Published:Updated:

ப.சிதம்பரம் ஓவர்... அடுத்தது அகமது படேல்... அமித் ஷாவின் சபத அரசியல்!

அமித் ஷா, அகமது படேல்
அமித் ஷா, அகமது படேல்

2004 -2014 காலகட்டங்களில், தங்களை அரசியல் ரீதியாக ஒழிக்க காங்கிரஸ் முயற்சித்ததை அமித் ஷா-வும் மோடியும் மறக்கவே இல்லை. அதன் வெளிப்பாடுதான் அடுத்தடுத்து பாயும் வழக்குகள்...

ஜூலை 2010-ம் ஆண்டு, குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா, சொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் சிபிஐ -யால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நேரம். மோடியின் அமைச்சரவையில் இருந்த பலரும் அமித் ஷாவின் பெயரை உச்சரிக்கக் கூட தயங்கினர். குஜராத் பி.ஜே.பி அமித் ஷா-விடமிருந்து முற்றிலுமாக ஒதுங்கியிருந்தது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, குஜராத் உயர் நீதிமன்றம் அமித் ஷா-வுக்கு பெயில் அளித்தாலும், பிரச்னை அதோடு முடியவில்லை.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்
‘ஜவஹர் பவன்’ திட்டத்திற்குப் பிறகு ராஜீவ் காந்தி குடும்பமும் அகமது படேலும் நெருக்கமாகினர். இந்த நெருக்கம், பின்னாளில் அவரை காங்கிரஸ் அதிகார வட்டத்தின் நம்பர் 2 இடத்திற்கு கொண்டுசென்றது.

அமித் ஷா குஜராத்தில் இருந்தால் அதிகாரத்தைப் பயன்படுத்தி சாட்சிகளைக் கலைத்துவிடுவார் என சிபிஐ, நீதிமன்றத்தை அணுக, பெயில் கிடைத்த அடுத்த நாளே, குஜராத் மாநிலத்தில் அமித் ஷா இருப்பதற்கு தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இரண்டு வருடங்கள், டெல்லியிலுள்ள குஜராத் பவனில் எட்டுக்கு பத்து அறையில் வனவாசம் இருந்தார் அமித் ஷா. தன்னை குஜராத்தைவிட்டே ஓடவைத்ததற்கும் சிறையில் அடைத்ததற்கும் அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் சோனியா காந்தியின் ஆலோச்கர் அகமது படேலும் தான் காரணம் என்று அமித் ஷா-வின் மனதுக்குள் ரணம் பூத்தது. இன்று மோடிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் அமித் ஷா, சம்பவம் நடந்து பத்து வருடங்களாகிவிட்டாலும் இன்றுவரை அதை மறக்கவே இல்லை.

அமித் ஷா
அமித் ஷா
குடிசைகளை மறைக்க சுவர்... மோடி - ட்ரம்ப் சந்திப்பால் சர்ச்சையில் அகமதாபாத் மாநகராட்சி!

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் 100 நாள்களையும் தாண்டி சிறையில் இருந்து வெளியே வந்துவிட்டார் ப.சிதம்பரம். லிஸ்ட்டில் மீதமிருப்பது அகமது படேல் மட்டும்தான். இப்போது, 400 கோடி ரூபாய் ஹவாலா பணப்பறிமாற்றம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி அகமது படேலுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இவ்வழக்கு அமலாக்கத்துறை, சிபிஐ-க்கு மாற்றப்பட்டு, அகமது படேலையும் சிறையில் அடைக்கும் வரை அமித் ஷா ஓயமாட்டார் என பி.ஜே.பி தலைவர்களே நம்மிடம் முணுமுணுக்கிறார்கள்.

யார் இந்த அகமது படேல்?

அகமது படேல்
அகமது படேல்

குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தைச் சேர்ந்தவரான அகமது படேல், அம்மாவட்டத்தின் காங்கிரஸ் எம்.பி-யாக மூன்று முறை (1977-1989) செயல்பட்டுள்ளார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, கம்ப்யூட்டர் உட்பட நவீன தொழில்நுட்ப வசதிகளுடன்கூடிய கட்டடம் டெல்லியில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. இதற்கான தொகை, காங்கிரஸ் எம்.பி -க்களிடம் இருந்தும், ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடத்தியதில் இருந்தும் பெறப்பட்டது. கட்டடம் கட்டுவதற்கான முழு பொறுப்பையும் அகமது படேலிடம் ராஜீவ் காந்தி ஒப்படைத்தார்.

`கப்சிப்' சிதம்பரம், `புலியா பூனையா' ரஜினி, சிக்கலில் தேனி எம்.பி... கழுகாரின் அரசியல் அப்டேட்ஸ்!

ராஜீவ் காந்தியே அசந்துபோகும் வண்ணம் ஒரே வருடத்தில் புதிய கட்டடத்தைக் கட்டிமுடித்து ஒப்படைத்தார் அகமது படேல். இன்று, ‘ஜவஹர் பவன்’ என்கிற பெயரில் அந்தக் கட்டடம் பல புதிய சிந்தனைக் கூட்டங்களுக்கு வித்தாகச் செயல்படுகிறது. ‘ஜவஹர் பவன்’ திட்டத்திற்குப் பிறகு, ராஜீவ் காந்தி குடும்பமும் அகமது படேலும் நெருக்கமாகினர். இந்த நெருக்கம், பின்னாளில் அவரை காங்கிரஸ் அதிகாரவட்டத்தின் நம்பர் 2 இடத்திற்குக் கொண்டு சென்றது.

சோனியாவின் நம்பிக்கை நட்சத்திரம்

1989-க்குப் பிறகு மக்களவைக்கு அகமது படேல் தேர்வாகவில்லை. ராஜீவ் காந்தி மறைந்த பிறகு, சோனியா காந்தியிடம் நம்பிக்கையை அதிகரித்துக்கொண்ட அகமது படேல், 1993-ல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வானார். குஜராத் காங்கிரஸ் தலைவர்களில், முஸ்லிம் சமூக தலைவர்களாக இஷான் ஜஃப்ரி, அகமது படேல் இருவர் மட்டுமே இருந்தனர். 2002 குஜராத் கலவரத்தின்போது, இஷான் ஜஃப்ரி கொல்லப்பட்டார். அதன்பிறகு, அம்மாநிலத்தில் மிச்சமிருந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அகமதுபடேல் மட்டும்தான்.

சோனியா காந்தியுடன் அகமது படேல்
சோனியா காந்தியுடன் அகமது படேல்

அகமது படேலுக்கு இன்னொரு முகமும் உண்டு. மீடியாக்களில் தனது முகம் வந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருப்பார். மக்களைத் திரட்டி தன்னை தலைவராக்கிக்கொள்ளும் முயற்சியில் இறங்க மாட்டார். பி.ஜே.பி உட்பட எல்லா கட்சியிலும் அவருக்கு நண்பர்கள் உண்டு. இந்த நட்புதான், அமித் ஷா எவ்வளவோ தோற்கடிக்க முயன்றும் 2017-ல் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் அகமது படேலை வெற்றிபெற வைத்தது.

சோனியா காந்தியின் மிகுந்த நம்பிக்கையைப் பெற்றவர் என்பதால், 2004-2014 காலகட்டத்தில், பல அரசியல் காய் நகர்த்தல்கள் அகமது படேல் மூலமாகவே நடைபெற்றன. 2002 கலவரத்துக்குப் பிறகு, குஜராத்தின் முதல்வராக மோடி வெற்றி பெற்றிருந்தாலும், மத்தியில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கடும் குடைச்சல் கொடுத்தது. இதற்கெல்லாம் சிபிஐ-யும் அதற்கு தலைமை பொறுப்பு வகிக்கும் அன்றைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் தான் காரணமென பி.ஜே.பி தலைவர்கள் கொதித்தெழுந்தார்கள். ஆனால், அகமது படேலும் பின்னணியில் இருப்பதை அமித் ஷா உணர்ந்துகொண்டார்.

அகமது படேல்
அகமது படேல்
மிஸ்டர் கழுகு: மிட்நைட் மீட்டிங்... ரஜினியைச் சந்தித்த அமைச்சர்கள்?

டெல்லியின் அரசியல் நகர்வுகளை அறிந்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், “2009 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் எங்களையெல்லாம் அழைத்த அகமது படேல், ‘அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் நாம் எதிர்பார்க்காத வகையில் கடுமையாக இருக்கும். மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்குத் தயாராகிறார்கள். மோடி வந்தால் கூடவே அமித் ஷாவும் வருவார். நமக்கு பெரும் சிக்கல் காத்திருக்கிறது’ என்றார். அவர் இவ்வாறு கூறிய சமயத்தில், அத்வானியைத்தான் பிரதமர் வேட்பாளராக பி.ஜே.பி முன்னிறுத்தியிருந்தது. மோடி பிரதமர் வேட்பாளர் என்கிற கோஷம் எங்குமே எழவில்லை. இப்போதுதான் அகமது படேலின் பேச்சு புரிகிறது” என்றார்.

2004 - 2014 காலகட்டங்களில், தங்களை அரசியல் ரீதியாக ஒழிக்க காங்கிரஸ் முயற்சித்ததை அமித் ஷாவும் மோடியும் மறக்கவே இல்லை. இதன் வெளிப்பாடுதான் அடுத்தடுத்து பாயும் வருமான வரித்துறை சோதனைகளும் சிபிஐ கைதுகளும் என்கிறது, டெல்லி சோர்ஸ்.

அமித் ஷா - அகமது படேல் மோதல் பின்னணி

கோடி, அமித் ஷா
கோடி, அமித் ஷா

2004 - 2014 காலகட்டங்களில், தங்களை அரசியல் ரீதியாக ஒழிக்க காங்கிரஸ் முயற்சித்ததை அமித் ஷாவும் மோடியும் மறக்கவே இல்லை. இதன்வெளிப்பாடுதான் அடுத்தடுத்து பாயும் வருமான வரித்துறை சோதனைகளும் சிபிஐ கைதுகளும் என்கிறது டெல்லி சோர்ஸ். இன்று, காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக உயர்ந்திருக்கும் அகமது படேலிடம் தான், காங்கிரஸ் கட்சிக்கு நிதி திரட்டும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அகமது படேலை கட்சி அதிகாரத்தில் அமரவைக்க ராகுல் காந்திக்கு விருப்பம் இல்லையென்றாலும், சோனியா காந்தியின் அறிவுறுத்தலாலும் வேறு தகுதியான நபர்கள் இல்லையென்பதாலும் அகமது படேலுக்கு இப்பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

2024 நாடாளுமன்றத் தேர்தலில், மோடி அல்லது அமித் ஷாவை எதிர்த்து பிரதமர் வேட்பாளராக யாரெல்லாம் வரக் கூடுமோ, அவர்களையெல்லாம் இப்போதே அடக்கிவைக்க இருவரும் முடிவெடுத்துவிட்டனராம். காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி அல்லது பிரியங்கா காந்தி முன்னிறுத்தப்படவில்லை என்றால், பிரதமர் வேட்பாளராகும் வாய்ப்பு ப.சிதம்பரத்துக்கே அதிகமாக உள்ளது. இதற்கு நிதிதிரட்டும் பொறுப்பு அகமது படேலிடம் உள்ளது. இதற்காகத்தான் இருவரையும் இப்போதே அடக்கிவைக்க பி.ஜே.பி தலைவர்கள் மெனக்கெடுவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சபத அரசியலில் ஜெயிக்கப்போவது அமித் ஷாவா அல்லது அகமது படேலா என்பது போகப்போகத் தெரிந்துவிடும்.

அடுத்த கட்டுரைக்கு