Published:Updated:

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் வாக்குவாதம் - போராட்டம் நடத்திய பாஜக, விசிக-வினர் கைது!

அம்பேத்கர் சிலை
News
அம்பேத்கர் சிலை

கும்பகோணத்தில், அம்பேத்கர் காவி சட்டை மற்றும் நெற்றியில் விபூதி, குங்குமம் வைத்திருப்பது போன்ற போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் வாக்குவாதம் - போராட்டம் நடத்திய பாஜக, விசிக-வினர் கைது!

கும்பகோணத்தில், அம்பேத்கர் காவி சட்டை மற்றும் நெற்றியில் விபூதி, குங்குமம் வைத்திருப்பது போன்ற போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Published:Updated:
அம்பேத்கர் சிலை
News
அம்பேத்கர் சிலை

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் அவரின் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பா.ஜ.கவினரை, மாலை அணிவிக்க கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சாலை மறியல் போராட்டம் நடத்திய இருகட்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பா.ஜ.கவினர் சாலை மறியல் போராட்டம்
பா.ஜ.கவினர் சாலை மறியல் போராட்டம்

சட்டமேதை அம்பேத்கரின் 66-வது நினைவு தினத்தையொட்டி நாடு முழுவதும் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தஞ்சாவூரில் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஆதிதமிழர் பாதுகாப்பு பேரவை மற்றும் டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை அலுவலகத்தின் முகப்பில் 7 அடி உயர அம்பேத்கர் சிலை உள்ளது. இன்று காலை முதலே பல்வேறு கட்சியினர் அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்த நிலையில் பா.ஜ.கவை சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சொக்கா. ரவி தலைமையிலான கட்சியினர் மற்றும் ஆதிதமிழர் பேரவை அமைப்பை சேர்ந்தவர்கள் பா.ஜ.கவினரை மாலை அணிவிக்க கூடாது என வலியுறுத்தினர்.

வி.சி.கவினர் போராட்டம்
வி.சி.கவினர் போராட்டம்

`பல்வேறு கட்சிகள் மாலை அணிவித்த நிலையில் ஏன் எங்களை மட்டும் தடுக்கிறீர்கள். நாங்கள் மாலை அணிவிப்போம்’ என பா.ஜ.கவினர் தெரிவித்தனர். இதயடுத்து இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் கோஷங்கள் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் இருதரப்புக்கும் சமாதானம் செய்தனர். ``நான்கு ஆண்டுகளாக நாங்கள் மாலை அணிவித்து வருகிறோம் இப்போது மட்டும் ஏன் தடுக்கிறார்கள், நாங்கள் மாலை அணிவிப்போம்” என பா.ஜ.கவினர் தொடர்ந்து கூறினர்.

வி.சி.கவினர் மாலை அணிவிக்க விடாமல் அம்பேத்கர் சிலையை சுற்றி நின்று கொண்டனர். ``பொதுஇடத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவிக்க வந்திருக்கிறோம், அவங்க இடத்தில் சிலை இருந்தால் நாங்க வரமாட்டோம்” என பா.ஜ.கவினர் போலீஸாரிடம் கூறினர். இதனை தொடர்ந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்போம் என பா.ஜ.கவினரும், மாலை அணிவிக்க விடமாட்டோம் என வி.சி.கவினரும் சாலையின் இருபுறமும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கிட்டதட்ட மூன்று மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் தொடர்ந்தது.

காவி உடையில் அம்பேத்கர் போஸ்டர்
காவி உடையில் அம்பேத்கர் போஸ்டர்

இதையடுத்து எஸ்.பி. ரவளிபிரியா சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். இரு கட்சியை சேர்ந்தவர்களையும் கலைந்து போகுமாறு கூறினார். ஆனால் யாரும் செல்லவில்லை. பின்னர், பாஜகவைச் சேர்ந்த 70 பேர், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 15 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து அந்த இடத்தில் யாரும் நிற்க கூடாது என கூறி சிலையை சுற்றிலும் போலீஸார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முன்னதாக கும்பகோணத்தில், அம்பேத்கர் காவி சட்டை மற்றும் நெற்றியில் விபூதி, குங்குமம் வைத்திருப்பது போன்ற போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரான குருமூர்த்தி அம்பேத்கர் காவி சட்டையுடன் அணிந்திருப்பது போன்ற போஸ்டர் அச்சடித்து நகரம் முழுவதும் ஒட்டினார்.அந்த போஸ்டர் போலீஸாரல் கிழிக்கப்பட்டது. மேலும் குருமூர்த்தி வீட்டு காவலில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.