Published:Updated:

சிவகங்கை: `சசிகலா ஒரு காலாவதியான மாத்திரை!’ - வைகைச்செல்வன் விமர்சனம்

வைகைச்செல்வன்
வைகைச்செல்வன்

`காய்ச்சலுக்கு மாத்திரை போட்டுக்கொள்ளலாம். ஆனால், காலாவதியான மாத்திரையைப் போட்டுக்கொண்டால் பக்க விளைவுகள்தான் ஏற்படும். சசிகலா ஒரு காலாவதியான மாத்திரை’ - வைகைச்செல்வன்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதி, சிங்கம்புணரி பகுதியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கதர் மற்றும் கிராம வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பொன்.மணி பாஸ்கரன், சிங்கம்புணரி ஒன்றியத் தலைவர் திவ்யா பிரபு, நடிகர் சிங்கமுத்து உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

வைகைச்செல்வன்
வைகைச்செல்வன்

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் பேசுகையில், ``டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்குக் கடன் பாக்கி வைத்து தலைமறைவானர். ஸ்டாலின் ஒரு கொரோனா என்றால், உதயநிதி ஸ்டாலின் உருமாறிய கொரோனா. `பெங்களூரிலிருந்து ஒருவர் புறப்பட்டுவிட்டார். அவர் பார்த்துக்கொள்வார்’ என்றால், ஸ்டாலின் எதற்கு இருக்கிறார்?

சசிகலா சொன்ன பொது எதிரி... தி.மு.க-வா, பா.ஜ.க-வா?

ஸ்டாலின் கட்சியைக் கலைத்துவிட வேண்டியதுதானே... எங்கிருந்தோ வருபவர்கள் அ.தி.மு.க-வைக் கைப்பற்றி விடுவார்களா? காய்ச்சலுக்கு மாத்திரை போட்டுக்கொள்ளலாம். ஆனால், காலாவதியான மாத்திரையைப் போட்டுக்கொண்டால் பக்கவிளைவுகள்தான் ஏற்படும். சசிகலா ஒரு காலாவதியான மாத்திரை. கட்சிக்கு எந்தப் பயனும் இல்லை. சசிகலா செயலாளராக அறிவிப்பதற்குத் தீர்மானம் எழுதி, முதன்முதலில் வாசித்தவன் வைகைச்செல்வன்தான். நாங்கள் ஏற்றுக்கொண்டோம். மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கிராம மக்கள் உங்களில் ஒருவர்தான் தலைமைக்கு வர வேண்டும் என தெரிவித்தனர். அதனால் தற்போது ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருக்கிறார்கள்.

வைகைச்செல்வன்
வைகைச்செல்வன்

தமிழக முதல்வர், துணை முதல்வர் இருவரும் அ.தி.மு.க எனும் பெரும் கட்சியைச் சிறப்பாக வழிநடத்திச் செல்கின்றனர். உலகத்திலேயே மின்கம்பியில் துணி காயப்போட வைத்த ஆட்சிதான் தி.மு.க ஆட்சி. தி.மு.க-வின் ஐந்தாண்டுச் சாதனை, மின்வெட்டால் மக்கள்தொகைப் பெருக்கம் மட்டும்தான். வேற சாதனை ஒன்றும் இல்லை’’ என்று பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு