Published:Updated:

`ஆனாலும், நீங்க ரொம்ப பண்றீங்க!" - உதய் தம்பிக்கு, உண்மைத் தொண்டன் கடிதம்

குறுக்கு வழியில் பொறுப்புக்கு வந்த உதய் தம்பிக்கு,

வணக்கம்.

கட்சிப் பணிகளில் 'தீவிரமா' இருப்பீங்க. ஏன்னா, நீங்க பிறக்கும்போதே அரசியல்வாதியா பிறந்தவரு. அப்படி யார் சொன்னானு கேக்குறீங்களா? நீங்களேதான் சொல்லிக்கிறீங்க!

ஆனாலும், இந்தக் கடிதத்தைக் கொஞ்சம் பொறுமையா உட்கார்ந்து படிச்சிருங்க. ஏன்னா, நான் உங்க தாத்தா காலத்து ஆளு. சொல்றதுல உண்மை இருக்கும். நிறைய பாத்தாச்சு தம்பி... ஆனாலும், நீங்க ரொம்ப பண்றீங்க!

கட்சிப் பொறுப்புக்கு வந்ததுதான் குறுக்குவழின்னு பார்த்தா, கட்சி நிகழ்ச்சிகளுக்கு வர்றதும் அப்படித்தான் இருக்கு. உங்க அப்பா ஸ்டாலின் இப்படி ஒருமுறைகூட, உங்க தாத்தாவோட வந்து இறங்கினது இல்ல. ஆனா, நீங்க நயன்தாரா, ஹன்சிகா கூடல்லாம் ஒண்ணா நடிச்சுட்டதால அந்தத் தகுதி வந்துட்டதா நினைச்சுக்கிட்டீங்க.

குழந்தையா நீங்க கைய கால அசைச்சதெல்லாம் கட்சிப்பணிக் கணக்குல சேராது... குச்சி மிட்டாய்க்கும் குருவி ரொட்டிக்கும் நீங்க அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுனதெல்லாம் கட்சி ஆர்ப்பாட்டக் கணக்குல வராது!

ஆரம்பத்துல அரசியலுக்கே வரமாட்டேன்னு நீங்க சத்தியம் செய்யாத குறையாகச் சொன்னீங்க. பிறகு நைஸா வந்தீங்க... அதக்கூடக் காமெடினு பொறுத்துக்கிட்டோம். ஆனா, சேர்ந்த கொஞ்ச நாள்லயே, உங்க அடிப்பொடிகள் வெச்சு, ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்கிட்டயும் "உதயா இளைஞரணிச் செயலாளரா வர ஆசைப்படுறோம்'னு மிரட்டி எழுதி வாங்கினீங்க...

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

பொறுப்புக்கு வந்ததும், 'சின்னவர்கிட்ட பேசுங்க... சின்னவர்கிட்ட பேசுங்க'னு உங்க அடிபொடிகள வெச்சு மூத்த நிர்வாகிகளை டார்ச்சர் பண்ணீங்க... சினிமாவுல நீங்க பண்ணதுதான் காமெடி... கட்சிக்குள்ள வந்து நீங்க பண்ணதெல்லாம் பயங்கர வில்லத்தனம் தம்பி!

'கட்சியில கடுமையா உழைச்சவங்க பல பேரு இருக்க, உதய்க்கு எப்படிப் பொறுப்பு கொடுக்கலாம்?'னு நியாயமான குரல் எழுந்தப்ப, நீங்க நடிச்ச படங்களைப் போட்டுக்காட்டி, 'பாருங்க கட்சிக்கு எப்படி உழைச்சிருக்காரு சின்னவரு'னு அநியாயமா சொல்ல வெச்சீங்க.

அதுகூட பரவால்ல, நாடாளுமன்றத் தேர்தல்ல நீங்க பிராசரத்துக்கு வந்ததுதான் வெற்றிக்குக் காரணம்னு ஒரு கதை கட்டுனீங்க பாருங்க. அப்போதான் தம்பி எனக்கு முதல் அட்டாக் வந்தது...

- குறுக்கு வழியில் பொறுப்புக்கு வராத தி.மு.க-வின் உண்மைத் தொண்டன் எழுதிய கடிதத்தை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/2E4G8tE > 'செத்த அனத்தாம இருங்க தம்பி!' https://bit.ly/2E4G8tE

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு