அ.ம.மு.க-வில் லேட்டஸ்ட் சலசலப்பு, பெங்களூரு புகழேந்தி. `அ.ம.மு.க-வின் கர்நாடக மாநிலச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான புகழேந்தி, வேறு கட்சிக்குச் செல்லப்போகிறார்’ என்ற தகவல், சில நாள்களாகவே அரசியல் வட்டாரத்தில் சுற்றிவருகிறது. உண்மை என்ன என்பதை அறிய, புழேந்தியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை, கோவையில் நீங்கள் சந்தித்துப் பேசியதாக வெளிவந்த வீடியோவின் பின்னணி என்ன?”

“கட்சிக்காகப் பாடுபட்டவர்களை, அ.தி.மு.க எம்.எல்.ஏ-வுடன் தொடர்புவைத்திருந்ததாகச் சொல்லி கட்சியைவிட்டு நீக்கியிருக்கிறார்கள். இந்த அபத்தமான குற்றச்சாட்டு தொடர்பாக நான் பேசிக்கொண்டிருந்ததை, எனக்கே தெரியாமல் வீடியோ பதிவுசெய்து, எடிட் செய்து வெளியிட்டிருக்கிறது அ.ம.மு.க ஐ.டி விங். மற்ற கட்சிகளில் எல்லாம் சொந்த கட்சியை வளர்க்கத்தான் பாடுபடுகிறது ஐ.டி விங். இங்கு மட்டும்தான் சொந்த கட்சியினரையே அவமானப்படுத்தும் வேலையைச் செய்கிறது. தினகரன் கேட்டால் விளக்கம் அளிக்கத் தயார்.”

“நீங்கள், ‘தினகரனை அரசியலுக்கு மீண்டும் கொண்டுவந்ததே நான்தான்’ என்று சொல்வதை அ.ம.மு.க-வினரே விமர்சிக்கிறார்களே?”

“ஊர்தோறும் கூட்டங்கள் நடத்தி, தினகரனின் பெயரை முன்னிறுத்தியது நான்தான். அ.ம.மு.க உருவானதில் என் பங்களிப்பும் இருக்கிறது. அப்புறம் என்ன..?”

“நீங்கள் சசிகலாவின் நம்பிக்கைக்குரியவராக இருப்பது தினகரனுக்குப் பிடிக்கவில்லையா?”

``அப்படியில்லை. யாரோ தவறான தகவலைச் சொல் கிறார்கள். கட்சியிலிருந்து வெளியே செல்கிறவர்களைத்தான் நான் தடுக்க முயற்சி செய்கிறேன். அது அவருக்குப் பிடிக்கவில்லையோ என்னவோ!”

“தினகரன் தலைமையை இப்போதும் ஏற்றுகொள்கிறீர்களா?”

“சின்னம்மா அடையாளம் காட்டிய தினகரன் தலைமையை ஏற்றுக்கொண்டு, இப்போது வரை அ.ம.மு.க-வில்தான் இருக்கிறேன். சமீபத்தில் சின்னம்மாவைப் பார்க்க வந்தபோதுகூட தினகரன் என்னிடம் நன்றாகத்தான் பேசினார்.”

“அ.ம.மு.க-வில் நடக்கும் விஷயங்கள் சசிகலா கவனத்துக்குச் செல்கின்றனவா?”

“பெரும்பாலான விஷயங்கள் செல்கின்றன. கட்சியைவிட்டு முக்கிய நிர்வாகிகள் வெளியேறுவது சின்னம்மாவுக்குக் கவலையை அளிக்கிறது. ‘நீங்கள் வெளியில் வந்தால்தான் கட்சி சரியாக இருக்கும்’ என்று அவரிடம் கூறியிருக்கிறேன். விரைவில் அவர் வெளியே வந்துவிடுவார். அவரே அ.தி.மு.க., அ.ம.மு.க-வை இணைத்து தலைமை தாங்குவார்.”

“நீங்கள் வேறு கட்சிக்குப் போகப்போவதாகச் சொல்லப்படுகிறதே?”

“என் உடலில் ஓடுவது அ.தி.மு.க ரத்தம். அ.தி.மு.க - அ.ம.மு.க இணையும். அதனால் கட்சி மாறும் எண்ணமில்லை.”

“தினகரன் அறிவித்த செய்தித் தொடர்பாளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெறவில்லையே?”

“சின்னம்மாவின் சிபாரிசில்தான் கர்நாடக மாநிலச் செயலாளர் பொறுப்பும், செய்தித் தொடர்பாளர் பொறுப்பும் வழங்கப்பட்டன. அவற்றை யாரும் பறிக்க முடியாது. இந்தப் பட்டியலில் என் பெயர் ஏன் இல்லை எனத் தெரியவில்லை. இதில் உள்ள பாதிப்பேர் என் அன்பைப் பெற்றவர்கள்தான்.”