Published:Updated:

``அதிமுக-அமமுக இணைய வாய்ப்பேயில்லை; நயினார் கருத்துக்கு சசிகலாதான் பதில் சொல்ல வேண்டும்!" - தினகரன்

டி.டி.வி.தினகரன்

"அ.தி.மு.க நிர்வாகிகள் குறித்துப் பேசி என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. உண்மையான அம்மாவின் ஆட்சியை விரைவில் தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுப்போம்" - டி.டி.வி.தினகரன்

``அதிமுக-அமமுக இணைய வாய்ப்பேயில்லை; நயினார் கருத்துக்கு சசிகலாதான் பதில் சொல்ல வேண்டும்!" - தினகரன்

"அ.தி.மு.க நிர்வாகிகள் குறித்துப் பேசி என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. உண்மையான அம்மாவின் ஆட்சியை விரைவில் தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுப்போம்" - டி.டி.வி.தினகரன்

Published:Updated:
டி.டி.வி.தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கட்சியை வலுப்படுத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

டி.டி.வி தினகரன்
டி.டி.வி தினகரன்

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டி.டி.வி.தினகரன், ``தி.மு.க ஆட்சிக்கு வந்ததே ஒரு விபத்து. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருக்கிறது. அம்மா குடிநீர், அம்மா சிமென்ட், தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட ஏழை எளிய மக்கள் பயன்பெற்று வந்தத் திட்டங்களை இந்த அரசு மூடியிருக்கிறது. விடியல் ஆட்சி என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலின் இருண்ட தமிழ்நாடாக மாநிலத்தை மாற்றி வருகிறார். கொடநாடு கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும்‌. அ.தி.மு.க நிர்வாகிகள் குறித்துப் பேசி என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. உண்மையான அம்மாவின் ஆட்சியை விரைவில் தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுப்போம். சசிகலா பா.ஜ.க-வுக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது குறித்து சசிகலாதான் பதில் சொல்ல வேண்டும். அ.தி.மு.க, அ.ம.மு.க ஒன்றிணைய வாய்ப்பில்லை" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism