Published:Updated:

``காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளும் மக்களிடையே பிளவை ஏற்படுத்துகின்றன!" - குலாம் நபி ஆசாத்

குலாம் நபி ஆசாத்

`காங்கிரஸ் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும் மக்களிடையே பிளவை ஏற்படுத்துகின்றன’ என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்திருக்கிறார்.

``காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளும் மக்களிடையே பிளவை ஏற்படுத்துகின்றன!" - குலாம் நபி ஆசாத்

`காங்கிரஸ் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும் மக்களிடையே பிளவை ஏற்படுத்துகின்றன’ என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
குலாம் நபி ஆசாத்

`தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்துக்கு ஹரியானா, மத்தியப் பிரதேசம், திரிபுரா, கோவா, கர்நாடகா, உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் வரிச்சலுகை வழங்கின. `காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் 1990-களில் காஷ்மீரிலிருந்து வெளியேற்றப்பட்ட காஷ்மீர் பண்டிட்கள் குறித்த உண்மைச் சம்பவத்தைத் தழுவிய கதை அம்சத்தைக்கொண்டது எனக் கூறப்படுகிறது. ` `தி காஷ்மீர் ஃபைல்ஸ்' போன்ற திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும்’ என முன்னதாக பிரதமர் மோடி பேசியிருந்தார்.

The Kashmir Files | தி காஷ்மீர் ஃபைல்ஸ்
The Kashmir Files | தி காஷ்மீர் ஃபைல்ஸ்

இந்த நிலையில், இந்தத் திரைப்படம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கருத்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாகப் பேசிய அவர், ``மகாத்மா காந்தி இந்துவாக இருந்தாலும் அவர் மதச்சார்பற்றவர் என்பதை நான் நம்புகிறேன். ஜம்மு காஷ்மீரில் நடந்த சம்பவங்களுக்கு பாகிஸ்தானும் தீவிரவாதமும்தான் காரணம். அந்தத் தாக்குதல் இந்துக்கள், காஷ்மீரி பண்டிதர்கள், காஷ்மீரி முஸ்லிம்கள், டோக்ராக்கள் என அனைவரையும் பாதித்திருக்கிறது.

குலாம் நபி ஆசாத்
குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் மதம், சாதி, பிற விஷயங்களின் அடிப்படையில் மக்களிடையே பிளவை ஏற்படுத்துகின்றன. காங்கிரஸ் கட்சி உட்பட எந்தக் கட்சியையும் நான் மன்னிக்கவில்லை. சாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும்" என்றார்.