்கள்தான் கட்சித் தலைமையின் இறுதிப் பட்டியலில் இருக்கிறது” என்றார் விரிவாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism