டி.டி.வி.தினகரனுக்கு தளபதிபோல் செயல்பட்ட பெங்களூரு புகழேந்தி, தற்போது தீராத பகையாளியாக மாறிவிட்டார். `புகழேந்தி, தி.மு.க-வில் இணையப்போகிறார்’ என்று பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில், சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் சந்தித்து அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இதற்கிடையில் புகழேந்தியை ‘24-ம் புலிகேசி’ என தினகரன் விமர்சிக்க, ‘தினகரனின் ரகசியங்களை வெளியிடுவேன்’ என புகழேந்தி கொதிக்க... அ.ம.மு.க-வில் அனல் பறக்கிறது!

தினகரனைப் புகழ்வதில் தன்னையடித்துக் கொள்ள ஆளே இல்லை எனும் அளவுக்குப் பேசியவர் புகழேந்தி. சில மாதங்களுக்கு முன்பு கோவையில் உள்ள அ.ம.மு.க நிர்வாகிகள் சிலரை கட்சியிலிருந்து வெளியேற்றினார் தினகரன். இதில் கோபமான புகழேந்தி, அ.ம.மு.க நிர்வாகிகள் சிலரிடம் தினகரனை விமர்சித்துப் பேசியுள்ளார். அதை வீடியோவாகப் பதிவுசெய்து லீக் செய்தது அ.ம.மு.க-வின் ஐ.டி விங். அப்போதிருந்துதான் புகழேந்திக்கும் தினகரனுக்கும் மோதல் ஆரம்பமானது.

`2020, மார்ச் மாதம் சசிகலா விடுதலை செய்யப்படுவார்’ என்று தகவல் வந்துகொண்டிருந்த நிலையில், ‘சசிகலாவை விடுதலை செய்யக் கூடாது’ என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தொழிலாளர் அணிச் செயலாளர் முத்துமாணிக்கம், கர்நாடக அரசிடம் மனு அளித்துள்ளார். தொடர்ந்து, ‘நன்னடத்தை விதிகள் சசிகலாவுக்குப் பொருந்தாது. அதனால், முன் விடுதலைக்கு வாய்ப்பு இல்லை’ என்று கர்நாடக சிறைத்துறை இயக்குநர் எம்.எஸ்.மெக்ரித் கூறியுள்ளார். இதன் பின்னணியில் புகழேந்தியின் பங்கும் இருக்கிறது என்றெல்லாம் பேசப்படுகிறது. இந்த நிலையில்தான், அக்டோபர் 25-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் சந்தித்துள்ளார் புகழேந்தி. அவரிடம் பேசினோம்.

“சின்னம்மா சிறைக்குச் செல்லும் முன் ஆட்சியை எடப்பாடி பழனிசாமியிடமும், கட்சியை தினகரனிடமும் ஒப்படைத்துவிட்டுச் சென்றார். ஆனால், தனிக்கட்சி ஆரம்பித்து தொண்டர்களை ஏமாற்றிவிட்டார் தினகரன். சிறையிலிருந்து சசிகலா வெளியே வராமல் இருக்க நான் முயற்சி செய்கிறேன் என்று சொல்கிறார்கள். இதில் துளியும் உண்மை கிடையாது. சசிகலா வெளியே வருவதற்கு, சட்டரீதியாக பல்வேறு வகையில் முயன்றவன் நான். நானே அவர் வெளியே வரத் தடையாக இருப்பேனா? அதேநேரம், சசிகலா வெளியே வருவதற்கு தினகரன் என்ன முயற்சி எடுத்தார்? அதற்காக ஒரு மனுவாவது கொடுத்திருப்பாரா? அவ்வளவு ஏன்... சசிகலாவைப் பார்க்க சிறைக்கு வரும்போதுகூட வழக்கறிஞர்களையும் அரசு அதிகாரிகளையும் சந்தித்து ஆலோசனை கேட்டதில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், சசிகலா வெளியே வருவதில் தினகரனுக்கு விருப்பமில்லை.

என்னை `24-ம் புலிகேசி’ எனக் கிண்டல் செய்திருக்கிறார் தினகரன். புலிகேசி, `மன்னன்’ என்ற தகுதியைப் பெற்றவன். அவனால் மக்களுக்கு எந்தக் கெடுதலும் இல்லை. ஆனால், தினகரனை நம்பிச் சென்றவர்கள் எல்லோரும் இன்று நடுரோட்டில் நிற்கிறார்கள். இனி யாரும் அவருடன் இருக்க மாட்டார்கள். உள்ளாட்சித் தேர்தலுக்குள் டி.டி.வி.தினகரன் காணாமல்போய்விடுவார். ஆதாயத்துக்காக நான் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தேன் என்று சிலர் அவதூறு பரப்புகிறார்கள். தினகரனிடம் இருந்தபோது என்ன ஆதாயத்தை அடைந்தேன்? நான் இழந்தவைதான் அதிகம். பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளானேன். என்மீது அவதூறு பரப்பும் தினகரன், கடந்த இடைத்தேர்தல்களில் வேட்பாளர்களைக்கூட நிறுத்தவில்லையே! என்ன காரணம், எடப்பாடியிடம் பணம் வாங்கிவிட்டாரா? தினகரன், கட்சி நடத்தவில்லை; கட்சி நிர்வாகிகள் பேசுவதை, ஐ.டி பிரிவு மூலம் ரகசியமாகப் பதிவுசெய்து கேட்டு மகிழ்கிறார்.

தினகரனுக்கு இன்னொரு முகம் உள்ளது. அவரைப் பற்றிய ரகசியங்கள் என்னிடம் இருக்கின்றன. அவற்றையெல்லாம் சொல்லக் கூடாது என நினைத்தேன். ஆனால், தேவையில்லாமல் என்னைச் சீண்டிவிட்டார்கள். சரியான நேரத்தில், அவற்றை வெளியிடுவேன். தினகரனை நம்பிச் சென்று திக்கற்று நிற்கும் தொண்டர்கள் எல்லோரையும் தற்போது ஒருங்கிணைத்துவருகிறேன். விரைவில் என் முடிவை அறிவிப்பேன்” என்றவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த விஷயத்தையும் பகிர்ந்துகொண்டார்.

“தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நானும் விமர்சித்திருக்கிறேன். ஆனால், இன்று அவர் மக்கள் விரும்பும் முதல்வராக மாறிவிட்டார். கட்சியையும் ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்துகிறார். இடைத்தேர்தலில் அ.தி.மு.க பெற்றுள்ள வெற்றியே அதற்கு சாட்சி. என் மாமனார் வீடு சேலத்தில்தான் இருக்கிறது. நான் அங்கு சென்றபோது முதலமைச்சரும் சேலத்தில்தான் இருந்தார். இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றதற்கு பாராட்டு தெரிவிப்பதற்காக அவரைச் சந்தித்தேன். இதில் வேறு எந்த நோக்கமும் இல்லை” என்றார்.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!