Published:Updated:

`அதெல்லாம் முடியாது சார்...கோர்ட்டுக்குப் போங்க!' -சின்னத்துக்காகத் தினகரனைத் தவிக்கவிடும் ஆணையம்

தினகரன்
News
தினகரன்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்தரை சதவிகித வாக்குகளைப் பெற்று தற்போது கட்சியைப் பதிவு செய்துவிட்டோம். பொதுச்சின்னம் கொடுங்கள் என்று கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?

தினகரனுக்கு போதாத காலமோ என்னமோ தெரியவில்லை, தனிச்சின்னம் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். `கமல் தனிச்சின்னம் கேட்கிறார். உடனே கிடைக்கிறது. ஆனால், தினகரனுக்கு மட்டும் ஒதுக்காதற்கு என்ன காரணம்?' என்ற கேள்வியும் அ.ம.மு.க வட்டாரத்தில் கேட்கத் தொடங்கியிருக்கிறது.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

தமிழக தேர்தல் ஆணையமும் அ.தி.மு.க அரசின் கைப்பாவையாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகக் கொதிக்கின்றனர் அ.ம.மு.க நிர்வாகிகள். `உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வசதியாக பொதுச்சின்னம் ஒதுக்க வேண்டும்' என அ.ம.மு.க-வினர் விடுத்த கோரிக்கையை ஏற்க மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நாடாளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.க வேட்பாளர்கள் சுயேச்சையாகப் போட்டியிட்டனர். கட்சியாகப் பதிவு செய்யப்படாததால் பொதுச் சின்னம் கிடைக்கவில்லை. இதனால், அடுத்துவந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலையும் புறக்கணித்தார் தினகரன். இந்நிலையில், அ.ம.மு.க-வைக் கட்சியாகப் பதிவு செய்ய இந்தியத் தேர்தல் ஆணையத்தில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி விண்ணப்பித்தார், டி.டி.வி.தினகரன்.

மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்

இதற்கான ஆவணங்கள் அக்டோபர் மாதம் 24-ம் தேதி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்தப் பெயரில் கட்சியைப் பதிவு செய்ய ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்தவர்களின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, அ.ம.மு.க-வுக்கு அரசியல் கட்சி என்ற அங்கீகாரத்தை டிசம்பர் 7-ம் தேதியன்று வழங்கியது, தேர்தல் ஆணையம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனிக்கட்சியாகப் பதிவு செய்தும் உள்ளாட்சித் தேர்தலில் பொதுச் சின்னம் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் அ.ம.மு.க தொண்டர்கள். "அ.தி.மு.க அரசும் தேர்தல் ஆணையமும் இணைந்துகொண்டு தினகரனை ஒடுக்க நினைக்கிறார்கள்.

ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி
ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி

தற்பாேது கட்சி ஆரம்பித்த கமல், அவரது கட்சியைப் பதிவு செய்து சின்னத்தைப் பெறுகிறார். ஆனால், தினகரனுக்கு மட்டும் ஏன் இப்படிச் செய்கிறார்கள். இந்த ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது தெரிந்ததால்தான் உள்ளாட்சித் தேர்தலை நடத்த பயப்படுகிறார்கள்" என்றதோடு முடித்துக் கொண்டனர்.

இந்த விவகாரம் குறித்து அ.ம.மு.க மாநில பொருளாளர் வெற்றிவேலிடம் பேசினோம். "தேர்தல் ஆணையமா இல்லை எடப்பாடி ஆணையமா எனத் தெரியவில்லை. எங்களுக்கு முதலில் தொப்பி, குக்கர், பரிசுப்பெட்டகம் எனப் பல சின்னங்களைப் பெற்று தேர்தலைச் சந்தித்தோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்தரை சதவிகித வாக்குகளைப் பெற்று தற்போது கட்சியைப் பதிவு செய்துவிட்டோம். பொதுச்சின்னம் கொடுங்கள் என்று கேட்பதில் என்ன தவறு இருக்கிறது. இப்படியிருக்கும் சூழலில் ஏன் எங்களுக்கு தனிச்சின்னம் வழங்குவதில் தேர்தல் ஆணையம் கடுமையான போக்கைக் கடைப்பிடிக்கிறது?

வெற்றிவேல்
வெற்றிவேல்

தேர்தல் ஆணையத்தில் இல்லாத சின்னத்தைக் கேட்கக்கூடாது என்பது விதி. நாங்களும் இல்லாத சின்னத்தைக் கேட்கவில்லை. எடுத்துக்காட்டாகக் குக்கரோ, பரிசுப்பெட்டகமோ இல்லை என்றால் பரவாயில்லை. ஒரே சின்னமாக பொதுச் சின்னத்தைக் கொடுங்கள் என்று கேட்கிறோம்.

` அதெல்லாம் முடியாது சார்.. நீங்கள் கோர்ட்டுக்குப் போங்க' என்று அசால்ட்டாகச் சொல்கின்றனர். `இதற்கு முன்னாடி நீங்கள் கோர்ட்டுக்குச் சென்றுதானே சின்னம் வாங்கினீர்கள். இப்போதும் அப்படியே வாங்கிக் கொள்ளுங்கள்' என எங்களை நீதிமன்றத்துக்கு அனுப்புவதிலேயே குறியாக இருக்கிறார் தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி. தினகரனைப் பார்த்து எதற்காக இப்படி பயப்படுகிறார் எனத் தெரியவில்லை" என்றார் கொதிப்புடன்.