Published:Updated:

```கண்ணாடி பார்க்கும்போது எதுவுமே தோன்றுவதில்லையா?" - வைகோவுக்கு அன்புத் தொண்டன் கடிதம்

வைகோ
வைகோ

மறுமலர்ச்சி காணாத அண்ணனுக்கு, வணக்கம்.

ஒரு மேடையில் ஸ்டாலின் வேட்டியில் டீ கொட்டிவிட, அவர்களின் கட்சி நிர்வாகிகளையும் முந்திக்கொண்டு வேக வேகமாகப் புயலெனப் பாய்ந்து அதைத் துடைத்தீர்கள். 'புரட்சிப் புயல்' என்ற உங்கள் பட்டத்துக்கு அநியாயம் செய்தீர்கள். அரசியல் வரலாற்றின் செங்குத்துப் படிகளில் நீங்கள் சறுக்கி சாய்ந்த காட்சி அது.

'கருணாநிதி, தன் பட்டத்து இளவரசருக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கு நான் இடையூறாக இருப்பேன் என்பதற்காகக் கட்சியிலிருந்து வெளியேற்றினார்' எனத் துண்டை முறுக்கியபடி அடிக்கடி குறிப்பிடுவீர்கள். ஆனால், அதே மகனுக்கு இன்று நீங்கள் 'பணிவிடை' செய்துகொண்டிருக்கிறீர்கள். என்னதான் 'செய்தார்கள்' உங்களுக்கு... 'அந்த ரகசியம்' சொல்லுங்கள் எங்களுக்கு!

உங்களின் ஈகோவால், முன் கோபத்தால், வெற்று வீராப்புப் பேச்சுகளால் நம் கட்சித் தொண்டர்களின் உழைப்பை எப்படியெல்லாம் விழலுக்கு இறைத்த நீர்போல வீணாக்கினீர்கள்.

தி.மு.க-வுடன் சேர்ந்தால் 'அண்ணன் கலைஞர்' என உருகி, ஜெயலலிதாவை வசைபாடுவது, ஜெயலலிதாவுடன் சேர்ந்தால் 'அருமைச் சகோதரி' என உருகி, கருணாநிதியை வசைபாடுவது, 'மோடியால்தான் எல்லாம் முடியும்' என்று காங்கிரஸை விமர்சிப்பது, 'மோடியின் பாசிச ஆட்சியை விரட்ட காங்கிரஸுடன் கைகோக்க வேண்டும்'... எனக் கதறுவது என்று, உங்கள் நாக்கு ஆடிய நர்த்தனம் இருக்கிறதே... இலக்கியத்திலும் சொல்லாத இழுக்கு அது.

வைகோ
வைகோ

ஒரு சீட்டு, இரண்டு சீட்டுக்காகத் தேர்தல் காலங்களில் நீங்கள் அடித்த பல்டிகளால், நம் கட்சி பட்ட அவமானம் இருக்கிறதே... சொல்லி மாளாது. தோளில் கிடந்த துண்டுகளால் முகம் மறைத்துத் திரிந்திருக்கிறோம் பலமுறை. நீங்கள் சர்வசாதாரணமாக அடிக்கடி நிறம் மாறிவிடுவீர்கள். பாவப்பட்ட தொண்டர்கள் எங்களைப் பற்றி ஒரு நிமிடமாவது சிந்தித்ததுண்டா அண்ணா?

`வாரிசு அரசியலை எதிர்த்து உருவான கட்சி ம.தி.மு.க' என நாளெல்லாம் முழங்கிவிட்டு, உங்கள் வீட்டுப் பட்டத்து இளவரசர் துரை.வையாபுரிக்கு (தற்போது துரை.வைகோ) பட்டம் சூட்டப் பார்க்கிறீர்கள். கண்ணாடி பார்க்கும்போது உங்களுக்கு எதுவுமே தோன்றுவதில்லையா... மற்றவர்களை நோக்கி வீசிய கற்கள் திரும்பி வருவதைப் பார்க்கவில்லையா?

'சுகருக்காகத்தான் நீங்கள் நடைப்பயணம் செல்கிறீர்கள்' என்ற விமர்சனத்தையும் நம்பாமல், உங்களோடு நடந்து நடந்து...

- நம் கட்சியைப்போலவே தேய்மானம் கண்ட எலும்புகளோடு உங்கள் அன்புத் தொண்டன் எழுதிய கடிதத்தின் முழுமையான வடிவத்தை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/33Dezlh > இனி, தனியாக நமக்குக் கட்சி எதற்கு? https://bit.ly/33Dezlh

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு