Published:Updated:

ராஜ்ய சபா எம்.பி தேர்தல்: அதிமுக-வின் 2 இடங்களுக்கு முட்டிமோதும் சீனியர்கள்?

ராஜ்ய சபா

தமிழகத்தைப் பொறுத்தவரை 6 ராஜ்ய சபா எம்.பி பதவிகள் காலியாகின்றன. அவற்றில், 4 எம்.பி பதவிகளை தி.மு.க-வும், 2 எம்.பி பதவிகளை அ.தி.மு.க-வும் கைப்பற்ற வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது.

ராஜ்ய சபா எம்.பி தேர்தல்: அதிமுக-வின் 2 இடங்களுக்கு முட்டிமோதும் சீனியர்கள்?

தமிழகத்தைப் பொறுத்தவரை 6 ராஜ்ய சபா எம்.பி பதவிகள் காலியாகின்றன. அவற்றில், 4 எம்.பி பதவிகளை தி.மு.க-வும், 2 எம்.பி பதவிகளை அ.தி.மு.க-வும் கைப்பற்ற வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது.

Published:Updated:
ராஜ்ய சபா

நாடு முழுவதும் 57 ராஜ்ய சபா எம்.பி பதவிகள் காலியாகின்றன. அதற்கானத் தேர்தல் வரும் ஜூன் 10-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை 6 ராஜ்ய சபா எம்.பி பதவிகள் காலியாகின்றன. அவற்றில், 4 எம்.பி பதவிகளை தி.மு.க-வும், 2 எம்.பி பதவிகளை அ.தி.மு.க-வும் கைப்பற்ற வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தி.மு.க சார்பில் ராஜ்ய சபா எம்.பி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அந்தக் கட்சியின் மேலிடம் வெளியிட்டிருக்கிறது. இந்தமுறை தி.மு.க தலைமை ராஜ்ய சபா எம்.பி தேர்தலில், தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோருக்கு வாய்ப்பளித்திருக்கிறது. அதேசமயம், முன்னதாக தேர்தல் நேரத்தில் சொன்னது போல 4 இடங்களில் ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியிருக்கிறது.

டி.கே.எஸ்.இளங்கோவன்
டி.கே.எஸ்.இளங்கோவன்
ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அ.தி.மு.க தரப்பில் இன்னும் வேட்பாளர் பட்டியல் வெளியாகாத நிலையில், இது குறித்து தமிழக அரசியலை கூர்ந்து கவனித்துவரும் அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம்.

``ஒரு ராஜ்ய சபா எம்.பி பதவியைப் பெறுவதற்கு குறைந்தபட்சம் 34 எம்.எல்.ஏ-க்களின் வாக்குகள் தேவை. இதன்படி, தி.மு.க நான்கு எம்.பி-க்களையும், அ.தி.மு.க இரண்டு எம்.பி-க்களையும் பெறலாம். பெரும்பாலும் தேர்தல் நடக்காது, அன்-அப்போஸ்டாக தேர்வாவதற்கே வாய்ப்புகள் அதிகம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆளுங்கட்சியான தி.மு.க-வில் தற்போது ராஜ்ய சபா எம்.பி-யாக இருக்கும் டி.கே.எஸ்.இளங்கோவனின் பதவிக்காலம் முடிவடைகிறது. ஆனால், கட்சி மேலிடம் அவருக்கு இந்த முறை வாய்ப்பளிக்கவில்லை. அதே போல, மற்றுமொரு எம்.பி-யான ஆர்.எஸ்.பாரதிக்கும் இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. சமீபத்தில் ராஜ்ய சபா எம்.பி-யாகப் பதவியேற்ற ராஜேஸ்குமாரின் பதவிக்காலமும் முடிகிறது. 6 மாதங்களே பதவியில் இருந்ததால், அவருக்கு மீண்டும் நீட்டிப்பு வழங்க முதல்வர் ஒப்புக்கொண்டுவிட்டார்.

கார்த்திகேய சிவசேனாபதி
கார்த்திகேய சிவசேனாபதி

அதனால், அவருக்கு தற்போது தலைமை வாய்ப்பு வழங்கியிருக்கிறது. சுற்றுச்சுழல் அணியில் இருக்கும் கார்த்திகேய சிவசேனாபதி, மகேந்திரன், முன்னாள் எம்.பி-யும், தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியுமான ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோரும் தி.மு.க-வில் ராஜ்ய சபா எம்.பி பதவிக்கு காய் நகர்த்தினார்கள்.

மகேந்திரன்
மகேந்திரன்

ஆனால், கட்சி மேலிடம் தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோருக்கு வாய்ப்பளித்திருக்கிறது. மேலும், ஒரு இடத்தை காங்கிரஸுக்கு ஒதுக்கியிருக்கிறது.

ஏ.கே.எஸ்.விஜயன்
ஏ.கே.எஸ்.விஜயன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆளுங்கட்சியான தி.மு.க-வுக்கு நான்கு எம்.பி பதவிகள் இருந்தும் போட்டி குறைவுதான். ஆனால், அ.தி.மு.க-வில் இரண்டு எம்.பி பதவிகள் மட்டும் உள்ளபோதிலும், போட்டி மிக அதிகமாக இருக்கிறது. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், ஜெ.சி.டி.பிரபாகர், கோகுல இந்திரா, வளர்மதி, செம்மலை, கோவை செல்வராஜ் எனப் பட்டியல் நீள்கிறது.

ஜெயகுமார்
ஜெயகுமார்
ஜெ.சி.டி.பிரபாகர்
ஜெ.சி.டி.பிரபாகர்
கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

தி.மு.க பட்டியல் வெளியாகிவிட்டது இன்னும் சில தினங்களில் அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலும் கசிந்து விடும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism