Published:Updated:

``எப்பிடி இருந்த நாம இப்பிடி ஆகிட்டோம்!" - முருகன் ஜி-க்கு உண்மைத் தொண்டன் கடிதம்

நமஸ்தே முருகன் ஜி...

தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் நம்ம கட்சித் தொண்டர்களுக்கு என்ன 'பேரு'ன்னு உங்களுக்கே நல்லாத் தெரியும். அதையெல்லாம் பொருட்படுத்தாமத்தான் உங்க தலைமையில நாங்க கட்சிப்பணி செஞ்சுக்கிட்டு வர்றோம். காரணம், தமிழ்நாட்டுல 'தாமரை ராஜ்ஜியத்தை' உருவாக்க ராஜமாதா... அதாவது நம்ம தமிழிசை அக்கா, பாகு'பலி'யா உங்களைத்தானே ஜி விட்டுட்டுப் போயிருக்காங்க!

அக்கா, கட்சித் தலைவரா இருந்து கவர்னர் ஆனாங்க. ஆனா, நீங்க... தெரு செவுத்து சண்டைக்கே கவர்னரைப் பார்த்து அதிர்ச்சி கொடுக்குறீங்க... என்னத்தச் சொல்றது!

ஒரு நாள்... ஊரே உட்கார்ந்து டி.வி பார்த்துக்கிட்டிருந்தோம். ஒரு விவாத நிகழ்ச்சி அது... `அ.தி.மு.க தொண்டர்கள் நினைச்சா நீங்கல்லாம் தெருவுல நடமாட முடியாது'னு ஒரு மிரட்டல்!

யாரைப் பார்த்துனு கேட்கிறீங்களா... நம்ம கட்சிக்காரரைப் பார்த்துதான். நரம்பெல்லாம் புடைக்க... 'விடியட்டும் நம்ம தலைவர் குடுக்குற பதிலடியில எடப்பாடியே சமாதானம் சொல்வார்'னு காத்திருந்தேன். உங்ககிட்ட இருந்து அறிக்கையையும் காணோம், ஆதங்கத்தையும் காணோம்... டெல்லிக்கு போன் போட்டு நட்டாஜி கிட்ட 'எங்களைக் கிள்றாங்க சார்'னு சொன்னீங்களாம். எப்பிடி இருந்த நாம இப்பிடி ஆகிட்டோம்!

முருகன்
முருகன்

நீங்க வக்கீலுக்குப் படிச்சிருந்தாலும், ஹைகோர்ட்னா சட்டுனு நினைவுக்கு வர்றது ஹெச்.ராஜாதான். அப்பேர்பட்ட ஆசாமியைப் பக்கத்துலவெச்சுக்கிட்டு, முதல் பத்திரிகையாளர் சந்திப்புல `நான் நேர்மறையான அரசியலை முன்னெடுப்பேன்'னு பேட்டி கொடுத்தீங்க.

ஹெச்.ராஜா, ராதாரவி, காயத்ரி ரகுராம், கல்யாணராமன்னு... தமிழ்நாட்டுல வெறுப்பரசியலோட ஒட்டுமொத்த குத்தகைக்காரர்களும் நம்ம கட்சியிலதானே ஜி இருக்காங்க. பிறகு எப்பிடி நேர்மறை அரசியல்?

சரி, நம்புறீங்க... பண்ணுங்க... பார்ப்போம்!

ஆமா ஜி... எனக்கு ஒரு டவுட்டு... செப்டம்பர் 17-ம் தேதி, நம்ம தலைவர் மோடிஜிக்குத்தானே பிறந்தநாள்? `ஊர்ல கல்யாணம்... மார்ல சந்தனம்'கிற ரேஞ்சுக்கு நீங்க எதுக்கு ஜி சாரட் வண்டியில வலம் வந்தீங்க? செம காமெடி ஜி உங்களோட.

மோடிஜி பிறந்தநாளுக்கு பலூன் விடறேன்னு பறக்கவிட்டு, அதுவொரு பக்கம் வெடிச்சு, ஆளாளுக்குத் தெறிச்சு ஓடிப்போய் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆனாங்களே... ஏன் ஜி, கறுப்போ... காவியோ... நமக்கும் பலூனுக்கும்தான் எப்பவுமே ஆகாதே ஜி. எதுக்கு இந்த வீண் வேலை?!

...உங்களுக்கு ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன் ஜி. மனித உரிமைகள் பத்தித்தான் நீங்க பிஹெச்.டி முடிச்சிருக்கீங்கனு பேசிக்கிறாங்க... நம்ம கட்சிக்குள்ளயாவது... அதுவும் உங்க உரிமைகளையாவது காப்பாத்திக்கப் பாருங்க ஜி.

- உங்க தலைமையிலயாவது நோட்டாவுக்கு டாட்டா காட்டிவிட மாட்டோமா என்கிற ஏக்கத்தில் உண்மைத் தொண்டன் எழுதிய கடிதத்தின் முழுமையான வடிவத்தை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க.... https://bit.ly/33r1qM8 > கட்சி நடத்துறோமா... நாடக கம்பெனி நடத்துறோமா? https://bit.ly/33r1qM8

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு