Published:Updated:

“அக்ரிக்கும் ஆவினுக்கும் என்ன சம்பந்தம்?”

அக்ரி கிருஷ்ணமூர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
அக்ரி கிருஷ்ணமூர்த்தி

திருவண்ணாமலை கொந்தளிப்பு

“அக்ரிக்கும் ஆவினுக்கும் என்ன சம்பந்தம்?”

திருவண்ணாமலை கொந்தளிப்பு

Published:Updated:
அக்ரி கிருஷ்ணமூர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
அக்ரி கிருஷ்ணமூர்த்தி

‘‘பால் கூட்டுறவுச் சங்கம் நடத்திவருவதாக அப்பட்டமாகப் பொய் பேசுகிறார். ஊருக்குள் அவரை பால் கேனுடன் நாங்கள் பார்த்ததே இல்லை. அக்ரிக்கும் ஆவினுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? தில்லுமுல்லு செய்து திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் ஆகியிருக்கிறார்’’ என்று முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராகக் கொந்தளிக்கிறார்கள், பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள்.

வேலூர் மாவட்ட ‘ஆவின்’ ஒன்றியத்து டன் இணைந்துதான் திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டுவந்தன. இரண்டு மாவட்டங்களிலிருந்து, நாள்தோறும் சுமார் ஐந்து லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, அவற்றில் இரண்டு லட்சம் லிட்டர் பால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மீதமுள்ளவற்றில் பால் பாக்கெட், நெய், பால்கோவா, மோர், லஸ்ஸி, குல்ஃபி உள்ளிட்ட பால் உபபொருள்கள் தயாரித்து விற்பனைக்கு அனுப்புகிறார்கள்.

“அக்ரிக்கும் ஆவினுக்கும் என்ன சம்பந்தம்?”

பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் நெருங்கிய ஆதர வாளர் வேலழகன், ஆவின் தலைவராக உள்ளார். இவர், வேலூரை அடுத்த ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்தவர். அதேபோல், இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் நெருங்கிய ஆதரவாளரான ஆரணியைச் சேர்ந்த பாரிபாபு, துணைத் தலைவராக உள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், ‘திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு என, புதியதாகத் தனி கூட்டுறவு ஒன்றியம் ஏற்படுத்தப்படும்’ என்று சுதந்திர தின விழா உரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆகஸ்ட் 28-ம் தேதி வேலூர் ஆவினிலிருந்து திருவண்ணாமலை ஒன்றியம் பிரிக்கப்பட்டு, 17 பேர்கொண்ட இடைக்கால நிர்வாகக் குழு உருவாக்கப்பட்டது. பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவராக, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நேரடியாக நியமனம் செய்யப்பட்டார். ‘தேர்தலையே நடத்தாமல் கூட்டுறவுச் சங்க விதிகளுக்குப் புறம்பாக அக்ரிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரின் பதவியை உடனே பறிக்க வேண்டும்’ என்று வாணாபுரம் பால் கூட்டுறவுச் சங்கத் தலைவர் பச்சமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கு விசாரணை, நடைபெற்று வருகிறது.

வேலூர் ஒன்றிய ஆவின் தலைவர் வேலழகன், ‘‘தலைவராகத் தேர்வுசெய்யப்படும் நபர், அவரின் கிராமத்தில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்தில் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 300 லிட்டர் பால் அல்லது 120 நாள் தொடர்ந்து அரை லிட்டர், ஒரு லிட்டராவது பால் ஊற்றிருக்க வேண்டும். தொடக்க பால் உற்பத்தியாளர் சங்கத்தில் இயக்குநர், தலைவர், துணைத் தலைவர் உட்பட 11 உறுப்பினர்களுக்கான தேர்தல் முதலில் நடைபெறும். பிறகே, மாவட்ட அளவில் ஒன்றியத்துக்கான தேர்தல் நடத்தப்படும். ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்ட ஒன்றியத்தில் மொத்தம் 17 இயக்குநர்கள் இருந்தோம். திருவண்ணாமலையைத் தனியாகப் பிரித்த பிறகு,

17 இயக்குநர்களில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு பேர் அங்கேயே சென்றுவிட்டனர். அவர்களுடன் அக்ரி கிருஷ்ணமூர்த்தி உட்பட மேலும் ஒன்பது பேரைச் சேர்த்துதான் தற்காலிக நிர்வாகக் குழுவை உருவாக்கியிருக்கிறார்கள்’’ என்றார் விளக்கமாக.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

துணைத் தலைவர் பாரிபாபு, ‘‘இடைக்கால நிர்வாகக் குழுவில் தலைவராக ஒருவரைத் தேர்வுசெய்வதற்கு, சட்டத்தில் இடம் இருக்கிறது. வழக்கமான விதிமுறையைப் பின்பற்றித்தான் அக்ரி கிருஷ்ணமூர்த்தியைத் தலைவராகத் தேர்வுசெய்திருக்கிறோம். எலத்தூர் பால் உற்பத்தியாளர் சங்கத்தை, அக்ரி நடத்திவருகிறார். மூன்று மாதங்களோ அல்லது ஆறு மாதங்களோ, தேர்தல் நடைபெறும் வரையில் இடைக்கால நிர்வாகக் குழு செயல்படும்’’ என்றார்.

“அக்ரிக்கும் ஆவினுக்கும் என்ன சம்பந்தம்?”

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ‘‘அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தலைவராக நியமித்திருப்பதில் விதிமீறல் நடைபெற வில்லை’’ என்றார் திட்டவட்டமாக.

புகாருக்குள்ளான அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். ‘‘என்னுடைய எலத்தூர் கூட்டுறவுச் சங்கத்திலிருந்து எவ்வளவு பால் கொடுத்திருக்கிறோம்; வேலூர் ஒன்றியத்திலிருந்து எனக்கு எவ்வளவு பில் வந்தது என்று மற்றவர்களுக்குத் தெரியாது. 1996-லிருந்து பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினராக இருக்கிறேன். நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். என் அப்பா 100 கறவைமாடுகளை வைத்திருந்தவர். என்னால் 50 மாடுகளுக்குமேல் பராமரிக்க முடியவில்லை. நானே பால் எடுத்துச் சென்று ஊற்றியிருக்கிறேன். இப்படியிருக்க, தலைவர் ஆகக்கூடிய அடிப்படைத் தகுதிகூடவா எனக்குத் தெரியாது. இந்தப் பிரச்னை வரும் என முன்கூட்டியே தெரியும். உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் அதிகாரிகள் தாக்கல் செய்திருக்கிறார்கள்’’ என்றார்.

எலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் சிலர் கூறுகையில், ‘‘அக்ரி எங்க ஊர்க்காரர்தான். ஆனால், அவர் ஒரு சொட்டுப் பாலைக்கூட சொசைட்டிக்கு வந்து ஊற்றியதை நாங்கள் பார்த்ததே இல்லை. இதுநாள் வரை செயல்படாமல் இருந்த சொசைட்டியைப் புதுப்பித்துள்ளதாக அக்ரிக்கு நெருக்கமானவர்கள் பேசிக்கொள்கி றார்கள். அந்த சொசைட்டி எங்கு இருக்கிறது என்று அக்ரிக்குதான் தெரியும். ஒரு விளம்பர போர்டும் வைக்கவில்லை. செல்வாக்கான மனிதர், திடீர் திடீரென என்ன வேண்டுமானாலும் செய்வார்’’ என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism