Published:Updated:

எடப்பாடியின் பெரிய லாபம்... பன்னீரின் பலே தந்திரம்... அ.தி.மு.க-வில் இனி?

எடப்பாடி
எடப்பாடி

'பதவி வேட்டை' என்னும் அரசியல் சூறாவளி சுழன்றடிக்கும் பெருங்கடலில் பல சுறாக்களை வீழ்த்திய பிறகே 'தலைவரு திமிங்கிலமாக' உருவெடுத்திருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள் கட்சி வட்டாரத்தில்!

எடப்பாடிக்கு என்ன லாபம்?

* ஆயிரம் தடைகளைத் தாண்டி, முதல்வர் வேட்பாளராகத் தன்னை முன்னிறுத்திக்கொண்டதே எடப்பாடிக்கு மிகப்பெரிய லாபம்தான். அதாவது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வுக்குப் பிறகு அ.தி.மு.க-வின் 'தலைமை' எடப்பாடிதான் என்பதை அவர் நிலைநிறுத்திவிட்டார். அரசியல் - வரலாற்றுரீதியாக இது எடப்பாடிக்கு எக்காலமும் புகழ் சேர்க்கும்.

* என்னதான் கட்சிக்கு பன்னீர், ஆட்சிக்கு பழனிசாமி என்று சொல்லப்பட்டாலும்கூட இரட்டைத் தலைமை என்பதை உடைத்திருக்கிறார் எடப்பாடி. ஆட்சி அமைத்து, முதல்வராகிவிட்டால் மூன்றாவது முறையாக அ.தி.மு.க ஹாட்ரிக் அடித்த வெற்றியின் முழு அறுவடையும் எடப்பாடியையே சாரும். இதன் மூலம் கட்சி, ஆட்சி இரண்டிலும் அவர் மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும். கிட்டத்தட்ட ஜெயலலிதாவின் 'சர்வாதிகார' முகமாக மாறுவார் எடப்பாடி.

பன்னீருக்கு என்ன லாபம்?

* கட்சிக்குள் நிலவிய கொங்கு லாபியை உடைத்தது பன்னீருக்கு மிகப்பெரிய லாபம். சமூக ரீதியாக வழிகாட்டுதல்குழுவில் உறுப்பினர்களை நியமிக்கவைத்து, கட்சிக்குள் கபடி ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் பன்னீர். குழுவில் பிரதிநிதித்துவம் கிடைக்காத சமூகத்தினர் ஆக்ரோஷமடைந்திருக்கிறார்கள். பிரதிநிதித்துவம் கிடைத்தவர்களின் கண்களில் பதவி ஆசை தெரிகிறது. இருதரப்பிலும் கோபத்தையும் ஆசையையும் தூண்டிவிட்டு, அதை எடப்பாடிப் பக்கம் லாகவமாகத் திருப்பியிருக்கிறார் பன்னீர்.

எடப்பாடியின் பெரிய லாபம்... பன்னீரின் பலே தந்திரம்... அ.தி.மு.க-வில் இனி?

* மீண்டும் ஆட்சி அமைந்தால்தானே எடப்பாடி முதல்வராக முடியும்... அப்படியே ஆட்சி அமைந் தாலும், கட்சியைத் தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டால், தன்பக்கம் இருக்கும் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைவைத்து யார் முதல்வர் என்பதை அன்றைய தேதியில் பார்த்துக்கொள்ளலாம் என்பது பன்னீரின் லாபக் கணக்கு!

* ஒருவேளை ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவானால், 'நான்தான் அப்பவே சொன்னேன்... முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை முன்னிறுத்த வேண்டாம்னு' என்று சொல்லி... அதேசமயம், செங்கோட்டையன், தம்பிதுரை உள்ளிட்ட சில சீனியர்களைக் கைகாட்டி, 'அன்றைக்கே உங்களைத் தான் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த துடித்தேன்... எடப்பாடி எல்லாவற்றையும் கெடுத்துவிட்டார்' என்று மொத்தப் பழியையும் எடப்பாடி மீது தூக்கிப்போடலாம். இதன் மூலம் எடப்பாடிக்கு எதிராகப் பெரும் அதிருப்தி கோஷ்டியை உருவாக்கி, அவர்கள் அனைவரையும் தன் பின்னால் அணிதிரளவைக்கலாம் என்பது பன்னீரின் பலே தந்திரக் கணக்கு!

மேலும் பல லாபக் கணக்குகளுடன்...

> கொந்தளித்த சீனிவாசன் - கண்ணீர்விட்ட வளர்மதி!

> எடப்பாடி பிடிவாதம் - ஓரங்கட்டப்பட்ட சீனியர்கள்

> பன்னீரிடம் உருகிய வேலுமணி!

> அதிர்வைக் கிளப்பிய வருமான வரித்துறை!

இந்தச் சம்பவங்களுடன் கூடிய முழுமையான கவர்ஸ்டோரியை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/33KpaKZ > "தலைவரு... திமிங்கிலம்தானுங்கோ!" - அ.தி.மு.க முகாமின் 'தில்லாலங்கடி' கணக்கு https://bit.ly/33KpaKZ

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு