Published:Updated:

`மனதில்பட்டதைத் துணிந்து பேசியிருக்கிறார்!’ - ஓ.பி.எஸ் கருத்துக்கு டி.டி.வி.தினகரன் ஆதரவு

`ஓ.பி.எஸ் எப்போதுமே நியாயமாகவும் நிதானமாகவும் பேசக்கூடியவர்' - டி.டி.வி.தினகரன்.

சசிகலா குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ள கருத்து சரியானது என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தஞ்சாவூர் அருகே உள்ள பூண்டியில் தினகரனின் மகள் ஜெயஹரிணியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. இதற்காக, தஞ்சாவூர் வந்த தினகரன் மகர்நோன்புசாவடி மிஷன் தெருவிலுள்ள தனியார் ஹோட்டலில் தங்கினார். பின்னர், வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன் மருது சகோதரர்கள் குருபூஜை விழாவையொட்டி, அவர்களது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்,``மருது சகோதரர்கள் வீரத்துக்கும் விசுவாசத்துக்கும் பெயர்போனவர்கள். அப்படிப்பட்ட நல்ல மனிதர்களின் வழியில், நல்லவர்களுடன் இணைந்து அதிமுக-வை மீட்டெடுத்து தமிழ்நாட்டில் அம்மாவின் ஆட்சியைக் கொண்டுவருவதே எங்கள் இலக்கு.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

சசிகலாவை அதிமுக-வில் சேர்ப்பது குறித்து நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்வோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது சரியானதுதான். அவர் எப்போதுமே நியாயமாகவும் நிதானமாகவும் பேசக்கூடியவர். அவர் மனதில்பட்ட கருத்தைத் துணிந்து சொல்லியிருக்கிறார். அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுப்பதற்காகவும், தமிழ்நாட்டில் அம்மாவின் உண்மையான ஆட்சியை அமைப்பதற்காகவும்தான் அமமுக உருவாக்கப்பட்டது. இந்த முயற்சியை எங்களது இறுதி மூச்சு உள்ளவரை தொடர்வோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு