Published:Updated:

`பரோல் இல்லை; கொரோனா பிரச்னைக்குப் பின் நல்ல செய்தி!’- சசிகலா விவகாரத்தில் தொண்டர்கள் உற்சாகம்

சசிகலா
News
சசிகலா

`சின்னம்மாவிடம் அ.தி.மு.க-வில் உள்ள பல அமைச்சர்கள் பேசிக்கொண்டிருப்பது உண்மைதான். இதில் எந்த மாற்றமும் இல்லை. கொரோனா பிரச்னை முடிந்த பிறகு நல்ல செய்தி வரும்’

பதினைந்து நாள்கள் பரோலில் சசிகலா வெளியே வருகிறார் என்றும் அ.தி.மு.க-வில் உள்ள முக்கிய அமைச்சர்கள் சிலர் அவரிடம் பேசிக்கொண்டிருப்பதாகவும் ஒரு தகவல் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. திவாகரன் மகனின் திருமணத்துக்கு வராதவர், அவரின் கணவர் நடராஜன் இறந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அதற்காக அவர் கண்டிப்பாக பரோலில் வெளியே வர இருக்கிறார் என்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

சசிகலா
சசிகலா

சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. அவரின் கணவரும் புதிய பார்வை ஆசிரியருமான நடராசன் உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் காலமானார். அவர் இறந்து ஓர் ஆண்டு நிறைவடைகிறது. இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக சசிகலா பரோலில் வந்தார். அதன்பின்னர், தற்பொழுது ஒரு வருடம் கடந்துவிட்டது. நெருங்கிய உறவினர்களைக் கொண்டு சின்ன நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய நினைத்திருக்கிறார்கள். அத்தோடு சில மாதங்களுக்கு முன்பு சசிகலாவை சிறையில் சந்தித்துப் பேசியிருக்கிறார் திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஜெய்ஆனந்த்
ஜெய்ஆனந்த்

அவரது திருமண நிகழ்ச்சியைப்பற்றி எடுத்துச் சொல்லியிருக்கிறார். அதற்கு அவர்,`திருமணத்துக்கு நிச்சயம் வருகிறேன்’ என்று சொல்லியிருந்தார். ஆனால், திவாகரனின் தனிமனித விமர்சன பேச்சால் திருமணத்துக்கு சில நாள்களுக்கு முன்னதாக, `யாரும் கலந்துகொள்ளக் கூடாது’ என சசிகலா தடை போட்டதாகச் சொல்கிறார்கள். `ஜெய்ஆனந்த்தைத் தூக்கிவளர்த்தவர் என்பதால் கூடுதல் பாசம் இருக்கும். அதேபோல் குடும்பத்தில் ஒரு சில பிரச்னைகள் நடக்கிறது. அதைச் சரிகட்டவும் வெளியில் வரப்போகிறார் சசிகலா’ என்று மன்னார்குடி குடும்ப வட்டாரங்களில் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.

சசிகலா வெளியில் வருவது உண்மையா என மன்னார்குடி குடும்ப வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம். ``கொரோனா பிரச்னையால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அசாதாரண சூழல் நிலவிக்கொண்டிருக்கும் வேளையில் இப்போது பரோலில் வெளியே வருவது சாத்தியமா என நீங்களே நினைத்துப் பாருங்கள். ராயப்பேட்டையில் அ.ம.மு.க புதிய அலுவலகம் திறந்தபோதுகூட தினகரன், `சசிகலாவை சிறையிலிருந்து வெளியில் எடுக்க முயற்சி நடந்துகொண்டிருக்கிறது’ என்றார். அது உண்மைதான். `சிறையிலிருந்து வெளியே வந்தால், விடுதலையாகித்தான் வர வேண்டும்’ என்பதில் சசிகலா உறுதியாக இருக்கிறார்.

சசிகலா - திவாகரன்
சசிகலா - திவாகரன்

நன்னடத்தை விதிகளின்கீழ் விடுதலை செய்யக்கோரி சிறைத்துறையிடம் கடிதம் அளிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இந்த நேரத்தில் பரோலில் வந்தால் விடுதலை தள்ளிப் போகலாம் என்றுதான் யோசித்துக்கொண்டிருக்கிறோம். கொரோனா பிரச்னைக்கு முன்பு பரோலில் எடுக்க முயற்சி செய்தது உண்மைதான். ஆனால், அதை இப்போது சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல், சின்னம்மாவிடம் அ.தி.மு.க-வில் உள்ள பல அமைச்சர்கள் பேசிக்கொண்டிருப்பது உண்மைதான். இதில் எந்த மாற்றமும் இல்லை. கொரோனா பிரச்னை முடிந்த பிறகு நல்ல செய்தி வரும்" என்று முடித்துக்கொண்டார்கள்.