Published:Updated:

துர்கா முதல் சரஸ்வதி வரை... கோலோச்சும் கிச்சன் கேபினட்!

கிச்சன் கேபினட்
கிச்சன் கேபினட்

கோபாலபுரத்தில் கருணாநிதியோடு துரைமுருகன், ஆற்காட்டார் போன்றவர்களும் காலை டிபன் உண்ணும் பழக்கம் அப்போது இருந்தது.

* கருணாநிதி முதல்வரான பிறகு, உள்நாட்டுப் பயணம் முதல் வெளிநாட்டுப் பயணம் வரை அவரின் மனைவி தயாளு அம்மாளை அழைத்துச்செல்லும் வழக்கத்தை ஆரம்பித்தார். அப்படிச் செல்லும் இடங்களில் கட்சி நிர்வாகிகளின் அறிமுகம் தயாளு அம்மாளுக்குக் கிடைக்க, அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிலர் காரியம் சாதித்துக்கொள்ளும் வழக்கம் தி.மு.க-வில் ஆரம்பித்தது. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2qZzrSS

* முதல்வராகக் கருணாநிதி இருந்த காலத்தில் மதிய உணவிற்கு அவர் போகும் இடம் சி.ஐ.டி காலனியில் உள்ள ராஜாத்தி அம்மாள் வீடு. ஆனால், காலை முதலே அந்த வீடு பரபரப்புடன் காணப்படும். அதற்குக் காரணம், மதியம் கருணாநிதி சாப்பிட வரும்போது தங்கள் கோரிக்கையை அவரிடம் சேர்க்க வேண்டும் என்று பலரும் பவ்யமாகக் கோரிக்கை வைத்துவிட்டு இடத்தைக் காலி செய்துவிடுவார்கள் என்பதுதான்.

கிச்சன் கேபினட்
கிச்சன் கேபினட்

* கோபாலபுரத்தில் கருணாநிதியோடு துரைமுருகன், ஆற்காட்டார் போன்றவர்களும் காலை டிபன் உண்ணும் பழக்கம் அப்போது இருந்தது. அந்த நேரத்தில் கருணாநிதியிடம் சொல்லத் தயங்கும் விஷயங்களைத் தயாளு அம்மாள் மூலம் மூத்த நிர்வாகிகள் சொல்லவைத்த சுவாரஸ்ய சம்பவங்கள் பலநேரங்களில் நடந்துள்ளது. இப்போது அதே பாணியை வேறு விதத்தில் கையாளுகிறார்கள் தி.மு.க-வினர். ஸ்டாலின் மனைவி துர்காவை அண்ணி என்றே தி.மு.க நிர்வாகிகள் அழைப்பது வழக்கம். ஸ்டாலினிடம் காட்டும் பணிவைவிட சில நிர்வாகிகள் துர்காவிடம் காட்டும் பணிவு அதிகம்.

* ராமதாஸ் மனைவி சரஸ்வதி அம்மையார். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், 'சிறுநரி' என்று ராமதாஸால் விமர்சிக்கப்பட்ட தே.மு.தி.க கட்சியை, அதே பா.ம.க-வுடன் கூட்டணிக்குள் கொண்டுவந்தவர். பிரேமலதா - சரஸ்வதி இருவரின் சந்திப்புதான் அன்றைய கூட்டணிக்கு அடித்தளமாக அமைந்தது.

* தே.மு.தி.க ஆரம்பித்தபோது அமைதியாக இருந்த பிரேமலா இன்று அண்ணியார் என்ற அடைமொழியோடு கட்சியை வழிநடத்தும் அளவிற்கு வந்துள்ளார். கடந்த சில தேர்தல்களில் தே.மு.தி.க-வின் கூட்டணியை முடிவு செய்யும் சக்தியே பிரேமலதா என்கிற நிலைமையே உள்ளது. இவர் உச்சபட்ச அதிகாரம் செய்தது 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்தான்.

* இப்போது முதல்வராக இருக்கும் எடப்பாடியின் மனைவி ராதா கட்சியினர் மத்தியில் பெரிதாக அறிமுகம் இல்லை என்றாலும் அவரும் சத்தமில்லாமல் சில வேலைகளைச் செய்துவருகிறார். சில மாதங்களுக்கு முன்பு சேலத்திலிருந்து காரில் பயணம் செய்து பெங்களூரில் ஒரு வி.ஐ.பி-யைச் சந்தித்துத் திரும்பினார். சென்டிமென்டான இந்தச் சந்திப்பு எடப்பாடியின் ஆலோசனையில் சத்தமில்லாமல் நடைபெற்று முடிந்தது.

கிச்சன் கேபினட்
கிச்சன் கேபினட்

- 'ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறார்' என்று சொல்லப்படுகிறது. அரசியல் களத்திலும் பல ஆண்களின் அரசியல் நகர்வுகளுக்குப் பின்னால் பெண்கள் இருந்துள்ளார்கள். தமிழகத்தில் எல்லா அரசியல் கட்சிகளிலும் தலைவர் வீட்டுப்பெண்களின் தலையீடும் தாக்கமும் எப்போதும் உண்டு. இதுகுறித்த வெளிவராத தகவல்களுடன் கூடிய விரிவான கட்டுரையை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > அரசியல் இல்லத்தில் நிச்சயிக்கப்படுகிறது! https://cinema.vikatan.com/humoursatire/the-influence-of-family-in-politics

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |

அடுத்த கட்டுரைக்கு