Published:Updated:

``அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீள முடியல" - ராணுவ ஹெலிகாப்டர் விபத்தை நேரில் பார்த்த நபர்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து
News
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

``பயங்கர சத்தத்துடன் நெருப்பு மாதிரி பறந்து வந்த ஹெலிகாப்டர் பெரிய மரத்துல மோதி தலைகீழா விழுந்தது. உள்ள இருந்த ஆட்களும் தீப்பற்றி எரிஞ்சபடியே துள்ளித் துடிச்சி கீழே விழுந்தாங்க."

``அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீள முடியல" - ராணுவ ஹெலிகாப்டர் விபத்தை நேரில் பார்த்த நபர்

``பயங்கர சத்தத்துடன் நெருப்பு மாதிரி பறந்து வந்த ஹெலிகாப்டர் பெரிய மரத்துல மோதி தலைகீழா விழுந்தது. உள்ள இருந்த ஆட்களும் தீப்பற்றி எரிஞ்சபடியே துள்ளித் துடிச்சி கீழே விழுந்தாங்க."

Published:Updated:
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து
News
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

நீலகிரி மாவட்டம் குன்னூர், வெலிங்டன் பகுதியில் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க முப்படைகளின் அப்போதைய தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் காட்டேரி நஞ்சப்பா சத்திரம் பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிபின் ராவத் அவரின் மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் என ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த ஹெலிகாப்டர் விபத்து நாட்டு மக்களிடையே பேரதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

குன்னூர்  ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான போது
குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான போது

இந்த விபத்தின் போது உயிரையும் பொருட்படுத்தாது அர்ப்பணிப்புடன் மீட்பு பணியில் ஈடுபட்ட நஞ்சப்பா சத்திரம் கிராம மக்களின் சேவையை தேசமே போற்றியது. இதற்கு கைமாறாக இந்திய ராணுவம் தரப்பில் தற்போது வரை பல்வேறு வகையான உதவிகளை இந்த கிராம மக்களுக்கு செய்து வருகின்றனர்.

நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய இந்த ஹெலிகாப்டர் விபத்து நடந்த ஓராண்டு நெருங்க இருக்கிறது. இந்த விபத்து நடந்ததை நேரில் பார்த்த பாலன் நம்மிடம் பேசுகையில், "அன்னைக்கு அளவுக்கு அதிகமா பனிமூட்டம் இருந்தது. பகல்பன்னிரண்டு மணி இருக்கும். உடைஞ்ச குடிநீர் குழாயை சரிசெஞ்சிக்கிட்டு இருந்தேன். பயங்கர சத்தத்துடன் நெருப்பு மாதிரி பறந்து வந்த ஹெலிகாப்டர் பெரிய மரத்துல மோதி தலைகீழா விழுந்தது. உள்ள இருந்த ஆட்களும் தீப்பற்றி எரிஞ்சபடியே துள்ளித் துடிச்சி கீழே விழுந்தாங்க. இதைப் பார்த்ததும் எனக்கு நடுக்கம் தாங்க முடியல.

ஹெலிகாப்டர் விபத்தை நேரில் பார்த்த பாலன்
ஹெலிகாப்டர் விபத்தை நேரில் பார்த்த பாலன்

ஃபயர் சர்வீசஸ், போலீஸ் எல்லாத்துக்கும் உடனடியா போன் பண்ண சொல்லிட்டேன். ஊர் மக்கள் எல்லாரும் திரண்டு குடம், வாளிண்ணு தண்ணியை புடிச்சிக் கொண்டு வந்து ஊத்தி அணைக்க முயற்சி செஞ்சோம். அதுக்குள்ள அரசு அதிகாரிகள் ராணுவம் எல்லாரும் வந்துட்டாங்க. எதையும் எதிர்பாராம எங்களால் முடிஞ்ச உதவியை செஞ்சோம். இவ்வளவு பெரிய அதிகாரிங்கன்னு எங்களுக்கு தெரியாது. அதுக்கு கைமாறா ராணுவம் சார்பா நிறைய உதவி செய்றாங்க. பச்சை மரமே பத்தி எரிஞ்ச தீயில ராணுவ அதிகாரிகள் உடல் எரிஞ்சத நேரில் பார்த்தவன் நான். ஒரு வருஷம் ஆகப்போகுது. நேத்து நடந்த மாதிரி இருக்கு. அந்த அதிர்ச்சியில இருந்து இன்னும் மீள முடியல. 8 -ம் தேதி இந்த இடத்துல ஊர் மக்கள் சார்பில் அஞ்சலி செலுத்த இருக்கோம் " என்றார்.