Published:Updated:

நெல்லை: திமுக-மதிமுக தொண்டர்களிடையே மோதல்! - கார் கண்ணாடி உடைப்பால் பதற்றம்

திமுக-மதிமுக தொண்டர்களிடையே மோதல்!

உள்ளாட்சித் தேர்தலின்போது கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தி.மு.க-ம.தி.மு.க-வினர் தனித்தனியாகப் போட்டியிட்டார்கள். அப்போது தொடங்கிய மோதல் இப்போது வரை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

நெல்லை: திமுக-மதிமுக தொண்டர்களிடையே மோதல்! - கார் கண்ணாடி உடைப்பால் பதற்றம்

உள்ளாட்சித் தேர்தலின்போது கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தி.மு.க-ம.தி.மு.க-வினர் தனித்தனியாகப் போட்டியிட்டார்கள். அப்போது தொடங்கிய மோதல் இப்போது வரை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

Published:Updated:
திமுக-மதிமுக தொண்டர்களிடையே மோதல்!

உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோது நெல்லை மாவட்டத்தின் சில இடங்களில் தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியினருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தாங்கள் விரும்பிய இடங்களை தி.மு.க ஒதுக்க மறுத்ததால், சில இடங்களில் கூட்டணிக் கட்சியினர் தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவிக்கும் நிலைமை ஏற்பட்டது. இது கூட்டணிக் கட்சியினரிடம் மோதல் போக்கை உருவாக்கியது.

நெல்லை மாவட்டம், களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடி பேரூராட்சியின் 7-வது வார்டில் போட்டியிட ம.தி.மு.க விரும்பியது. ஆனால், தி.மு.க-வினர் அந்தக் கட்சிக்கு விட்டுக்கொடுக்க மறுத்துவிட்டனர். அதனால் ம.தி.மு.க தரப்பில் அந்த வார்டில் தனியாக வேட்பாளர் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன் பின்னர் கூட்டணிக் கட்சியினருக்கு இடையே தொடர்ச்சியாக கருத்து வேறுபாடு நிலவிவந்தது. அத்துடன், திருக்குறுங்குடியில் இரு கட்சியினரும் ஒருவருக்கொருவர் நேரடியாகப் புகார் தெரிவித்துவருகின்றனர். சமூக வலைதளங்களிலும் அவதூறான கருத்துகளைப் பதிவிட்டுவருவதால் இரு தரப்பினரும் ஒருவர்மீது ஒருவர் கொதிப்பில் இருந்தார்கள்.

மோதலில் கார் கண்ணாடி உடைப்பு
மோதலில் கார் கண்ணாடி உடைப்பு

இந்த நிலையில், திருக்குறுங்குடி மேலரதவீதி சந்திப்பில் நின்றுகொண்டிருந்த ம.தி.மு.க நிர்வாகிகளுக்கும், தி.மு.க-வினருக்கும் இடையே இந்த முன்விரோதம் தொடர்பாக தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது இரு தரப்பினரும் ஆக்ரோஷமாகப் பேசியதால் மோதல் முற்றியது. ஒருகட்டத்தில் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தி.மு.க ஒன்றியச் செயலாளர் செல்வ கருணாநிதி காரின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

கூட்டணிக் கட்சியினருக்கு இடையே நடந்த இந்த மோதலைப் பார்த்ததும் திருக்குறுங்குடி போலீஸாரும், கட்சிப் பிரமுகர்களும் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினார்கள். காவல் நிலையம் அருகிலேயே இந்தச் சம்பவம் நடந்ததால் அந்தப் பகுதி பொதுமக்கள் அதிருப்தி அடைந்தார்கள்.

ஆவேசமாகப் பேசும் நிர்வாகிகள்
ஆவேசமாகப் பேசும் நிர்வாகிகள்

இந்தச் சம்பவம் தொடர்பாக திருக்குறுங்குடி போலீஸார், களக்காடு வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் செல்வகருணாநிதி, ம.தி.மு.க ஒன்றியச் செயலாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 11 பேர்மீது வழக்கு பதிவுசெய்தனர். கூட்டணிக் கட்சியினருக்கு இடையே நடந்த மோதல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவின. அதைப் பார்த்த இரு கட்சிகளின் தொண்டர்களும் அதிருப்தியடைந்தனர்.