Published:Updated:

“தீபாம்மா தலைமைக்கு வரணும்?!”

ஜெயலலிதா - வெள்ளியங்கிரி
பிரீமியம் ஸ்டோரி
ஜெயலலிதா - வெள்ளியங்கிரி

பக்கா அ.தி.மு.க காரர். போலீஸார் அவரைக் கைது செய்து விசாரிக்க, ஜெயலலிதாவைச் சந்திக்க அவராக இப்படி ஸ்கெட்ச் போட்டது தெரியவந்தது.

“தீபாம்மா தலைமைக்கு வரணும்?!”

பக்கா அ.தி.மு.க காரர். போலீஸார் அவரைக் கைது செய்து விசாரிக்க, ஜெயலலிதாவைச் சந்திக்க அவராக இப்படி ஸ்கெட்ச் போட்டது தெரியவந்தது.

Published:Updated:
ஜெயலலிதா - வெள்ளியங்கிரி
பிரீமியம் ஸ்டோரி
ஜெயலலிதா - வெள்ளியங்கிரி

வடக்கலூர் வெள்ளியங்கிரி. இந்தப் பெயர் 2கே கிட்ஸ்களுக்குப பரிச்சயமில்லாமல் இருக்கலாம். ஆனால், 70களில் இருந்து 90கள்வரை பிறந்தவர்கள், “யார் சாமி நீங்க?” என்று ஆச்சர்யமாகப் பார்த்த நபர். 2009-ல் சிறிது காலம் தலைப்புச் செய்திகளிலும் வலம் வந்தவர்.

அப்போது தி.மு.க ஆட்சி நடந்துகொண்டிருந்தது. இருந்தாலும் சீமான், சுந்தர் சி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தா.பாண்டியன் பலருக்கும், “ஜெயலலிதா ஸ்பீக்கிங்...” என்று அழைத்து ஒரு குரல் சர்ப்ரைஸ் கொடுத்துக்கொண்டிருந்தது.

அது அப்படியே ஜெயலலிதா குரல்போல இருந்தாலும், “இந்த அம்மா இப்படியெல்லாம் பேசுவாங்களா?” என்று பலரும் யோசிக்கவே செய்தனர். இது சற்று காலம் தொடர, கடைசியில் போலீஸார் நம்பரை ட்ராக் செய்தபோதுதான் கோவை மாவட்டம் அன்னூர் அருகே வடக்கலூர் என்கிற கிராமத்தைச் சேர்ந்த, கூலித் தொழிலாளியான வெள்ளியங்கிரி எனத் தெரியவந்தது.

பக்கா அ.தி.மு.க காரர். போலீஸார் அவரைக் கைது செய்து விசாரிக்க, ஜெயலலிதாவைச் சந்திக்க அவராக இப்படி ஸ்கெட்ச் போட்டது தெரியவந்தது. ஒருகட்டத்தில், அவரைப் பார்த்தா பாவமா இருக்கு, விட்ருங்க என்று ஜெயலலிதாவே இரக்கப்பட்ட நபர்.

“தீபாம்மா தலைமைக்கு வரணும்?!”

இந்தச் சம்பவம் நடந்து 12 ஆண்டுகளுக்கு மேலானாலும், அ.தி.மு.க-வின் சமீபத்திய நிலை, வைரல் ஆடியோவை மிமிக்ரி என பொன்னையன் பேக் அடித்தது போன்றவை வெள்ளியங்கிரியை நினைவூட்டின. வெள்ளியங்கிரியைத் தொடர்பு கொண்டோம்..

“கட்சியே பீஸ் பீஸா சிதறிக் கெடக்குது. நான் என்னத்தைங்க பேச? இதுக்கெல்லாம் தீபா தலைமை யேற்கணும். அப்பதாங்க கட்சி பழையபடி மாறும்” என்று நான்ஸ்டாப்பாகப் பேசத் தொடங்கினர். “அண்ணன் அங்கயே நில்லுங்க. இதோ வரோம்.” என உடனடியாக வண்டியைக் கட்டிக்கொண்டு வடக்கலூர் பயணித்தோம்.

நமக்காக ஜெயலலிதா படங்கள், செய்திகளைச் சுவரில் ஒட்டிக் காத்திருந்தவர். “எட்டாம் கிளாஸ் வரை படிச்சிருக்கேன். எம்.ஜி.ஆர் ரசிகர் நான். நெனவு தெரிஞ்ச நாளிலிருந்து அ.தி.மு.க-ல இருக்கேன். அ.தி.மு.க-வுக்கு எங்க பிரசாரம்னாலும் போய்டுவேன். அப்படியே டி.வி-யில் அம்மா பேசறதைப் பார்த்து அவங்களை மாதிரி பேசிப் பழகினேன்” என்றவரிடம், ஜெயலலிதா போலவே சில வார்த்தைகளைப் பேசிக் காட்டுங்கள் என்றோம். ஜெ., தேர்தல் பிரசாரம் செய்வதைப் போல பக்கம்பக்கமாகப் பேசினார்.

“கேரக்டராகவே மாறிட்டீங்களே சூப்பர் தலைவா. சரி, பிரச்னை எப்படி வந்துச்சு” என்று கேட்டோம்.

“அம்மாவைப் பார்க்கணும்னு ஆசை. அதுக்கு வழி தெரியல. சரி மிமிக்ரிய வெச்சு எல்லார்கிட்டயும் பேசுவோம், அப்பறம் அம்மாவே கூப்பிடுவாங்கன்னு ஆரம்பிச்சேன். மாயாண்டி குடும்பத்தார் படம் வெளியான நேரம். அப்ப ஒரு பத்திரிகைல அந்தப் படத்துக்கு வாசகர் பாராட்டுகள் வந்துட்டிருந்துச்சு. அங்க ஒருத்தர் மூலமா இயக்குநர் ராசு மதுரவன் நம்பர் பிடிச்சுப் பேசினேன். ஒரே போன்ல ராசு மதுரவன், சீமான் பேசினாங்க.அவங்க நம்பிட்டாங்க. பாடகி சித்ரா, சுந்தர்.சி, நல்லகண்ணு, தா. பாண்டியன்னு நிறைய பேர்கிட்ட பேசினேன். கடைசியா விகடன்ல அதைப் பத்தி அலசி ஆராய்ஞ்சிருந்தாங்க. ஒருநாள் போலீஸ்காரங்க மப்டில வீட்டுக்கு வந்து மிமிக்ரி பண்ணச் சொன்னாங்க. அப்பறம்தான் அது போலீஸ்னு தெரிஞ்சுது.

சென்னைக்கு அழைச்சுட்டுப் போய் விசாரிச்சாங்க. ஒருகட்டத்துல நம்மளப் பத்தி அவங்களுக்குத் தெரிஞ்சுடுச்சு. என்கிட்ட விசாரணை பண்ணுன வீடியோவை அம்மாவுக்கும் அனுப்பியிருக்காங்க. ‘சரி, ஒண்ணும் தெரியாத பையனா இருக்கான். நம்ம கட்சிக்காரன் வேற. அவரை வீட்லயே விட்ருங்க’ன்னு சொல்லிட்டாங்க. கடைசி வரை அம்மாவைப் பார்க்கவே முடியல.

வெள்ளியங்கிரி
வெள்ளியங்கிரி

அ.தி.மு.க-ல பொதுச்செயலாளர்னு ஒருத்தர்தான் இருக்கணும். ஆனா, இவங்க எல்லாம் இவங்களுக்குத் தகுந்த மாதிரி பதவிய உருவாக்கி மக்களைக் குழப்பறாங்க. இது மாறணும்னா கட்சிக்கு ஒரு தலைவர் வேணும். புரட்சித்தலைவி ரத்தத்துல வந்த திருமதி தீபா அம்மா தலைமைக்கு வரவேண்டும்” எனச் சொல்லும்போது வெள்ளியங்கிரியாலேயே சிரிப்பை அடக்க முடியவில்லை.

“உங்களுக்கே சிரிப்பு வருது, காமெடி பண்றீங்களா?” எனக் கேட்டோம். “இது உள்ளத்துல இருந்து வந்த சிரிப்பு (சமாளிச்சுட்டாராம்). தீபா அம்மா வந்தால்தான் சண்டை எல்லாம் வராது. எல்லாரும் அவங்க தலைமைய ஏத்துக்கற நாள் கூடிய சீக்கிரத்துல வரும்” என்றவர், ஜெயலலிதா போல இந்தியில் பேசி அசத்தினார்.