Published:Updated:

``தோற்றாலும் ஜெயித்தாலும் செழிக்கிறீர்களே...'' - பாட்டாளி கடிதம்!

ராமதாஸ் - அன்புமணி
ராமதாஸ் - அன்புமணி

ஒரு ரூபாய்கூட செலுத்தாமல் படித்த ஒரு வன்னிய மாணவரைக் காட்ட முடியுமா ஐயா? கட்சிக்காக உழைத்த, வழக்கு வாங்கிய கட்சி நிர்வாகிகளின் பிள்ளைகளுக்கு ஆயிரம், ஐநூறு ரூபாய் கட்டணக் குறைப்பாவது அங்கு உண்டா?

தன்னலமற்ற (?) ஐயாக்களுக்கு...

நலமா?

உங்களுக்கென்ன நலமாகத்தான் இருப்பீர்கள்!

எங்கள் பிழைப்புதான் தெருவில் கிடக்கிறது. சரி, விஷயத்துக்கு வருகிறேன்.தோள்பட்டையில் அக்னிக்கலச டாட்டூ, வாய்நிறைய சிரிப்புடன் உங்களின் புகைப்படம் ஒன்றைச் சமீபத்தில் கண்டேன் சின்னய்யா... முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நானும் இப்படித்தான் வீராவேசமாக 'பச்சை' குத்திக்கொண்டு

இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் குதித்தேன். நம் கட்சிக்காகவும் பெரியய்யாவுக்காகவும் வழக்குகள் பல வாங்கி, இன்று அன்றாடப் பிழைப்புக்கே அல்லாடுகிறேன். ஆனால், நீங்களும் உங்கள் குடும்பமும் மட்டும் தேர்தலுக்குத் தேர்தல் தோற்றாலும் ஜெயித்தாலும் கோடீஸ்வரர்களாகச் செழிக்கிறீர்களே... அந்த செப்படி வித்தை எப்படி சின்னய்யா?

...தற்போது வன்னியர்களுக்கான 20 சதவிகித தனி இட ஒதுக்கீட்டுக்காகக் குரல் கொடுக்கும் நீங்கள், மத்திய அமைச்சரவைகளில் இருந்தபோது வாய்மூடிக் கிடந்தீர்களே... ஏன்?

ராமதாஸ் - அன்புமணி
ராமதாஸ் - அன்புமணிஅதை விடுங்கள், வன்னியர் கல்வி அறக்கட்டளை உருவாக்க முன்னின்றீர்கள். 'உலகெங்கும் வாழும் வன்னியர்களுக்கான கல்விக்கோயிலாக அது இருக்கும், ஒரு ரூபாய்கூட கொடுக்காமல் வன்னியக் குழந்தைகள் அங்கே படிக்கலாம் என்று வாய்கிழிய அளந்துவிட்டீர்கள். அப்படி, ஒரு ரூபாய்கூட செலுத்தாமல் படித்த ஒரு வன்னிய மாணவரைக் காட்ட முடியுமா ஐயா? கட்சிக்காக உழைத்த, வழக்கு வாங்கிய கட்சி நிர்வாகிகளின் பிள்ளைகளுக்கு ஆயிரம், ஐநூறு ரூபாய் கட்டணக் குறைப்பாவது அங்கு உண்டா? கேட்டால், `கட்சி வேறு; கல்லூரி வேறு' என்கிறீர்கள். ஆஹா, அற்புதமான விளக்கம் ஐயா..!

- 'மரம் வெட்டி' என்ற அவப்பெயரைத் தாங்கி நிற்கும் பாட்டாளி எழுதிய கடிதத்தின் சிறு பகுதி இது. அந்தக் கடிதத்தை முழுமையாக ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க.. https://bit.ly/3hoZNC7 > ''எங்கள் உணர்வுகளைத் தூண்டி அரசியல் செய்வதை நிறுத்துங்கள்!'' https://bit.ly/3hoZNC7

`நீ என்ன ஆளு?' - காக்கிக்குள் சாதி!

சம்பவம் 1: கடந்த மார்ச் மாதம், செங்கம் அருகே குப்பநத்தம் பேருந்து நிறுத்தத்தில், தன் சகோதரியின் தோழியிடம் பேசிய இளைஞர் கௌதம பிரியனை சாதிரீதியாக இழிவாகப் பேசி, கட்டிவைத்துத் தாக்கினார் செங்கம் காவல் நிலையத்தில் காவலராக இருக்கும் ஈஸ்வரன்.

சம்பவம் 2: 2018-ல் தேனி மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றும் கணேஷ், ரகு ஆகியோர் தங்களை இன்ஸ்பெக்டர் சீனிவாசன் சாதிரீதியாக இழிவுபடுத்தினார் என்று எஸ்.பி-யிடம் புகார் செய்தார்கள். நடவடிக்கை இல்லை. இதனால், மதுரை ஐ.ஜி அலுவலகத்துக்கு முன் தற்கொலைக்கு முயன்றார்கள். சஸ்பெண்ட் செய்யப்பட்ட இருவரும், உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

இவையெல்லாம் சில சாம்பிள் சம்பவங்களே. தமிழகத்தில் அனைத்து மாவட்ட காவல்துறையிலும் சிறிதும் பெரிதுமாகச் சாதியப் பாகுபாடுகள் இருந்தாலும், தென் மாவட்டங்களில்தான் இது அதிகம். பணி நியமனம், பணியிட மாற்றம், பதவி உயர்வு தொடங்கி அன்றாட 'டூட்டி' போடுவது வரை போட்டி போட்டுக்கொண்டு தாண்டவமாடுகிறது சாதிவெறி. துறைக்குள்ளேயே இப்படி என்றால், மக்கள் குறை தீர்ப்பதில் இவர்கள் எந்த அளவுக்குச் சாதியப் பாகுபாடு பார்ப்பார்கள் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.

``தோற்றாலும் ஜெயித்தாலும்  செழிக்கிறீர்களே...'' - பாட்டாளி கடிதம்!காவல்துறையினரால் பாதிக்கப்பட்ட வர்களுக்காக சட்ட உதவிகள் செய்துவரும் சமூகநீதி அமைப்பின் ஆறுமுகம், இது பற்றி நம்மிடம் பேசினார். "தென் மாவட்டங்களில் காவல்துறையையும், சாதியப் பாகுபாட்டையும் பிரிக்க முடியவில்லை. புகார் கொடுக்க வரும் மக்களை அணுகுவதிலிருந்து, சக ஊழியர்களிடம் நடந்துகொள்வது வரை சாதிவெறி அப்பட்டமாகத் தெரிகிறது. என்னிடம் சட்ட ஆலோசனைக்கு வருபவர்களில் பலரும் காவல்துறையினரின் சாதிரீதியான பாகுபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள்தான். தென் மாவட்டங்களின் காவல் நிலையங்களில் ஒருவர் நுழையும்போதே, அவரிடம் கேட்கப்படும் கேள்விகளில் முக்கியமானது, 'நீ என்ன ஆளு?' என்பதுதான்.

- 'பாகுபாடற்ற' என்கிற சமநிலைத் தத்துவத்தின் பொருள் வடிவமே 'சீருடை.' அதில் சாதியம் வேர்விடுவது மொத்தச் சமூகத்துக்கும் பேராபத்து. அதன் தீவிரத்தைச் சொல்லும் சிறப்புச் செய்திக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/32l4Tev > காக்கிக்குள் சாதி! - அனைவருக்கும் கிடைக்குமா நீதி? https://bit.ly/32l4Tev

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு