Published:Updated:

``அதிமுக-வை இயக்கப்போவது மோடியும், அமித் ஷாவும்தான்” - சொல்கிறார் கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

``அதிமுக தற்போது மோடியின் மறு உருவமாக இருக்கிறது" என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார்.

``அதிமுக-வை இயக்கப்போவது மோடியும், அமித் ஷாவும்தான்” - சொல்கிறார் கே.எஸ்.அழகிரி

``அதிமுக தற்போது மோடியின் மறு உருவமாக இருக்கிறது" என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்திபவனில் நவம்பர் 20-ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பாஜக தனக்கு சம்பந்தம் இல்லாத உரிமையைக் கோருகிறது. காசியில் தமிழ்ச் சங்கத்தின் நிகழ்வில் மோடி பங்கேற்றிருந்தாலும், பாஜக அதை உரிமை கொண்டாட முடியாது. செலவு செய்து 2,000 பேரை காசிக்கு அனுப்பியிருக்கிறது. நியாயமாக, தமிழ்நாடு அறநிலையத்துறைக்குத்தான் பெருமை சேரும்.

பிரதமர் மோடி வேண்டுமானால் வரலாம். ஆனால், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தது தமிழக அரசுதான். பாஜக இதில் உரிமை கொண்டாட நினைப்பது வாடகை வீட்டுக்கு உரிமை கொண்டாடுவதுபோல் ஆகும். மகாத்மா காந்தி நாட்டு மக்களிடம் உண்மையைப் பேசினார். நேர்மையைப் பேசினார். மக்களைத் தன்பால் கவர்ந்தார் என்பதற்காகச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சத்தியமூர்த்தி பவன் - காங்கிரஸ்
சத்தியமூர்த்தி பவன் - காங்கிரஸ்

ராகுல் காந்தியும் அதே பாதையில் பயணிக்கிறார். அதே பாதையில் செயல்படுகிறார். ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொள்வதால் மக்களிடமுள்ள வரவேற்பைப் பார்த்து பலர் அச்சத்தில் மிரண்டுபோயிருக்கின்றனர். அவரைத் தடுத்து நிறுத்தவே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்., பாஜக சித்தாந்தத்தை, மதவெறித் தாக்குதல்களைத் தடுப்பது என்ற ஒற்றைக் கொள்கையில் இணைந்து எங்கள் கூட்டணி பயணிக்கிறது.

அதிமுக-வால் இந்தக் கொள்கையை எப்போதும் ஏற்க முடியாது. அதனால்தான் அந்தக் கட்சி பலவீனப்பட்டுக் கிடக்கிறது. அதிமுக மெகா கூட்டணி அமைத்தாலும் அதற்கு ஒரு பயனும் கிடைக்காது. ஏனென்றால், அதை இயக்கப்போவது மோடியும், அமித் ஷாவும்தான். அவர்களை, அவர்களே எப்போது இயக்க ஆரம்பிக்கிறார்களோ அப்போதுதான் தமிழக மக்கள் திரும்பிப் பார்ப்பார்கள். இன்னொருவரின் இயக்கத்தில் அவர்கள் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் தமிழகத்தில் பழைய வலிமையை அதிமுக பெற முடியாது" என்றார்.