Published:Updated:

வலுக்கும் அதிமுக Vs பாமக மோதல்... கட்சிகளின் அடுத்தடுத்த திட்டம்தான் என்ன?!

எடப்பாடி, பன்னீருடன் ராமதாஸ்...
News
எடப்பாடி, பன்னீருடன் ராமதாஸ்...

ராமதாஸ் கூட்டணியிலிருந்து வெளியேறுவதும், திராவிடக் கட்சிகளைத் திட்டுவதும் இயல்பானது. பதிலுக்கு அ.தி.மு.க-வும் பா.ம.க-வைச் சீண்டியிருப்பது தமிழக அரசியலில் புதிது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, டிசம்பர் 15-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசுகையில், பா.ம.க குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அந்தக் கட்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார். ஏற்கெனவே, ராமதாஸும் அ.தி.மு.க-வை விமர்சித்திருந்தார். இந்த நிலையில், இருவருக்குள்ளான இந்த அரசியல், எதிர்காலத்தில் எப்படி இருக்கும்? என்று அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ``ஜெயலலிதா இருந்தபோது ஒருமுறை, அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைப்பது குறித்து அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளில் பேசிய ராமதாஸ், அடுத்த தேர்தலிலேயே அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தார்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

அ.தி.மு.க அமைச்சர்கள் எல்லோரையும் மோசமாகக் கிண்டலடித்தார் அன்புமணி ராமதாஸ். `திராவிட மற்றும் தேசியக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது, பத்திரம்கூட எழுதிக் கொடுக்கிறேன்’ என்றும் கூறியவர் ராமதாஸ். ஆயினும் தொடர்ந்து கூட்டணி அமைத்துக்கொண்டுதான் இருந்தார்கள். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தொடங்கிய அ.தி.மு.க-பா.ம.க கூட்டணி, ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் வரை தொடர்ந்ததே ஆச்சர்யம்தான். எதிர்பார்த்ததுபோல 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது பா.ம.க வெளியேறியது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
தே.சிலம்பரசன்

முதலில் பா.ம.க வெளியேறியதைப் பெரிய அடியாகவே கருதியது அ.தி.மு.க. ஆனால், அந்தத் தேர்தலில் பா.ம.க வாங்கிய அடியைப் பார்த்து தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டது. 9 மாவட்டங்களில், ஏழு வடமாவட்டங்களை பா.ம.க கோட்டை என்று எண்ணியிருந்த ராமதாஸின் கணக்கு பொய்த்துப்போனது. அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருந்திருந்தால்கூட மரியாதையான இடங்கள் கிடைத்திருக்கும். தலைமையின் வெளியேறுதல் பிடிக்காமல் நிர்வாகிகள் லோக்கல் அண்டர்ஸ்டாண்டிங் வைத்த கதையும் நடந்தது. ராமதாஸே அதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரங்கப்படுத்தியிருந்தார்.

ராமதாஸ் ட்விட்
ராமதாஸ் ட்விட்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அ.தி.மு.க-வை வீழ்த்த தி.மு.க மேற்கொண்ட ஸ்ட்ராட்டஜியே பா.ம.க வெளியேறுதல் என்றொரு தகவலும் றெக்கை கட்டியது. அதற்கேற்றாற்போல் ராமதாஸும் சமீபத்தில் தி.மு.க-வைப் பாராட்டி, நெருங்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். வன்னியர் சமூகத்தினரிடமே பா.ம.க-வுக்குச் செல்வாக்கில்லை என்பதை உணர்ந்துகொண்ட ராமதாஸ், செல்வாக்கை அதிகரிக்க விரும்பினார். சும்மாவே வாய் மெல்பவர்களுக்கு அவல் கிடைத்ததுபோல, தோதான நேரத்தில் வந்து சிக்கியது ‘ஜெய் பீம்’ விவகாரம். எனினும், இதன் ரிசல்ட் என்னவென்பதை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்தான் பார்க்க வேண்டும்.

ஜெய் பீம் - அன்புமணி ராமதாஸ்
ஜெய் பீம் - அன்புமணி ராமதாஸ்

பா.ம.க இல்லாமலேயே அதிக இடங்களைக் கைப்பற்ற முடியும் என்பதை அ.தி.மு.க-வும் உணர்ந்துகொண்டது. வட மாவட்டங்களிலேயே பா.ம.க-வுக்கான செல்வாக்கு குறைவு என்பதையும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் தெரிந்துகொண்டனர். அதனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க தனித்துப் போட்டியிட்டாலும், அ.தி.மு.க-வை பாதிக்காது என்று நினைக்கிறார்கள். இந்த எண்ணம்தான் ராமதாஸுக்கு எதிரான கருத்தை எடப்பாடி தெரிவிக்கக் காரணம்.

பொதுவாக பா.ம.க எந்தக் கட்சியைக் கிண்டலடித்துப் பேசினாலும் தலைவர்கள் பதில் அளிப்பதில்லை. ஆனால், எடப்பாடி முதன்முறையாக, பகிரங்கமாக ராமதாஸையும் பா.ம.க-வையும் சீண்டியிருக்கிறார். ‘இனி ஒருபோதும் கூட்டணிக்குள் வர முடியாது’ என்று சொல்வதற்கான சிக்னல்தான் எடப்பாடியின் கிண்டல். பா.ம.க-வுக்குக் கொடுக்கும் இடங்களைத் தங்களை ஆதரிக்கும் சிறிய கட்சிகளுக்கோ, பா.ஜ.க-வுக்கோ பிரித்துக் கொடுக்கலாம் என்று நினைக்கிறது அ.தி.மு.க தலைமை. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியில் அதிகப்படியான சீட்களை பெற்றிட வேண்டும் என்ற இருமாப்பில் இருக்கிற பா.ஜ.க-வும், பா.ம.க-வைக் கண்டுகொள்ளவே இல்லை.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

வன்னியர் இட ஒதுக்கீடு நீதிமன்றத்தால் ரத்துசெய்யப்பட்ட விவகாரத்தில் தி.மு.க அரசு சிறப்பாக செயல்படுவதாகச் சொல்லி மிட்டாய்களைக் காண்பித்து தி.மு.க-வுடன் நெருங்க முனைகிறார் ராமதாஸ். பா.ம.க கூட்டணிக்குள் வரும்பட்சத்தில் வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும். அதுமட்டுமின்றி, பா.ம.க ஓர் அரசியல் சக்தி இல்லை என்பதைத் தேர்தல்கள் மீண்டும் மீண்டும் உணர்த்தி இருப்பதை கவனத்தில் கொள்ளும் ஸ்டாலின், ரிஸ்க் எடுக்கத் தயாராக இல்லை. அதனால், வரக்கூடிய நாள்களில் தமிழக அரசியலில் பா.ம.க தனித்துத்தான் பயண்ம் செய்யவேண்டிய தேவை ஏற்படலாம்” என்று சொல்கின்றனர்.