Published:Updated:

``திராவிடர் நிதிக் கழகம் 'சி.இ.ஓ' அல்லவா நீங்கள்!" - பெரியாரின் உண்மைத் தொண்டன் கடிதம்

கி.வீரமணி
கி.வீரமணி

உங்கள் பிறந்தநாளுக்கு எடைக்கு எடை தங்கம், வெள்ளி என இயக்கத் தோழர்கள் அள்ளி அள்ளிக் கொடுத்தது, நீங்கள் கேட்டதற்கெல்லாம் நிதி திரட்டிக் கொடுத்தது, நீங்கள் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கா?

வணக்கம் ஆசிரியரே,

கடந்த 17-ம் தேதி, பெரியாரின் பிறந்தநாளன்று, பெரியார் வலைத் தொலைக்காட்சியில் உங்கள் பேச்சைக் கேட்டேன். அதே பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருந்தீர்கள். சலித்துப்போய்விட்டது...

நீங்கள் திராவிடர் கழகத் தலைமையேற்ற பிறகு, இந்தச் சமூகத்துக்கு என்ன செய்தீர்கள்? இல்லை, இனிமேலாவது செய்ய என்ன திட்டமிருக்கிறது? அந்தப் பேச்சில் அப்படி ஒன்றுமே இல்லை. காரணம், உங்களுக்கு அப்படியோர் எண்ணம் எப்போதுமே இருந்ததில்லை.

யோசித்துப்பாருங்கள்... இன்றைக்குத் தமிழகத்தின் மிக மூத்த அரசியல்வாதி நீங்கள். ஆனால் அரசியல் களத்தில், கருத்து பரப்பலில் பலரும் முன்னோக்கி ஓடிக்கொண்டிருக்க... நீங்களோ பல மைல் தூரத்துக்குப் பின்னால் சில கறுப்புச் சட்டைத் தோழர்கள் வெண்சாமரம் வீச, ஜம்மென்று அமர்ந்து வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.

அவ்வளவு சுகவாசி நீங்கள்!

அவ்வப்போது சம்பிரதாயமாக சில அறிக்கைகள்... ஒப்புக்குச் சில கூட்டங்கள்... 'திராவிடர் கழகம்' எனும் இயக்கம் இன்று இருக்கிறதா என்று கேட்டுச் சிரிக்கிறார்கள்! தாய்க்கழத்தின் தலைமை என்றுதான் பெயர்... தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் மாறி மாறி வால்பிடித்தது தவிர நீங்கள் சாதித்ததென்ன?

எங்கே வீரியமான போராட்டங்களை நடத்தினால் வழக்கு வந்துவிடுமோ, பெரியார் அறக்கட்டளைச் சொத்துகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ என அமைதி காக்கிறீர்கள்... அஞ்சி நடுங்குகிறீர்கள். பெரியாரின் கருத்துகளை மற்ற தோழர்கள் பரப்ப முற்பட்டாலும் வழக்குபோட்டுக் குடைச்சல் கொடுக்கிறீர்கள்!

உங்களிடம் முடங்கிக்கிடந்த பெரியாரின் பேச்சுகள், எழுத்துகளை மீட்கவே மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டியதாக இருந்ததே?

கி. வீரமணி
கி. வீரமணி
எம். விஜயகுமார்

ஒப்புக்கு `ஆர்ப்பாட்டம்' என்கிற பெயரில் ஐந்து நிமிடங்கள் கொடிபிடித்து, குரல் எழுப்புவது... அதிலும் உரக்க யாரேனும் முழக்கமிட்டால் "ரெய்டு வந்தால் யாருப்பா சமாளிக்கிறது?'' என்கிறரீதியில் அவர்களின் வாயை மூடுவீர்கள். மீறியும் தொடர்ந்தால், இயக்கத்தைவிட்டு அனுப்பிவிடுவீர்கள். அடடா... இதுவல்லவோ திராவிடர் கழகம்!? `மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு' என்கிற பெரியாரின் வாக்கியம் செவியில் அறைகிறது!

உங்கள் பிறந்தநாளுக்கு எடைக்கு எடை தங்கம், வெள்ளி என இயக்கத் தோழர்கள் அள்ளி அள்ளிக் கொடுத்தது, நீங்கள் கேட்டதற்கெல்லாம் நிதி திரட்டிக் கொடுத்தது, நீங்கள் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கா? திராவிடர் கழகத்தை 'திராவிடர் நிதிக் கழகமாக்கி, அதன் 'சி.இ.ஓ'வாக அல்லவா கோலோச்சுகிறீர்கள்!

- 'நிதி' பற்றிக் கவலைப்படாத 'சமூகநீதி' களம் காணும் பெரியாரின் உண்மைத் தொண்டனின் கடிதத்தை முழுமையாக ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3kHvRmR > உங்கள் குடும்பச் சொத்தா திராவிடர் கழகம்? https://bit.ly/3kHvRmR

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு