Published:Updated:

`ஒரு வரியாவது உங்களால் காட்டமுடியுமா...?!' - ராகுலுக்கு சவால்விட்ட அமித் ஷா #CAA

அமித் ஷா
அமித் ஷா ( ANI )

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் யாருடைய குடியுரிமையாவது பறிக்கும் வகையில் இருக்கும் ஒரு வாக்கியத்தைக் காட்ட முடியுமா என ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சவால் விடுத்திருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அஸ்ஸாம், திரிபுரா, நாகாலாந்து தொடங்கி மேற்குவங்கம், டெல்லி என போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பிலும் போராட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
`Holy Land' சாவர்க்கர்..! ராகுல் காந்தியுடன் பி.ஜே.பி-யை முட்டி மோத வைக்கும் சாவர்க்கர் யார்?

இந்த நிலையில், இமாசலப்பிரதேச மாநிலம் ஷிம்லாவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்துப் பேசியிருக்கிறார். அம்மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியமைத்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமித் ஷா, ``நாட்டில் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் சிறுபான்மையினரின் குடியுரிமை பறிக்கப்படும் என காங்கிரஸ் உள்ளிட்டோர் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.

ராகுல் காந்திக்கு நான் சவால் விடுகிறேன். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில், யாருடைய குடியுரிமையாவது பறிப்பது தொடர்பாக ஒரு வரியை உங்களால் காட்டமுடியுமா? குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் எந்தவொரு நபரின் குடியுரிமையையும் பறிக்கும் வகையில் வரையறைகள் இடம்பெறவில்லை'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு