Published:Updated:

``அதிமுக புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டிருக்கிறது!” - எம்.பி கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

``உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, பாஜக-வுடன் கூட்டணியிலிருந்தாலும், இல்லாவிட்டாலும் நிச்சயம் தோல்வியையே தழுவுவார்கள்.” - கார்த்தி சிதம்பரம்.

``அதிமுக புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டிருக்கிறது!” - எம்.பி கார்த்தி சிதம்பரம்

``உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, பாஜக-வுடன் கூட்டணியிலிருந்தாலும், இல்லாவிட்டாலும் நிச்சயம் தோல்வியையே தழுவுவார்கள்.” - கார்த்தி சிதம்பரம்.

Published:Updated:
கார்த்தி சிதம்பரம்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இரண்டு நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான தேர்தல் குறித்த பங்கீட்டுப் பேச்சுவார்த்தை திமுக - காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே கடந்த சில தினங்களாக நடைபெற்றுவந்தது. இந்த நிலையில்தான், அமைச்சர் ரகுபதி, காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, மாவட்டத்திலுள்ள இரு நகராட்சிகள், எட்டு பேரூராட்சிகளில் 20 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடவிருக்கிறது.

``அதிமுக புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டிருக்கிறது!” - எம்.பி கார்த்தி சிதம்பரம்

பின்னர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை திமுக-வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மனநிறைவோடு உடன்பாடு ஏற்பட்டுவிட்டது. உள்ளாட்சித் தேர்தல் பங்கீடு செய்வது மிகவும் சிரமமான காரியம். இடப் பங்கீடு என்று வரும்போது, எந்த இடத்தில் நடந்தாலும், கொடுத்து வாங்குவதுதான் இருக்கும். உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை அடிமட்டத் தொண்டர்களும் போட்டியிட வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அதனால், சில நேரங்களில் காரசார விவாதங்கள், பிரச்னைகள் நடப்பது வழக்கம். அதேபோல், திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று நினைப்பார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தேசியக் கட்சியான நாங்களும் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறோம். மேலிடப் பொறுப்பாளர் இருக்கிறார். அனைத்தும் சரிசெய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வின் தேர்தல் தோல்விக்கு பாஜக-தான் பெரிய காரணம். பாஜக-வைக் கூடவைத்துக்கொண்டிருந்தால், சிறுபான்மையினர் மட்டுமல்ல... தமிழ் உணர்வு உள்ளவர்கள் யாரும் அந்த இயக்கத்துக்கு வர மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது அதைப் புரிந்துகொண்டு, இந்த முறை அதிமுக புத்திசாலித்தனமாக நடந்துகொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

ஆனாலும், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, பாஜக-வுடன் கூட்டணியிலிருந்தாலும், இல்லாவிட்டாலும் தோல்வியைத் தழுவுவார்கள். சட்டமன்றத் தேர்தல்களிலேயே உறுப்பினர் கடத்தல் நடக்கவில்லையா? இந்திய அளவில் உறுப்பினர் கடத்தலில் புகழ்பெற்றவர்கள் பாஜக. உள்ளாட்சித் தேர்தலிலும் கவுன்சிலர்கள் கடத்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. கடந்த முறை மாதிரி திமுக - காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையான வெற்றியைப் பெறும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism