Published:Updated:

அமுதாவின் பிரதமர் அலுவலக என்ட்ரி... தமிழகத் தேர்தலை மையப்படுத்தியதா?

அமுதா ஐ.ஏ.எஸ்
அமுதா ஐ.ஏ.எஸ்

பிரதமரின் அலுவலகத்துக்கும் மத்திய அரசின் துறைகளுக்கும் பாலமாகச் செயல்படும் வகையில் ஐந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரையில் நியமிப்பார்கள். அவர்களில் ஒருவராக அமுதா இனி செயல்படுவார்.

வரும் செப்டம்பரில் பீகாரிலும், அடுத்த வருடம் ஏப்ரலில் மேற்குவங்கத்திலும் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்த மாநிலங்களின் அரசியல் அப்டேட்கள், மத்திய அரசின் திட்டங்கள் சென்று சேர்ந்த புள்ளிவிவரங்களைத் துல்லியமாக அறிந்துகொள்ள, ஓய்வுபெற்ற இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தன்னுடைய ஆலோசகர்களாக மோடி கடந்த பிப்ரவரி மாதம் நியமித்துக்கொண்டார்.

பீகார் கேடரில் பணிபுரிந்த அமர்ஜீத் சின்ஹா, மேற்குவங்க கேடரில் பணியாற்றிய பாஸ்கர் குல்பே இருவரும் அப்டேட்களை பிரதமருக்குத் துல்லியமாக அளிக்கிறார்கள்.

அந்த வகையில்தான் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை மையப்படுத்தி, அமுதா ஐ.ஏ.எஸ் பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் உலா வருகிறது.

அமுதா
அமுதா

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, தேர்தல் ஆணையம் எனப் பல துறைகளில் ரவுண்ட் வந்த அமுதா, `நேர்மையானவர்' எனப் பெயர் பெற்றவர். உணவுப் பாதுகாப்புத்துறையில் இவர் பணியாற்றியபோது, தமிழகத்தில் குட்கா விற்கும் கும்பலை ஒழித்துக்கட்டும் பணியில் தீவிரமானார். இதுவே அவருக்கு தலைவலியாக மாறியது.

ஏப்ரல் 2019-ல் மத்திய அரசுப் பணிக்கு கிளம்பிய அமுதா, உத்தரகாண்ட் மாநிலம் முசோரியிலுள்ள அதிகாரிகளுக்கான நிர்வாகப் பயிற்சி மையத்தில் (நேஷனல் அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன்) பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அப்போது, குஜராத்தைச் சேர்ந்தவரும், பிரதமர் மோடியின் அதிகாரிகள் லாபியில் உள்ளவருமான ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் அடுத்தகட்ட பயிற்சிக்காக வந்திருக்கிறார். அவர்தான் அமுதாவின் பணிச் செயல்பாடு பற்றி அறிந்து பிரதமர் அலுவலகத்துக்குத் தகவல் சொல்லியிருக்கிறார் என்கிறார்கள்.

பிரதமரின் அலுவலகத்துக்கும் மத்திய அரசின் துறைகளுக்கும் பாலமாகச் செயல்படும் வகையில் ஐந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரையில் நியமிப்பார்கள். அவர்களில் ஒருவராக அமுதா இனி செயல்படுவார்.

பிரதமர் மோடியின் அலுவலகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த டி.வி.சோமநாதன் ஐ.ஏ.எஸ் உயர் அதிகாரியாகப் பணியாற்றினார். அவருக்குப் பிறகு, பிரதமர் அலுவலகத்துக்குப் போகும் இரண்டாவது தமிழக அதிகாரி அமுதா.

'பிரதமர் மோடி அவ்வளவு எளிதில் யாரையும் நம்பமாட்டார். தனக்கு நம்பிக்கையான ரிப்போர்ட்களை அளிப்பதற்காகவே அமுதாவைத் தன் அலுவலகத்துக்குள் அவர் கொண்டுவந்தார்' என்று கூறப்படுகிறது.

- ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பா.ஜ.க., அ.தி.மு.க இரு கட்சிகளும் அவ்வப்போது உரசிக்கொள்வதும், பிறகு கட்டிப்பிடித்துக் கொள்வதுமாக நடந்த ஒரு நாடகத்தின் இறுதிக் காட்சிகள் நெருங்கிவிட்டதாகக் கூறுகிறது கமலாலயம்.

> பா.ஜ.க கூட்டணி எதற்கு? > டார்கெட் காங்கிரஸ் > மிஷன் 2024

- இவை குறித்து விரிவான உள்ளரசியல் தகவல்களை உள்ளடக்கிய ஜூனியர் விகடன் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/32OogNI > அ.தி.மு.க - பா.ஜ.க மோதல்! - க்ளைமாக்ஸை நெருங்கும் நான்காண்டு நாடகம் https://bit.ly/32OogNI

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு