Published:Updated:

"அண்ணாவும் பெரியாரும் இல்லாமல் அ.தி.மு.க இல்லை!" - செல்லூர் ராஜூ சிறப்புப் பேட்டி

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

நிச்சயம் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். திராவிட இயக்கத்துக்கு ஒரு இழிவு என்றால் விட்டுக்கொடுக்க மாட்டோம். அண்ணா, பெரியார் கொள்கை வழியில்தான் இந்த ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது

அமைச்சர் செல்லூர் ராஜூ உடனான சிறப்புப் பேட்டியிலிருந்து...

"சசிகலா சிறையிலிருந்து வெளியில் வந்தால் தமிழக அரசியலில், அதிமுகவில் என்னென்ன மாற்றங்கள் வரும்?''

"வரும்போது பார்த்துக்கொள்ளலாம். ஜெயலலிதாவின் ஆட்சியையும், கட்சியையும் முதலமைச்சர் எடப்பாடியும், துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்ஸும் சிறப்பாக வழி நடத்திவருகிறார்கள். அதனால் வேறு எதைப்பற்றியும் எங்களுக்கு சிந்தனையில்லை.''

"பெரியாரையும் அண்ணாவையும் அ.தி.மு.க மறக்க வேண்டும் என்கிறாரே எஸ்.வி.சேகர்?''

"எஸ்.வி.சேகரெல்லாம் ஒரு ஆளே இல்லை. கோமாளி. ஜெயலலிதா இருக்கும்போதே அவர்மீது நடவடிக்கை எடுத்து கட்சியை விட்டு நீக்கி வைத்திருந்தார். இப்படி ஏதாவது உளறிக் கொண்டிருப்பார். அண்ணாவும் பெரியாரும் இல்லாமல் அ.தி.மு.க இல்லை.''

"திராவிடர் கழகத்தினர், முற்போக்கு அமைப்பினரைக் கைது செய்யும் அரசு ஏன் எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜா போன்றோரைக் கைது செய்வதில்லை என்று எதிர்க்கட்சிகள் கேட்கிறார்களே?''

"நிச்சயம் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். திராவிட இயக்கத்துக்கு ஒரு இழிவு என்றால் விட்டுக்கொடுக்க மாட்டோம். அண்ணா, பெரியார் கொள்கை வழியில்தான் இந்த ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இருமொழிக் கொள்கை உட்பட பல விஷயங்களில் இந்த ஆட்சி அண்ணா, பெரியார் கொள்கைகளில் உறுதியுடன் உள்ளது.''

"திராவிட இயக்கம், பெரியார் பற்றி பி.ஜே.பி.யினர் விமர்சித்தால் அதைச் சில அமைச்சர்களே ஆதரித்துப் பேசுகிறார்களே. அ.தி.மு.க தலைமை அவர்களைக் கண்டிப்பதில்லையே. திராவிடக் கொள்கையிலிருந்து விலகிச்சென்றுவிட்டதா?''

"அ.தி.மு.க என்றைக்குமே திராவிடக் கட்சிதான். அமைச்சர்கள் அப்படிப் பேசினாலோ கட்சிக்கு துரோகம் செய்தாலோ, பத்திரிகை வாயிலாகக் கண்டிக்காவிட்டாலும் தனிப்பட்ட முறையில் அழைத்துத் தலைமையில் கண்டிப்பார்கள்.''

செல்லூர்ராஜூ
செல்லூர்ராஜூ

"தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி இனி இருக்காது. அதற்கு மாற்று வரும் என்று சிலர் சொல்கிறார்களே?''

"சும்மா சொல்வார்கள். திராவிட மண். இது பெரியார் மண். தமிழகத்தில் திராவிடக் கட்சிகள்தான் எப்போதும் ஆட்சி செய்யும் இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.''

- கொரோனா அனுபவம் முதல் அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் வரை... அமைச்சர் செல்லூர்ராஜூ அளித்த பேட்டியை ஆனந்த விகடன் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/33VcqSz > இ.பி.எஸ், ஓ.பி.எஸ்... யார் முதல்வர் வேட்பாளர்? https://bit.ly/33VcqSz

சிறப்புச் சலுகை:

விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிப்பதுடன், 15 ஆண்டுகால பொக்கிங்களிலும் வலம் வரலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு